மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 23 January, 2023 6:09 PM IST

Ration Card: புதிய ரேஷன் கார்டினை இனி ஆன்லைனிலேயே பெறலாம், நாகையில் சம்பா நெல் அறுவடை 159 கொள்முதல் நிலையங்கள் திறப்பு, விவசாயிகளுக்கான FPO Call Center நாளை கிரிஷி ஜாக்ரனில் தொடங்கப்படுகிறது, 2 லட்சம் வரை லாபம் தரும் பால்பண்ணைத் தொழில், குறிஞ்சிப்பாடியில் வேளாண்மை துணை விரிவாக்க நிலையம் திறப்பு முதலான வேளாண் தகவல்களை இப்பதிவு வழங்குகிறது.

மேலும் படிக்க: PM Kisan 13வது தவணை|மாடு வளர்ப்பு பயிற்சி|100 யூனிட் மின்சாரம்|புதிய மின் கட்டணம்|தங்கத்தின் விலை

1. Ration Card: புதிய ரேஷன் கார்டினை இனி ஆன்லைனிலேயே பெறலாம்!

ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தின் கீழ் ரேஷன் கார்டை எளிதாகப் பெறலாம். மேலும் இதற்கு ஆன்லைனிலேயே விண்ணப்பிக்கலாம். www.tnpds.gov.in என்ற இணைய தளத்தில் ஆதார் அட்டை, மின் ரசீது, பான் கார்டு, புகைப்படம், வருமான சான்றிதல், வங்கி புத்தகம், சாதி சான்றிதழ் ஆகியவற்றைக் கொண்டு விண்ணப்பிக்கலாம். அதோடு, புதிதாக ஒரு குடும்ப உறுப்பினரைச் சேர்க்கவும், நீக்கவும் முடியும் எனக் கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: Ration Card:ரேஷன் கடைகளில் சிறப்பு வசதி|புதிய மின் கட்டணம்|Aavin பால் விலை உயர்வு|முட்டை விலை சரிவு

2. நாகையில் சம்பா நெ அறுவடை 159 கொள்முதல் நிலையங்கள் திறப்பு!

நாகப்பட்டினத்தில் சம்பா அறுவடை பணி முழுவீச்சில் நடைபெற்று வருவதால், நெல் கொள்முதல் சீராக நடைபெறவேண்டி 159 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை அரசு திறந்துள்ளது. சுமார் 1 லட்சத்து 62 ஆயிரம் ஏக்கரில் சம்பா சாகுபடி நடந்து வருவதால் அரசு இந்த நடவடிக்கையினை எடுத்துள்ளது. விவசாயிகளின் தேவைக்கு ஏற்ப கூடுதல் கொள்முதல் நிலைங்கள் திறக்கப்படும் என்று நுகர்பொருள் வாணிபக் கழக அலுவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க: PM Kisan 13வது தவணை|ஆட்டோ வாங்க மானியம்|நெல் விவசாயிகளுக்கு நற்செய்தி|TNEB:100 யூனிட் இலவச மின்சாரம்

3. விவசாயிகளுக்கான FPO Call Center நாளை கிரிஷி ஜாக்ரனில் தொடங்கப்படுகிறது!

விவசாயிகளின் சந்தேகங்களையும், அதர்கான தீர்வுகளையும் வழங்கும் வகையிலான FPO Call Center நாளை தொடங்கப்பட உள்ளது. விவசாயத்திற்கு என முதன் முதலில் தொடங்கப்படும் FPO Call Center இதுவே ஆகும். இதனை நாளை மாபெறும் விவசாயப் பத்திரிக்கையான கிரிஷி ஜாக்ரன் அலுவலகத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் இணை இயக்குநர் டாக்டர் விஜய லக்‌ஷிமி நந்தேந்லா தொடங்கி வைக்கிறார்.

Ration Card:ரேஷன் கடைகளில் சிறப்பு வசதி|புதிய மின் கட்டணம்|Aavin பால் விலை உயர்வு|முட்டை விலை சரிவு

4. 2 லட்சம் வரை லாபம் தரும் பால்பண்ணைத் தொழில்!

பால் பண்ணை வைத்து பராமறித்தால் 2 லட்சம் வரை லாபம் பெறலாம் என்கிறார், பால் பண்ணை உரிமையாளர் ராஜா. இவர் மதுரை ஆவின் நகர் பகுதியில் 35 ஆண்டுகளாகப் பால்பண்ணை வைத்துள்ளார். இவர் கூறுகையில், பால் பண்ணையுடன் சொந்தமாக நிலம் வைத்திருந்தால் கூடுதலாக லாபம் பெற முடியும் என்கிறார். தற்பொழுது இவர் பால் பண்ணை 40 மாடுகள் மற்றும் 20 ஆடுகளுடன் செயல்பட்டு வருகின்றது.

மேலும் படிக்க: PM Kisan 13வது தவணை|மாடு வளர்ப்பு பயிற்சி|100 யூனிட் மின்சாரம்|புதிய மின் கட்டணம்|தங்கத்தின் விலை

5. குறிஞ்சிப்பாடியில் வேளாண்மை துணை விரிவாக்க நிலையம் திறப்பு!

குறிஞ்சிப்பாடி சட்டமன்றத் தொகுதியில் குள்ளஞ்சாவடியில் ரூ.38 லட்சம் மதிப்பிலான வேளாண்மை துணை விரிவாக்க நிலையம் திறக்கப்பட்டுள்ளது. இதனை தமிழகத்தின் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் திறந்துவைத்தார். அதோடு, பூண்டியாங்குப்பம் கிராமத்தில் 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியினையும் திறந்து வைத்துள்ளார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர், வேளாணமை உதவி இயக்குநர் முதலானோர் கலந்துகொண்டுள்ளனர். இந்நிகழ்வில் பொது மக்களுக்கு மரக்கன்றுகளும் வழங்கப்பட்டன.

6. இ-சந்தைக்குத் தமிழக அரசிடமிருந்து நிதிஉதவி!

விவசாயத் தொழில் நூட்ப நிறுவனமான இ-சந்தைக்குத் தமிழக அரசு நிதி அளிக்க இருக்கிறது எனத் தகவல் வெளியாகியுள்ளது. இது விவசாய விலை பொருட்களின் விலையினை முன்கூட்டியே கணித்தல், ஆலோசனை வழங்குதல் என வேளாண் சார்ந்த முக்கிய பணிகளைச் செய்து வருகிறது. தற்பொழுது இ-சந்தை திருவாரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் செயல்பட்டு வருகிறது.

7. திருமணமானவர்களுக்கு மாதம் ரூ.18,500 வழங்கும் திட்டம்!

மத்திய அரசால் அரசால் பிரதான் மந்திரி வய வந்தனா யோஜனா திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மார்ச் 31, 2023 வரை திருமணமான தம்பதிகள் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்து மாதந்தோறும் ஓய்வூதியத்தை பெற்று பயனடைந்து கொள்ளலாம் எனக் கூறப்படுகிறது. கணவன்-மனைவி இருவரும் 60 வயதிற்குப் பிறகு திட்டத்தினைப் பயன்படுத்திக் கொள்ளலாம் எனக் கூறப்படுகிறது.

Ration Card:ரேஷன் கடைகளில் சிறப்பு வசதி|புதிய மின் கட்டணம்|Aavin பால் விலை உயர்வு|முட்டை விலை சரிவு

8. சிறுபான்மையினருக்கு 6% வட்டி விகிதத்தில் கடன் வழங்கும் திட்டம்!

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் செயல்படுத்தப்படும் கடன் திட்டங்களான தனி நபர் கடன், சுய உதவி குழுக்களுக்கான சிறு தொழில் கடன், கைவினை கலைஞர்களுக்கு கடன் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. இவைகளின் கீழ் தென்காசி மாவட்டத்தில் வசிக்கும் கிறித்துவ, இஸ்லாமிய, சீக்கிய, புத்த, பார்சி மற்றும் ஜெயின் ஆகிய சிறுபான்மையினர்கள் கடன் விண்ணப்பங்களை பெற்று அதனை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

9. தமிழகத்தில் அரசு சார்பில் கலை நிகழ்ச்சி விழா நடத்த அறிவிப்பு!

விருதுநகர் மாவட்டத்தில் வருகின்ற 24-ஆம் தேதி முதல் 02-ஆம் தேதி வரையில் பொது மக்களை மகிழ்விக்கும் வகையில், ”ஓயா உழைப்பின் ஓராண்டு கடைக்கோடி தமிழரின் கனவுகளைத் தாங்கி” எனும் தலைப்பில் தமிழக அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்கள் குறித்த புகைப்படக் கண்காட்சிகள் மற்றும் விழிப்புணர்வு உள்ளிட்ட பல்வேறு கலைநிகழ்ச்சிகளை அரசு சார்பில் நிகழ்வுகள் நடத்தப்பட இருப்பதாக மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

10. பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி வேண்டுகோள்!

பெட்ரோல், டீசல் விலையினைக் குறைக்க வேண்டுமெனப் பொதுத்துறை நிறுவனங்களை மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி வேண்டுகோள் விடுத்துள்ளார். சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையினை குறைக்க வேண்டும் என அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

11. இன்றைய காய்கறி விலை நிலவரம்

பெரிய வெங்காயம் -ரூ.30
கத்திரிக்காய் -ரூ.35
தக்காளி-ரூ.40
உருளைக்கிழங்கு -ரூ.35
சிறிய வெங்காயம் -ரூ.80
வெண்டைக்காய் -ரூ.80
பச்சை மிளகாய் -ரூ.30
தேங்காய் -ரூ.25
கேரட் -ரூ.45
காலிபிளவர் -ரூ.25

12. இன்றைய வானிலை தகவல்கள்

கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகம் மற்றும் புதுவையில் 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வருகின்ற இரு நாட்களுக்குத் தமிழக கடலோர மாவட்டங்களை ஒட்டிய புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் எனக் கூறப்படுகிறது.

மேலும் படிக்க

தமிழகத்தில் அரசு சார்பில் கலை நிகழ்ச்சி விழா நடத்த அறிவிப்பு!

Weather: தமிழ்நாட்டில் மீண்டும் மழை! வானிலை ஆய்வு மையம் தகவல்!!

English Summary: Ration Card: New Ration Card|Paddy Procurement Centers|FPO Call Center|Dairy Industry|E-Sandhai
Published on: 23 January 2023, 03:57 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now