Krishi Jagran Tamil
Menu Close Menu

சொட்டுநீர் உரப்பாசனத்தின் பயன்கள் மற்றும் பயன்பாடு திறன்

Monday, 22 July 2019 05:18 PM
drip irrigation

சொட்டுநீர் உரப்பாசனம் என்பது பாசன நீரோடு உரங்களையும் கலந்து சமச்சீராக அளிப்பதாகும். சொட்டுநீர்ப் பாசனம் மற்றும் நுண்தெளிப்பு பாசன முறைகள் அறிமுகமானதிலிருந்து, நீருடன் உரமளிக்கும் முறை மிகச்  சுலபமாகிவிட்டது. பொதுவாக, சொட்டுநீர் பாசன அமைப்பில் உரத்த தொட்டி, உரச் செலுத்தி, வெஞ்சுரி போன்றவற்றில் ஏதாவது ஒரு கருவியின் மூலம் உரம், நுண்ணுட்டச் சாது, பூச்சி, பூஞ்சாண மற்றும் களைக்கொல்லிகளை செலுத்துவது மேம்பட்ட முறையாக விளங்குகிறது.

சாதாரணமாக, உரங்களை நேரடியாக மண்ணிலிடுவதால், சுமார் 50 விழுக்காடு சத்துக்கள் மட்டுமே பயிருக்கு கிடைக்கிறது. எஞ்சிய 50 விழுக்காடு சத்துக்கள் வீணாகின்றன. ஆனால் சொட்டுநீர் உரப்பாசனத்தில், திரவ உரங்கள் அல்லது நீரில் கரையும் உரங்களை அளிப்பதால், உர உபயோகத்திறன் 80 முதல் 90 விழுக்காடு வரை அதிகரிக்கிறது.

சொட்டுநீர் உரப்பாசனத்தின் பயன்கள்

drip irrigation process

* சொட்டுநீர் மூலம் உரம் அளிக்கும் போது, நீரும் உரமும் செடிகளின் வேற்பாகத்திற்கு நேரடியாக சென்றடைகிறது. இதனால்  பயிர்கள் வேர்களின் மூலம் வேண்டிய சத்துக்களை எளிதாக எடுத்துக் கொள்கின்றன.

* சொட்டுநீர் உரப்பாசனத்தில் பயிருக்கு தேவையான நீரையும், உரத்தையும் துல்லியமாகக் கணக்கிட்டு அளிக்க முடியயும்.

* பயிருக்கு தேவையான சத்துக்களை பயிர்களின் பல்வேறு வளர்ச்சி  கால கட்டங்களில், அதாவது விதைக்கும்போதே அதிக மணிச்சத்து, வளர்ச்சிப் பருவத்தில் தழை மற்றும் சாம்பல் சத்து மற்றும் முதிர்ச்சிப் பருவத்தில் சாம்பல் சத்து போன்றவாறு தேர்வு செய்து, பயிரின் தேவைக்கேற்ப அளிக்க முடியும்.

* அனைத்து செடிகளுக்கும் உரம் சீராக நீருடன் கலந்தளிக்கப்ப படுவதால், 25 முதல் 50 விழுக்காடு அதிக விளைச்சல் கிடைக்கிறது.

drip irrigation pipes

* உர உபயோகத்திறன் சுமார் 80  முதல் 90 விழுக்காடு வரை உள்ளதால், பரிந்துரைக்கப்படும் உர அளவில், குறைந்த பட்சம் சுமார் 25 விழுக்காடு உரசேமிப்பு பெறலாம்.

* சொட்டுநீர் உரப்பாசனத்தில் மட்டுமே நுண்ணூட்டச்சத்துக்களை திறம் பட அளிக்க முடியும்.

* திராட்சை, வாழை போன்ற பழ வகை மரங்கள் மற்றும் காய் கறிப்பயிர்களில் சாம்பல் சத்து அதிகம் கொண்ட உரங்களைத் தேர்வு செய்து அளிப்பதால், விலை பொருள் தரம் மேம்பாட்டின் மூலம் அதோய்கம் பெறலாம்.

இம்முறையில் உரச் சேமிப்போடு காலநேர, வேலையாட்கள் மற்றும் மின் சக்தி ஆகியனவும் கணிசமாகக் குறைந்து விடுகின்றன. அதனால்  அவைகளுக்கான செலவும் குறைந்து விடுகிறது. 

உர பயன்பாடு திறன்

தாவர சத்துக்கள்

உர பயன்பாடு திறன்

 

சாதாரண முறை

சொட்டுநீர்

சொட்டுநீர் உரப்பாசனம்

தழைச் சத்து

30- 50 %

65 %

85 %

மணிச் சத்து

20 %

30 %

45 %

சாம்பல் சத்து

50%

60 %

80 %

https://tamil.krishijagran.com/horticulture/come-let-us-know-about-modern-irrigation-detailed-study-of-drip-irrigation-and-its-benefits/

https://tamil.krishijagran.com/horticulture/how-to-easily-handle-drought-management-in-an-organic-way-do-you-know-how-to-maintain-soil-moisture/

K.Sakthipriya
Krishi Jagran

drip irrigation Uses utilization efficiency
English Summary: what are the Uses and utilization efficiency of drip irrigation

Share your comments


Krishi Jagran Tamil Magazine Subscription Online Subscription


Monsoon 2020 update on Krishi Jagran Tamil Help App

Latest Stories

  1. பெண்களுக்காக 50% மானிய விலையில் அம்மா ஸ்கூட்டர் திட்டம்! - இப்போதே முந்துங்கள்!!
  2. பிரதமரின் விவசாயிகள் ஓய்வுதியத் திட்டதில் சேர என்ன செய்ய வேண்டும்- வழிமுறைகள் உங்களுக்காக!
  3. நீலகிரியில் கொட்டப்போகிறது அதி கனமழை - வானிலை மையம் எச்சரிக்கை!
  4. கோழியினங்களுக்கான பாரம்பரிய மூலிகை முதலுதவி மருத்துவம்!!
  5. மாட்டுச்சாணத்தைக் காசாக்க நீங்க ரெடியா? இதோ சில வழிமுறைகள்!
  6. மக்காச்சோள பயிரைத் தாக்கும் பூச்சிகளும் அதனை கட்டுப்படுத்தும் வழிமுறைகளும்!!
  7. பயிர் பாதுகாப்பு மருந்துகளைப் பயன்படுத்துகிறீர்களா? அவசியம் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள்!!
  8. விளைபொருள் சேமிப்பு கிடங்கு அமைக்க விருப்பமா? கடன் வழங்குகிறது இந்தியன் வங்கி!
  9. மத்திய அரசின் மானியத் தகவல்கள் அனைத்தும் உங்கள் கைகளுக்குக் கொண்டு வரும் "PM Kisan Mobile App"!!
  10. அதரவற்ற குழந்தைகளுக்கு மாதம் ரூ.2,000 வழங்கும் தமிழக அரசின் திட்டம்- விண்ணப்பிக்க வழிகாட்டுதல்கள்!

CopyRight - 2020 Krishi Jagran Media Group. All Rights Reserved.