விவசாயிகளுக்கு அதிகபட்சமாக ரூ.5 லட்சம் வரையிலான விபத்துக் காப்பீடுத் திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அரசின் இந்த அறிவிப்புக்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.
சாமானியர்களைக் காட்டிலும், குறிப்பாக காட்டு விலங்குகளால், விவசாயிகள் விபத்துக்கு ஆளாவதும் பலியாவதும் தொடர்கதையாகி வருகிறது.
இதனைக் கருத்தில் கொண்டு, உத்தரப் பிரதேச அரசு அதிரடி முடிவு எடுத்துள்ளது. உத்தரப் பிரதேசத்துக்கான மாநில பட்ஜெட்டை அம்மாநில நிதியமைச்சர் சுரேஷ் குமார் கண்ணா தாக்கல் செய்தார். அதில் 2022-23ஆம் நிதியாண்டுக்கு 6.15 லட்சம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. புதிய திட்டங்களுக்காக 39,181.10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
சிறப்பு அம்சங்கள்
-
பெண்களுக்காக மாநில அளவில் சைபர் உதவி பிரிவுகள் அமைக்கப்படும். இதற்காக 72.50 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
-
மிஷன் சக்தி திட்டத்தின் கீழ் பெண்களின் பாதுகாப்புக்காக 20 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
-
விவசாயிகள் விபத்துக் காப்பீடு திட்டத்திற்கு 650 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் அதிகபட்சமாக 5 லட்சம் ரூபாய் வழங்கப்படும்.
-
2022-23ஆம் நிதியாண்டில் 15,000 சோலார் பம்புகள் பொருத்தப்படும். மேலும் விவசாயிகளுக்கு 60.20 லட்சம் குவிண்டால் விதைகள் விநியோகிக்கப்படும்.
-
119.30 லட்சம் மெட்ரிக் டன் உரமும் விவசாயிகளுக்கு வழங்கப்படும்.
-
சுவாமி விவேகானந்தர் இளைஞர் மேம்பாட்டு திட்டத்துக்கு 1500 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
-
போட்டித்தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு வீட்டுக்கு அருகிலேயே பயிற்சி அளிக்க முதல்வர் அபியுதயா யோஜனா திட்டம். இத்திட்டம் அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
-
100 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் 32 கோடி வேலை நாட்களுக்கு இலக்கு.
-
கிராம தொழில் வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் 16000 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்குவதற்கு 800 தொழில்களை அமைக்க இலக்கு நிர்ணயம்.
-
இளைஞர்களுக்கு அடுத்த ஐந்து ஆண்டுகளில் 2 கோடி இலவச ஸ்மார்ட்போன் மற்றும் டேப்கள் வழங்கப்படும்.
மேலும் படிக்க...
ரூ.1லட்சம் பென்சன் தரும் மத்திய அரசின் மகத்தானத் திட்டம்!
Indian Air Forceஸில் வேலை - பிளஸ் 2 படித்தவர்களுக்கு அரிய வாய்ப்பு!