1. வாழ்வும் நலமும்

பசியின்மையைப் போக்கும் கற்றாழை மோர்!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Cactus whey to quench appetite!

நீர் மோர் கேள்விப்பட்டிருக்கிறோம். அதென்னக் கற்றாழை மோர் எனக் கேட்கலாம்.பொதுவாகக் கற்றாழை உடலுக்கு குளிர்ச்சி அளிப்பதோடு, உடல் சோர்வு, உடல் உஷ்ணம், மலச்சிக்கல், சிறுநீர் பிரச்சினைகள், பசியின்மை, அல்சர் போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு தருகிறது. ஆற்றங்கரைகளிலும், சதுப்பு நிலங்களிலும், தோட்டங்களிலும் அதிகமாக காணப்படும் ஒரு தாவரமாக கற்றாழை உள்ளது. இதில் கால்சியம், குளோரின், சோடியம், பொட்டாசியம், மாங்கனீசு, வைட்டமின் ஏ, வைட்டமின் பி1, வைட்டமின் பி2, பாலிசாக்கரைடுகள் மற்றும் யூரிக் அமிலம் உள்ளிட்ட சத்துக்கள் நிரம்பியுள்ளன.


சருமத்தின் ஈரத்தன்மையை (Moisture) பாதுகாக்கவும், தோல் தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு அளிக்கவும் இவை பயன்படுத்தப்படுகிறது. மேலும், கற்றாழையை பொலிவான சருமம் பெறவும், அடர்த்தியான கூந்தலுக்கும் உபயோகிக்கலாம். கற்றாழை தீக்காயங்களுக்கு சிகிச்சை அளிக்க வல்லது. வெட்டுக்கள், சிராய்ப்புக்களை குணப்படுத்தவும், சருமத்தை நீரேற்றமாக வைத்திருக்கவும் உதவுகிறது.

அழகுக்கு மட்டுமல்ல, ஆரோக்கியத்திற்கும் கற்றாழ மிகச் சிறந்தது. இவை உடலுக்கு குளிர்ச்சி அளிப்பதோடு உடல் சோர்வு, உடல் உஷ்ணம், மலச்சிக்கல், சிறுநீர் பிரச்சினைகள், பசியின்மை, அல்சர் போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு தருகிறது.கற்றாழையில் இருந்து எடுக்கப்படும் சாறு பெண்களுக்கு ஏற்படும் கருப்பைக் கோளாறுகள் முதலான சிக்கல்களுக்கு சிறந்த நிவாரணியாக பயன்படுத்தப்படுகிறது. இப்படி ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை தன்னகத்தே உள்ளடக்கியுள்ள கற்றாழையில் மோர் சேர்த்து, உடலுக்கு குளிர்ச்சியூட்டும் சுவையான மோர் தயாரிக்கலாம்.

தேவையான பொருட்கள் 

புளிக்காத தயிர்       – அரை கப்
கற்றாழை                – 4 சிறு துண்டுகள்
இஞ்சி                       – சிறு துண்டு
பெருங்காய தூள்      – சிறிதளவு
கொத்தமல்லி இலை – தேவையான அளவு
உப்பு                        – தேவையான அளவு.

செய்முறை

  • முதலில் கொத்தமல்லி தழைகளை நன்றாக பொடியாக நறுக்கி கொள்ளவும்.

  • பிறகு, கற்றாழையின் தோல் பகுதியை நீக்கி விட்டு சதை பகுதியை மட்டும் எடுத்து நீரில் இட்டு, குறைந்தது பத்து முறை கழுவிக்கொள்ளவும்.

  • நாம் முறையாகக் கழுவவில்லை என்றால் அவை கசக்கும்.

  • பின்னர், அத்துடன் இஞ்சித்துண்டு சேர்த்து நன்கு அரைத்துக்கொள்ளவும்.

  • தொடர்ந்து அதே மிக்சியில் தயிர், பெருங்காய தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து அரைத்து கொள்ளவும்.

  • பிறகு அவற்றுடன் இரண்டு டம்ளர் தண்ணீர் சேர்த்து ஒரு சுற்று சுற்றி நிறுத்தவும்.

  • இப்படி நன்றாக அரைத்தவற்றை டம்ளரில் ஊற்றி அதில் கொத்துமல்லித் தழை சேர்க்கவும்.

  • அற்புதமான கற்றாழை மோர் தயார்.

மேலும் படிக்க...

புதியக் காற்றழுத்த தாழ்வு மண்டலம்- சென்னைக்கு ஆபத்து!

விவசாயிகள் புதிய மின் மோட்டார் வாங்க ரூ.10,000 மானியம்!

English Summary: Cactus whey to quench appetite! Published on: 03 March 2022, 09:21 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.