தமிழகத்தில் நீலகிரி, கோவை, கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மழை பெய்யக்கூடும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப் பட்டிருப்பதாவது:
மிதமான மழை (Moderate rain)
நீலகிரி, கோவை மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
20.08.21 (நாளை)
தமிழகம், புதுவைக் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை (Chennai)
சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு நகரின் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
வெப்பநிலை (Temperature)
வெப்பநிலை அதிகபட்சமாக 34 டிகிரி செல்சியஸையும், குறைந்தபட்சமாக 26 டிகிரி செல்சியஸையும் ஒட்டியே இருக்கும்.
மழை பதிவு (Rainfall)
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக புதுக்கோட்டையில் 9 சென்டிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை (Warning for fishermen)
அரபிக்கடல் பகுதிகள்
09.08.21 முதல் 20.08.21வரை
தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
எனவே மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...