Farm Info

Sunday, 27 September 2020 07:24 AM , by: Elavarse Sivakumar

Credit : Freepic

புதுக்கோட்டை மாவட்டத்தில், வேம்பு மரப்பயிர்களை நடவு செய்யும் விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.18,000 வீதம் மானியம் வழங்கப்படும் என வேளாண் துறை அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக வேளாண்மை இணை இயக்குநர் இராம.சிவகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :

எண்ணெய் வித்து மரப்பயிர் சாகுபடி திட்டத்தின் கீழ் புதுக்கோட்டை மாவட்டத்தில் 2020-21ம் ஆண்டு வேம்பு மற்றும் புங்கன் மரப்பயிர்கள் நடவு செய்யும் விவசாயிகளுக்கு ரூ.4.23 இலட்சம் மானியம் வழங்கப்பட உள்ளது.

வேம்பு

(Neem)

இத்திட்டத்தின் கீழ் 5மீ x 5 மீ இடைவெளியில் 400 வேப்பங்கன்றுகள் நடவு செய்வதற்கு ரூ.17000/மும்- ஊடுபயிராக உளுந்து சாகுபடி செய்ய ரூ.1000/ம் வழங்கப்படும். அதாவது ஆக மொத்தம் ஒரு ஹெக்டேருக்கு கூடுதல் மானியம் ரூ.18000/- என விவசாயியின் வங்கி கணக்கில் பின்னேற்பு மானியமாக வழங்கப்படும்.

Credit : Webdunia Tamil

புங்கன் (Pongame oiltree)

அதே போல ஒரு ஹெக்டேரில் 5மீ x 4மீ இடைவெளியில் 500 புங்கன் கன்றுகள் நடவு செய்தால் ஊடுபயிர் உளுந்து சாகுபடி உள்பட ரூ.21000/- மானியம் வழங்கப்படும்.
இதில், குழி எடுத்தல், உழவு செய்தல், நல்ல செழிப்பான ஒரு வருட கன்றுகள் வாங்கி நடவு , ஊடுபயிர் சாகுபடி செய்தல் போன்ற அனைத்து பணிகளையும் விவசாயி சொந்த செலவின் செய்து களப்பணியாளரது பரிந்துரையுடன் மானியம் கோருதல் வேண்டும்.

இதைத்தவிர இந்த திட்டத்தின் கீழ் கடந்த 3 ஆண்டுகளில் (2017-18, 2018-19 மற்றும் 2019-20ம் ஆண்டுகளில் வேம்பு மற்றும் புங்கன் நடவு செய்துள்ள விவசாயிகளுக்கு பராமரிப்பு செலவு ரூ.2000/-ம் மற்றும் ஊடுபயிர் உளுந்து சாகுபடிக்கு ரூ.1000/- ஆக மொத்தம் ஹெக்டேருக்கு ரூ.3000/-மும் பின்னேற்பு மானியமாக அந்தந்த விவசாயிகளது வங்கி கணக்கில் வழங்கப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் கீழ் பயன்பெற சம்மந்தப்பட்ட உதவி வேளாண்மை அலுவலர் பரிந்துரையுடன் வட்டார வேளாண்மை உதவி இயக்குநரை அணுகி பயன் பெறலாம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க...

காய்கறி சாகுபடிக்கு ஊக்கத்தொகை - ராமநாதபுரம் விவசாயிகளுக்கு அழைப்பு!

100% மானியத்தில் அசில் ரக கோழிகள் -விண்ணப்பிக்க 28ம் தேதி வரை கெடு!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)