கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வட்டாரத்தில், தரிசு நிலத்தை விளை நிலமாக மாற்றுதல் திட்டத்தில், விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு, 10 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது என வேளாண்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஓசூர் வட்டாரத்தில், மேற்கொள்ளப்பட்டு வரும் சாகுபடி பணிகளை வேளாண் இணை இயக்குனர் ராஜேந்திரன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, பிரதமர் கிசான் திட்டம் குறித்து கேட்டறிந்தார்.
ரூ.10 ஆயிரம் மானியம் (Rs.10,000 Subsidy)
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஓசூர் வட்டாரத்தில், தரிசு நிலத்தை விளை நிலமாக மாற்றுதல் திட்டத்தில், விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு, 10 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கப்படும் என அறிவித்தார்.
இதுவரை மொத்தம், 30 ஹெக்டேர் அளவுக்கு விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்த அவர், உரிய ஆவணங்களுடன் விவசாயிகள் வேளாண் அலுவலரை அணுகலாம் எனவும் குறிப்பிட்டார்.
பணம் பறிமுதல் (Cash recovered)
மேலும் PM-Kisan முறைகேடு தொடர்பாக ஓசூர் வட்டாரத்தில் மொத்தம், 617 தகுதியற்ற பயனாளிகள் கண்டறியப்பட்டு, 466 பேரிடமிருந்து, பணம் பிடித்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் ராஜேந்திரன் குறிப்பிட்டார்.
மேலும் படிக்க....
இயற்கை சாகுபடிக்கு ரூ.4 ஆயிரம் வரை ஊக்கத்தொகை - விவசாயிகளுக்கு அழைப்பு!
மாற்றி யோசிக்க வைத்த மல்பெரி - விற்பனை செய்து வருமானம் பார்த்த விவசாயிகள்!