தோட்டக்கலை விவசாயிகளுக்கு ரூ.32 லட்சம் மானியம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கான ஆணையை புதுவை முதலமைச்சர் ரங்கசாமி வழங்கினார்.
விவசாயிகளின் நிதிச்சுமையைக் குறைக்கும் வகையிலும், அவர்களை ஊக்குவிக்கும் விதமாகவும் இத்தகை மானியத் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
அதன்படி ஒருங்கிணைந்த தோட்டக்கலை மேம் பாட்டு திட்டத்தின் கீழ் தோட்டக்கலை விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் உற்பத்திக்கு பிந்தைய மானியம் வழங்கப்பட்டு வருகிறது.இந்தத் திட்டத்தின் கீழ் சாகுபடி பல்வேறு விதமாகப் பிரிக்கப்பட்டு, பிரத்யேகமாக மானியம் வழங்கப்படுகிறது.
இதன் ஒருபகுதியாகவெற்றிலை சாகுபடிக்கு பிந்தைய மானியமாக ஒரு சென்டுக்கு ரூ.1,500 வழங்கப்படும். இதில், ஹெக்டேருக்கு ரூ.50 ஆயிரத்துக்கு மிகாமல் வழங்கும் திட்டம், புதிய தோட்டம் நிறுவுதல், மலர், காய்கறி, பழ பயிர், வாசனை பயிர்களுக்கு மானியம் அனுமதிக்கப்பட்டுள்ளது.
இதன்படி 154.87 ஹெக்டேர் தோட்டக்கலை பயிர்கள் சாகுபடி செய்த 449 விவசாயிகளுக்கு 24 லட்சத்து 60 ஆயிரத்து 47 ரூபாய், 544.82 சென்டில் வெற்றிலை சாகுபடி செய்த 37 விவசாயிகளுக்கு 8 லட்சத்து 17 ஆயிரத்து 230 ரூபாய் என மொத்தம் ரூ.32 லட்சத்து 77 ஆயிரத்து 277 நிதி வங்கி கணக்கில் செலுத்தப்படுகிறது.
இதற்கான ஆணையை புதுவை முதலமைச்சர் ரங்கசாமி, அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் முன்னிலையில் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் வேளாண்துறை அதிகாரிகள், பயனாளிகள் கலந்து கொண்டனர்.
மேலும் படிக்க...