கிசான் கிரெடிட் கார்டில் விவசாயிகளுக்கு வட்டியே இல்லாமல் ரூ.3 லட்சம் கடன் கிடைக்கும் என்ற செய்தி பரவிக் கொண்டிருக்கிறது. நாடு முழுவதும் பரவிவரும் இந்தத் தகவல் காரணமாக, விவசாயிகள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
கிசான் கிரெடிட் கார்டு (KCC)
விவசாயிகள் அவசர தேவைக்காகக் கடன் பெறவும், வேளாண் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ளவும், வங்கிகள் சார்பில் கிசான் கிரெடிட் கார்டு வழங்கும் திட்டம் அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதன்படி, ஆயிரக்கணக்கான விவசாயிகள் குறைந்த வட்டியில் கடன் பெற்றுப் பயனடைந்துள்ளனர். கிசான் கிரெடிட் கார்டு மூலம் உத்தரவாதமில்லா கடன்கள் குறைந்த வட்டியில் வழங்கப்படுகின்றன. கிசான் கிரெடிட் கார்டுகளுக்கான செயல்முறை கட்டணங்கள் உள்ளிட்ட பல்வேறு கூடுதல் கட்டணங்களை மத்திய அரசு ரத்து செய்துள்ளது.
தமிழகம்: தக்காளி மீண்டும் ரூ. 100க்கு விற்பனை! காய்கறி விலை
குறைந்த வட்டி (Low interest)
இந்த கிசான் கிரெடிட் கார்டு குறைந்த வட்டியில் விவசாயக் கடன் வழங்குவதற்காக விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. விவசாயிகளுக்கு இதன் மூலம் 4 சதவீத வட்டிக்கு கடன் கொடுக்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் 2 சதவீத வட்டிக்குக் கூட கடன் வாங்கலாம்.
மேலும் படிக்க: Breaking: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு, "பேரறிவாளன் விடுதலை"
இலவச கடன் (Free credit)
இந்நிலையில் கிசான் கிரெடிட் கார்டுகள் மூலமாக வட்டியே இல்லாமல் கடன் கொடுக்கப்படுகிறது என்ற செய்தி தற்போது வேகமாகப் பரவி வருகிறது. அது தொடர்பான செய்தித்தாளின் துண்டு பகிரப்பட்டு, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
உண்மையா?
இதுதொடர்பாக PIB தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளது. அதன்படி, கிசான் கிரெடிட் கார்டு திட்டத்தில் வட்டி இல்லாமல் கடன் என்பது போலியான செய்தி என்று தெளிவுபடுத்தியுள்ளது. எனவே இதுபோன்ற போலியான செய்திகளை நம்ப வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டுள்ளது.
விண்ணப்பிப்பது எப்படி? (How to apply?)
ஒருவேளை நீங்கள் கிசான் கிரெடிட் கார்டுக்கு விண்ணப்பிக்க நினைத்தால் வங்கிகளிலேயே சுலபமாக விண்ணப்பிக்கலாம். இணையதளத்தில் கிசான் கார்டுக்கான விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து அதைப் பூர்த்தி செய்த பின்னர் வங்கியில் சமர்ப்பிக்க வேண்டும். உங்களுக்கு விருப்பமான வங்கியைத் தேர்ந்தெடுத்து அந்த வங்கியில் விண்ணப்பிக்கலாம். ஒப்புதல் அளிக்கப்பட்டவுடன் விண்ணப்பதாரரின் வீட்டிற்கு கிசான் கிரெடிட் கார்டு அனுப்பப்படும்.
Amul Recruitment 2022: சூப்பர் வேலைவாய்ப்பு, 5 லட்சம் வரை சம்பாதிக்கலாம்
என்னென்ன தேவை?
கிசான் கிரெடிட் கார்டு வாங்குவதற்கு நில ஆவணங்கள் மற்றும் பயிர் விவரங்களைச் சமர்ப்பித்து விண்ணப்பப் படிவத்தில் பூர்த்தி செய்ய வேண்டும். இதுபோக நில ஆவணத்தின் நகலையும் சமர்ப்பிக்க வேண்டும். ஆதார் அட்டை, பான் அட்டை, 100 நாள் வேலைத் திட்டத்துக்கான அட்டை, வாக்காளர் அட்டை போன்ற ஏதேனும் ஒரு ஆவணத்துடன் சேர்த்து, நில ஆவணங்கள், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ போன்ற ஆவணங்கள் தேவை.
மேலும் படிக்க...
மழையால் உச்சம் தொட்டத் தக்காளி- கிலோ ரூ.75!
குடிசை வீட்டிற்கு ரூ. 2.5 லட்சம் கரண்ட் பில் - அடக் கொடுமையே.!