Farm Info

Saturday, 27 February 2021 02:22 PM , by: Elavarse Sivakumar

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் (TNAU) சார்பில், பழங்குடியின விவசாயிகளுக்கு விதை உற்பத்தி பயிற்சி (Seed production training) அளிக்கப்பட்டது.

விதை உற்பத்தி பயிற்சி (Seed production training)

கோயம்புத்தூரில் செயப்பட்டு வரும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் விதை மையம் சார்பில், பழங்குடியினர் துணைத்திட்டத்தின் கீழ் இந்தப் பயிற்சி அளிக்கப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கடைசிக்காடு மற்றும் கோரக்கொம்பு கிராமங்களில் பழங்குடியின விவசாயிகளுக்கு விதை உற்பத்தி பயிற்சியும், இடுபொருள் வழங்கல் பயிற்சியும் அளிக்கப்பட்டன.

வழிகாட்டு நெறிமுறை (Guideline protocol)

இப்பயிற்சியில் ஒவ்வொரு கிராமத்தில் இருந்தும் 100 பழங்குடியின விவசாயிகள் அரசு வழிகாட்டு நெறிமுறைகளைக் கடைப்பிடித்து, முகக்கவசம் அணிந்து, சமூகஇடைவெளியுடன் பங்கேற்றனர்.

இதில் பல்கலைக்கழக விதை மையத்தின் இயக்குநர் முனைவர். செ.சுந்தரேஸ்வரன் தலைமை உரையாற்றினார். பின்னர் பழங்குடியின விவசாயிகளுக்கு மண்வெட்டி, கடப்பாறை, பிக்காஸ் உள்ளிட்ட பண்ணை உபகரணங்களை வழங்கினார்.

மேலும், குதிரைவாலி, உளுந்து, பச்சைப்பயறு போன்றவற்றின் விதைகள் தலா 1 கிலோ வீதம் இலவசமாக வழங்கப்பட்டது.

மேலும் படிக்க....

ரேஷன் கடைகளில் மத்திய குழு விரைவில் ஆய்வு!

ஏப்ரல் 1ம் தேதி முதல் விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம்- தமிழக அரசு அறிவிப்பு!

ஆழ்துளை கிணறு அமைக்க விவசாயிகளுக்கு மானியம்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)