இந்தியாவில் தண்ணீர் பற்றாக்குறையில் தவிக்கும் மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று.தமிழ்நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் சுமார் 300 அடிக்கு கீழ் சென்றுவிட்டது.தமிழகத்தில் 80கும் மேற்பட்ட ஒன்றியங்களில் நிலத்தடி நீர்மட்டம் அளவுக்கு கீழே சென்று விட்டது என்று நில நீர் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.எனவே கிடைக்கும் குறைந்தபட்ச நீரில் அதிக பயிர் உற்பத்தி செய்ய வேண்டிய கட்டாயத்தில் இன்று நாம் உள்ளோம்.
விவசாயிகள் பாத்திகள் உருவாக்கி மேற்பரப்பில் பாசன முறையை பயன்படுவதினால்,நிலத்தடி நீர் அதிகளவில் வீணாகிறது,அதிகளவில் பாசன நீரால் அதிக விளைச்சலும் கிடைப்பதில்லை.இப்போது இருக்கும் சூழ்நிலையில் சிக்கன நீர்பாசனமான சொட்டு நீர் பாசனத்தை பயன்படுத்தி விவசாயிகள் நேரடியாக பயிரின் வேர்களில் சொட்டு நீர் சரியான அளவில் பாய்ச்சுவதன் மூலம் பயிரின் வேர் வளர்ச்சி அதிகரித்து,அனைத்து செடிகளும் செழிப்பாக வளர்கிறது. சொட்டுநீர் பாசனம் முறை நிலத்தடி நீரை 60-70 சதவீதம் வரை சேமிக்க உதவுகிறது மற்றும் சேமிக்கப்பட்ட தண்ணீரைக் கொண்டு இருமடங்கு நிலத்தில் பயிர் சாகுபடி செய்யவும் உதவுகிறது.
நீர் நேரடியாக பயிரின் வேர்களுக்கு அளிக்கப்பட்டு,மொத்தபரப்பளவில் 8ல் 3 பாகம் மற்றும் ஈரம் ஆவதால் களைகள் வளரும் தன்மை குறைந்து,களையெடுக்கும் செலவும் குறைகிறது.மேலும் பயிரின் தேவைக்கேற்ப நீரில் கரையும் உரங்களை நேரடியாக வேர் பகுதிகளில் அளிக்கப்படுவதால் உரமிடும் ஆள்கூலியும் குறைகிறது. இதனால் தரமான உற்பத்திகளை அதிகளவில் விளைவித்து லாபம் ஈட்ட முடிகிறது.
சொட்டுநீர் பாசனம் தோட்ட பயிர்களுக்கு அமைக்க முதலீடு செலவு அதிகமாக இருப்பதால் தோட்டக்கலை சார்பாக மானியம் வழங்கப்படுகிறது,சிறு குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியமும் நடுத்தர விவசாயிகளுக்கு 12.5 ஏக்கர் வரை 70% மானியம் சொட்டுநீர் பாசனம் அமைக்க தோட்டக்கலை துறையால் வழங்கப்படுகிறது.
இந்த மானிய உதவிகளை பெற அருகி உள்ள தோட்டக்கலை துறைகளை அடைந்து மீதம் தேவைப்படும் தகவல்களை அறிந்து கொள்ளலாம்.
மேலும் படிக்க: