விவசாயிகளுக்கான மழை நிவாரணம் அவர்களது வங்கிக்கணக்கில் இன்று முதல் செலுத்தப்பட உள்ளது. கடந்த ஆண்டு பெய்த கனமழையால் புதுவையில், சாகுபடி பயிர்கள் நாசமாயின. தங்களுக்கு இழப்பீடு வழங்குமாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
மழை நிவாரணம்
இதையடுத்து, வடகிழக்கு பருவமழையின்போது தொடர் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் சாகுபடி செய்த பயிர்களுக்கான நிவாரணத் தொகை ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் வீதம் மாநில நிதியிலிருந்து வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் ரங்கசாமி அறிவித்திருந்தார்.
அதன்படி புதுச்சேரி, காரைக்கால் மற்றும் ஏனாம் பகுதிகளை சேர்ந்த விவசாயிகளுக்கு நிவாரணத் தொகை ரூ.7 கோடியே 10 லட்சத்து 57 ஆயிரத்து 600 வழங்கிட அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.
புதுச்சேரி பகுதியை சேர்ந்த சிறுகுறு மற்றும் பெருவிவசாயிகளான 5 ஆயிரத்து 680 பொதுப்பிரிவினருக்கான 2 ஆயிரத்து 830 ஹெக்டேருக்கு ரூ.5 கோடியே 66 லட்சத்து 12 ஆயிரத்து 200 ரூபாயும் வழங்கப்படுகிறது. இதேபோல், 374 அட்டவணை பிரிவு விவசாயிகளுக்கு 154.95 ஹெக்டேருக்கு ரூ.30 லட்சத்து 99 ஆயிரம் என மொத்தம் ரூ.5 கோடியே 97 லட்சத்து 11 ஆயிரத்து 200-க்கான காசோலையை இந்தியன் வங்கி அதிகாரிகளிடம் சட்டசபை வளாகத்தில் வைத்து முதல்-அமைச்சர் ரங்கசாமி வழங்கினார்.
அப்போது அமைச்சர் தேனீ.ஜெயக்குமார், கூடுதல் வேளாண் இயக்குனர் வசந்தகுமார், துணை இயக்குனர்கள் சிவசங்கர முருகன், சிவசுப்ரமணியன், வேளாண் அலுவலர் தேன்மொழி ஆகியோர் உடனிருந்தனர்.
இந்த நிவாரணத் தொகையானது விவசாயிகளின் வங்கிக்கணக்கில் மார்ச் 8ம் தேதியான செவ்வாய்க்கிழமை முதல் செலுத்தப்படுகிறது.
மேலும் படிக்க...
நஞ்சை உளுந்து சாகுபடி -தஞ்சையில் 20 ஆயிரம் டன் உளுந்து உற்பத்திக்கு இலக்கு!