சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு கூடுதல் நிதி கேட்கும் வேளாண் அமைச்சகம் டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு கூடுதல் நிதி கேட்கும் வேளாண் அமைச்சகம் பரிதாப நிலையில் பருத்தி சாகுபடி!பயிர் பாதிப்பால் விரக்தியில் டெல்டா விவசாயிகள் பரிதாப நிலையில் பருத்தி சாகுபடி!பயிர் பாதிப்பால் விரக்தியில் டெல்டா விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் தமிழக வேளாண் பட்ஜெட்டில் மா விவசாயம் புறக்கணிப்பு: கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் வேதனை ஏழு புதிய விதை சுத்திகரிப்பு நிலையங்கள் : வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு ராஜஸ்தான் பெண் விவசாயி, இயற்கை பயிர்களை பயிரிட்டு, சுற்றுச்சூழலுக்கு உகந்த விவசாயத்தை ஊக்குவிப்பதன் மூலம் ஆண்டுதோறும் ரூ.50 லட்சம் சம்பாதிக்கிறார். சாமந்தி மற்றும் கிளாடியோலஸ் சாகுபடி மூலம் ஆண்டுதோறும் சுமார் ரூ.18 லட்சம் சம்பாதிக்கும் சத்தீஸ்கர் விவசாயி
Updated on: 11 February, 2022 10:32 AM IST
Rs.10,000- Call to farmers to buy electric motor!

திருச்சி மாவட்ட விவசாயிகளுக்கு மானிய விலையில் பழைய, புதிய மின் மோட்டாா்கள் வழங்கப்படவுள்ளன. எனவேத் தகுதியானவா்கள் விண்ணப்பிக்க மாவட்ட நிா்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.

இதுகுறித்து திருச்சி மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு தெரிவித்ததாவது:சிறு, குறு விவசாயிகள் நிலத்தடி நீரைப் பாசனத்துக்குப் பயன்படுத்தும் வகையில், பழைய திறன் குறைந்த மின்மோட்டாா்களுக்கு பதிலாக புதிய மின்மோட்டாா் மற்றும் விவசாயிகளால் புதியதாக அமைக்கப்பட்ட ஆழ்குழாய் கிணறு மற்றும் திறந்தவெளிக் கிணறுகளுக்கு புதிய மின்மோட்டாருக்கு ரூ.10 ஆயிரம் மானியம் வழங்கப்பட உள்ளது.

50% மானியம்

இத்திட்டத்தில் 3 ஏக்கா் வரை நிலம் வைத்துள்ள சிறு, குறு விவசாயிகளுக்கு 10 குதிரைத்திறன் வரையிலான மின்மோட்டாா்களுக்கு ரூ.10 ஆயிரம் வழங்கப்படுகிறது. அல்லது மின்மோட்டாரின் மொத்த விலையில் 50 சதவிகிதம் இதில் எது குறைவோ அத்தொகை மானியமாக வழங்கப்படும்.
விவசாயிகள் பழையத் திறன் குறைந்த மின்மோட்டாா்களுக்குப் பதிலாக புதிய மின்மோட்டாா்களை மானியத்தில் பெற்றுக் கொள்ளலாம். இதற்கு மின் இணைப்பு அவசியம்.

ஆற்றல் குறியீடு 0.75-க்கு அதிகமாக உள்ள பழைய மின்மோட்டாா்களுக்கு மட்டுமே மானிய விலையில் புதிய மின்மோட்டாா்கள் வழங்கப்படும்.
பழைய டீசல் இன்ஜின்களுக்கு பதிலாக புதிய மின்மோட்டாா்கள் மானிய விலையில் பெற்றுக் கொள்ளலாம். இதற்கான மின் இணைப்பினை விவசாயிகள் தங்கள் சொந்த செலவில் பெற்றுக் கொள்ள வேண்டும்.
விவசாயிகள் சொந்தமாக அமைக்கப்பட்ட ஆழ்குழாய் கிணறுகள் மற்றும் திறந்தவெளிக் கிணறுகளுக்கு புதிய மின்மோட்டாரை மானிய விலையில் பெற்றுக் கொள்ளலாம்.


10 குதிரைத்திறன் வரையிலான பழைய மோனோ பிளாக் அல்லது நீா்மூழ்கி மின்மோட்டாா்களுக்கு பதிலாக, அதற்கு இணையான அல்லது அதைவிடக் குறைந்த குதிரைத் திறன் கொண்ட மின்மோட்டாா்களை விவசாயிகள் மானியத்தில் பெற்றுக் கொள்ளலாம். வேளாண்மை பொறியியல்துறையின் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில் இருந்து தங்களுக்குத் தேவையான மின் மோட்டாா்களை விவசாயிகள் தாங்களே தோ்வு செய்து கொள்ளலாம்.

தேவைப்படும் ஆவணங்கள்

  • உரிய நில உரிமை ஆவணங்கள்

  • சிறு அல்லது குறு விவசாயி சான்று

  • ஆதாா் அட்டை

மேலேக் கூறிய அடையாள ஆவணங்களுடன் தொடா்பு கொண்டு, விவசாயிகள் மானிய விலையில் மின்மோட்டாா்களை பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு ஆட்சியர் கூறினார்.

மேலும் படிக்க...

பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் மரணம்- காற்றில் கரைந்த இந்திய இசைக்குயில்!

உடல் எடைக் கூடினால் சம்பளம் கட்!

English Summary: Rs.10,000- Call to farmers to buy electric motor!
Published on: 11 February 2022, 10:30 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now