1. செய்திகள்

100% மானியத்தில் அசில் ரக கோழிகள் -விண்ணப்பிக்க 28ம் தேதி வரை கெடு!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Achilles Poultry Subsidy Scheme - Trichy District Deadline till 28th to apply

Credit: You tube

திருச்சி மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத் துறை மூலம், 100 சதவீத மானியத்தில், அதாவத விலையில்லா அசில் இன நாட்டுக் கோழிகளை ஊராட்சிகளைச் சேர்ந்த 5,600 ஏழைப்பெண்களுக்கு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

  • ஒரு ஊராட்சி ஒன்றியத்திற்கு 400 பயனாளிகள் வீதம் 14 ஊராட்சி ஒன்றியத்திற்கு 5600 பெண்களுக்கு வழங்கப்படுகிறது.

  • இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் பயனாளிகள் கிராமப்புற ஏழைப் பெண்களாகவும், கிராம ஊராட்சியில் நிரந்தரமாக வசிப்பவர்களாகவும் இருத்தல் வேண்டும்.

  •  பயன்பெற விரும்புவோர்,  முந்தைய நிதியாண்டுகளில் வழங்கப்பட்ட விலையில்லா கறவை பசுக்கள், வெள்ளாடுகள், செம்மறி ஆடுகள் வழங்கும் மற்றும் கோழிகள் வழங்கும் திட்டத்தில் பயனடைந்த பயனாளிகளாக இருத்தல் கூடாது.

  • விதவைகள், ஆதரவற்றோர், மற்றும் மாற்றுத் திறனாளி பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

  • கிராம ஊராட்சியைச் சேர்ந்த பயனாளிகளில் 30 சதவீதத்தினர், கட்டாயமாக ஆதிதிராவிடர்,பழங்குடியினர் இனத்தை சோர்ந்தவர்களாகத் தேர்வு செய்யப்படுவர்.

  • தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

  • இத்தகுதிகளை கொண்ட பயனாளிகள் தங்களது பகுதியில் உள்ள கால்நடை மருந்தகத்தின், கால்நடை உதவி மருத்துவரை அணுகி 28.09.2020-க்குள் விண்ணப்பிக்கலாம்.

  • இவ்வாறு அதில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் படிக்க...

விவசாயிகளுக்கு உர மானியமாக ரூ.5,000 வழங்கலாம் - CACP பரிந்துரை!!

தட்கல் விவசாய மின் இணைப்பு - வரும் 21 முதல் அக்.31ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்!

English Summary: Achilles Poultry Subsidy Scheme - Trichy District Deadline till 28th to apply

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.