1. விவசாய தகவல்கள்

இயந்திரம் மூலம் நடவுக்கு ரூ.5 ஆயிரம் மானியம்- வேளாண்துறை அறிவிப்பு!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar

இயந்திரம் மூலம் நடவு செய்யும் விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.5 ஆயிரம் மானியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் 
முதல்போக நெல் நடவுக்கான ஆயத்தப் பணிகளில் விவசாயிகள் தற்போது ஆர்வமுடன் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்காக நாற்றங்கால் தயாராகி ஒரு சில இடங்களில் நெல் நாற்று நடவு பணிகள் தொடங்கப்பட்டுவிட்டன.

ரூ. 5ஆயிரம் மானியம் (Rs.5000 Subsidy)

இதையடுத்து திருப்பரங்குன்றம் வேளாண்மை விரிவாக்க மையத்திற்குட்பட்டவருவாய் கிராமங்களில் இயந்திரம்மூலம் நெல் நடவு செய்யும் விவசாயிகளுக்குஎக்டேருக்கு ரூ. 5 ஆயிரம் மானியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாகஉதவி இயக்குநர் மீனாட்சிசுந்தரம் கூறுகையில், திருந்திய நெல் சாகுபடி முறையில் இயந்திர நடவுசெய்யும் விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படும்.  எனவே விவசாயிகள் எந்திர நடவுக்கு மாறுவதற்கு வேளாண்மை அதிகாரிகளைத் தொடர்பு கொள்ளலாம் என்று கூறினார்.

தேவைப்படும் ஆவணங்கள் (Documents)

  • பட்டா

  • சிட்டா

  • அடங்கல்

  • ஆதார்

  • புகைப்படம்

ஆகியவற்றுடன் வேளாண்மை விரிவாக்க மையத்தில் பதிவு செய்யலாம்.

மேலும் படிக்க...

எந்திர நடவு பணிக்கு ஏக்கருக்கு ரூ.2 ஆயிரம் மானியம்!

அமெரிக்காவில் ஜக்கி வாசுதேவ் பைக் பயணம்- பூர்வகுடி மக்களை சந்திக்க ஏற்பாடு!

English Summary: Rs 5,000 subsidy for planting by machine - Agriculture announcement!

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2022 Krishi Jagran Media Group. All Rights Reserved.