1. விவசாய தகவல்கள்

பணம் கொழிக்கும் வியாபாரம்- ரூ.2 லட்சம் வருமானம்- 85% அரசு மானியம்!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar

குறைந்த முதலீட்டில், மாதம் 2 லட்சம் ரூபாய் வரை வருமானம் பார்க்க விரும்புபவர்கள் இந்தத் தொழிலைத் தொடங்கலாம். அரசு சார்பில் இந்த த் தொழில் தொடங்க 85% வரை மானியம் கிடைக்கும். குறைந்த முதலீட்டில் நல்ல லாபம் கிடைக்கும் தொழிலை தொடங்க யாருக்குத் தான் விருப்பம் இருக்காது. அதேநேரம், அந்த தொழிலுக்கு அரசின் மானியம் கிடைத்தால் கூடுதல் மகிழ்ச்சி தான். அப்படியான அருமை தொழில்தான் இங்கே சொல்ல வருவது.

விவசாயத் தொழில் தொடங்குவதில் உள்ள சிறப்பு என்னவென்றால், குறைந்த முதலீட்டில், அதிக லாபம் ?ஈட்டுவதுதான். பொதுவாக மத்திய அரசு விவசாய வணிகத்திற்கு, பல்வேறு கடன்கள் மற்றும் மானியங்களை வழங்குவதன் மூலம் இந்தத் தொழிலைத் தொடங்குவதற்கு ஆதரவுக் கரம் நீட்டுகிறது.

அப்படியான ஒரு சிறந்த தொழில் வாய்ப்பு தான் தேனீ வளர்ப்பு குறைந்த முதலீட்டில் இதை தொடங்கி மாதந்தோறும் லட்சங்களில் சம்பாதிக்கலாம். மானியமும் பெறலாம்.

தேனீ வளர்ப்பு

தேனீ வளர்ப்பு என்பது குறைந்த செலவில் உள்ள சிறந்த வணிக யோசனை. தேன் மற்றும் தொடர்புடைய பொருட்களை விற்பதன் மூலம் நம்மால் நிறைந்த வருமானமும் பார்க்க முடியும். இதற்கு உங்களிடம் ஆயிரக்கணக்கான தேனீக்கள் கூட்டம் இருக்க வேண்டியதில்லை. இந்த தொழிலை தொடங்குவதற்கு, நீங்கள் 50 தேனீக்கள் கூட்டத்திற்கு குறைவாக வைத்திருந்தாலே போதுமானது.

மானியம்

தேசிய தேனீ வாரியம் (NBB) NABARD உடன் இணைந்து இந்தியாவில் தேனீ வளர்ப்பவர் வணிகத்திற்கு நிதியளிப்பதற்கான திட்டங்களை வகுத்துள்ளது. இத்துறையில் பெண்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கவும் அவர்கள் உதவி செய்கிறார்கள். அருகில் உள்ள தேசிய தேனீ வாரிய அலுவலகத்திற்கு நீங்கள் சென்று விவரங்களை அறியலாம் அல்லது இணையதளத்தில் இருந்து தகவல்களைப் பெறலாம். தேனீ வளர்ப்புக்கு அரசாங்கம் 80 முதல் 85% வரை மானியம் தருகிறது. இந்த சலுகையை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

எந்தத் தொழிலைத் தொடங்குவதற்கு முன்பும், அந்த தொழில் குறித்து, ஆழமாக புரிந்து கொண்டால் மட்டுமே அதில் வெற்றி பெற முடியும். தேனீ வளர்ப்புத் தொழிலைத் தொடங்குவதற்கு அருகில் உள்ள (விவசாயிகள் சேவை மையம்) KVK அல்லது வேளாண்மைப் பல்கலைக்கழகத்தைத் தொடர்புகொண்டு, தேனீ வளர்ப்புப் பயிற்சியை வழங்குகிறார்களா என்று விசாரித்து பயிற்சி பெற்றுக் கொள்ளலாம்.

சந்தைப்படுத்துதல்

தேனீ வளர்ப்பில் தேனுடன் சேர்த்து தேன் மெழுகு, ராயல் ஜெல்லி, புரோபோலிஸ் அல்லது தேனீ பசை மற்றும் தேனீ மகரந்தம் போன்ற பல பொருட்கள் உள்ளன. இந்த தயாரிப்புகள் அனைத்தும் மனிதர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதேநேரத்தில் சந்தையில் மிகவும் விலை உயர்ந்தவை. அதாவது, சந்தையில் இவற்றிற்கான தேவை அதிகம். இந்தத் தயாரிப்புகளின் சந்தை மதிப்பைப் பற்றி தெரிந்துக் கொண்டால், எவ்வாறு பணம் சம்பாதிக்கலாம் என்பதைக் கணக்கிட்டுக்கொள்ளலாம்.

லாபம்

தற்போதைய சந்தையில் பச்சைத் தேனின் விலை 150-200 ரூபாய், சராசரியாக 1000 கிலோ தேன் உற்பத்தி செய்ய முடிந்தால், நீங்கள் எளிதாக 2 லட்சம் ரூபாய் சம்பாதிக்கலாம்.

மேலும் படிக்க...

புதியக் காற்றழுத்த தாழ்வு மண்டலம்- சென்னைக்கு ஆபத்து!

விவசாயிகள் புதிய மின் மோட்டார் வாங்க ரூ.10,000 மானியம்!

English Summary: Wealthy business- Rs 2 lakh income- 85% government subsidy! Published on: 04 March 2022, 10:10 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.