1. விவசாய தகவல்கள்

விவசாயி வங்கிக்கணக்கில் டெபாசிட்டான ரூ.15 லட்சம்- வீடு கட்டியப் பிறகு திருப்பிக் கேட்கும் அதிகாரிகள்!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Rs 15 lakh deposited in a farmer's bank account - officials asking for a refund after building a house!

நம்முடைய வங்கிக்கணக்கை மற்றொருவர் தன்னுடையத் தேவைக்காகப் பயன்படுத்துவது அண்மைகாலமாக அதிகரித்து வருகிறது. இதனால், வங்கிக்கணக்கு வைத்துள்ள நபருக்கு வரும் சிக்கல்களும் ஏராளனம். அப்படியொரு சம்பவம் தற்போது மகாராஷ்ராவில் நடந்துள்ளது.

ரூ.15 லட்சம்

மஹாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத் மாவட்டம் பைதான் தாலுகாவில் வசிப்பவர் ஞானேஸ்வர் ஓட். இவர், அப்பகுதியில் உள்ள பாங்க் ஆப் பரோடா வங்கி கிளையில் ஜன்தன் கணக்கு வைத்திருந்தார். கடந்த ஆண்டு ஆக.,21ல், விவசாயியின் வங்கிக்கணக்கில் ரூ.15 லட்சம் பணம் டெபாசிட் ஆனது. இதனையறிந்த ஞானேஸ்வர், பிரதமர் நாடாளுமன்றத் தேர்தலின் போது அளித்த வாக்குறுதியை நிறைவேற்றிவிட்டதாக எண்ணி மகிழ்ந்தார்.

புது வீடு

அதுமட்டுமல்ல, பணம் டெபாசிட் செய்ததற்கு நன்றி தெரிவித்து பிரதமருக்கு கடிதம் எழுதினார். மேலும், தனது வங்கிக்கணக்கில் இருந்து ரூ.9 லட்சம் பணத்தை எடுத்து புதிதாக வீடு கட்டினார்.

ஆனால் உண்மையில், அந்த பணம் பிம்பல்வாடி கிராம பஞ்சாயத்தில் வளர்ச்சி பணிகளுக்கு ஒதுக்கப்பட்டது. தவறுதலாக ஞானேஸ்வர் வங்கிக்கணக்கில் டெபாசிட் செய்யப்பட்டது. 4 மாதங்களாக பணம் வராததை அறிந்த பஞ்., நிர்வாகத்தினர் வங்கியில் விசாரணை நடத்திய போது நடந்த தவறு தெரியவந்தது. இது குறித்து வங்கி அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. தங்கள் மீது உள்ள தவறை உணர்ந்து கொண்ட அதிகாரிகள், பணத்தை திருப்பி கொடுக்கும்படி ஞானேஸ்வருக்கு நோட்டீஸ் அனுப்பினர். வங்கிக்கணக்கில் எஞ்சியிருந்த ரூ.6 லட்சத்தை வங்கியே எடுத்து கொண்டது.

தவறுதலாகப் போடுவதற்கும், தேவைப்படும்போது பணத்தைக் கேட்பதற்கும் எந்த சட்டத்தில் இடம் உள்ளதா? என்றேத் தெரியவில்லை. இது மோடி அரசின் குளறுபடிதான். வீடு கட்டுவதற்கு செலவிட்ட ரூ. 9 லட்சத்தை எப்படி திருப்பி கட்டுவது என ஞானேஸ்வரும், அவரிடம் இருந்து பணத்தை எப்படி திருப்பி வாங்குவது என அதிகாரிகளும் குழப்பத்தில் உள்ளனர்.

மேலும் படிக்க...

இனிமேல் வார சம்பளம்! ஊழியர்களுக்கு உச்சக்கட்ட மகிழ்ச்சி!!

அச்சதலான 10 அடி தோசை - சாப்பிட்டால் ரூ.71,000 பரிசு!

English Summary: Rs 15 lakh deposited in a farmer's bank account - officials asking for a refund after building a house! Published on: 11 February 2022, 07:27 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.