இந்தியாவின் பணக்கார விவசாயி: RFOI விருதினை வென்ற குஜராத் பெண்! விவசாயத்தில் மட்டும் 50 கோடி.. RFOI விருதினை வென்ற யுவராஜின் வெற்றிக் கதை! நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 6 June, 2021 12:05 PM IST
Credit : Tamil Webdunia

விஞ்ஞான ரீதியில் தேனி வளர்ப்பு குறித்த கருத்தரங்கம் மற்றும் இணையவழிப் பயிற்சி ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையத்தில் உள்ள MYRADA வேளாண் அறிவியல் நிலையத்திம் சார்பில் நடைபெற உள்ளது.

விவசாய நிலங்களின் தேவதை (Angel of agricultural lands)

விவசாய நிலங்களின் தேவதை என அழைக்கப்படும் தேனீக்கள், மகசூலை அதிகரிக்க உற்ற துணைவனாக உள்ளது. விவசாயிகள் தங்கள் வேளாண் பணிகளுடன், தேனீக்கள் வளர்ப்பையும் மேற்கொள்வது, அவர்களுக்கு கூடுதல் வருமானத்தை ஈட்டித் தருவதுடன், குறிப்பிட்ட அளவு மகசூல் அதிகரிக்கவும் வித்திடும்.

இணையவழிப் பயிற்சி (Online training)

எனவே விஞ்ஞான ரீதியில் தேனீ வளர்ப்பு குறித்த கருத்தரங்கம் மற்றும் இணையவழிப் பயிற்சி ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையத்தில் உள்ள MYRADA வேளாண் அறிவியல் நிலையத்தில் நடைபெற உள்ளது.

3 நாட்கள் நடைபெறும் இந்தக் கருத்தரங்கம் மற்றும் பயிற்சியில், அனைத்து விவசாயிகளும் இணையதளம் மூலம் கலந்துகொள்ளலாம்.

நடைபெறும் நாட்கள் (The day of the event)

ஜூன் 7ம் தேதி முதல் 9ம் தேதி வரை

பயிற்சி நேரம் (Training time)

காலை 11 மணி முதல் பகல்1 மணி வரை

விவாதிக்கப்படும் தலைப்புகள் (Topics discussed)

இந்தக் கருத்தரங்கத்தில் இயற்கை வேளாண்மையில் தேனீக்களின் பங்கு, தேனீக்களின் வகைள், குடும்பம் மற்றும் பூச்சி நோய் மேலாண்மை, தேன் பூச்சிகளை வளர்க்கும் முறைகள், தேனில் இருந்து மதிப்புக்கூட்டுப் பொருட்கள் தயாரிப்புத் தொழில்நுட்பம் உள்ளிட்டவை குறித்த மிகத் தெளிவாக விளக்கப்பட உள்ளது.

விஞ்ஞானிகள் பங்கேற்பு (Participation of scientists)

இதில் ஈரோடு மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் சின்னசாமி, MYRADA வேளாண் அறிவியல் நிலையத்தின் முதுநிலை விஞ்ஞானி மற்றும் தலைவர் டாக்டர். பி.அழகேசன், உழவியல் விஞ்ஞானி எஸ்.சரவணகுமார், பயிர் பாதுகாப்பு விஞ்ஞானி ஆர்.டி. சீனிவாசன், தேனீ வளர்ப்பு பயிற்சியாளர் ஏ. பார்த்தீபன் உள்ளிட்ட பலர் கலந்துகொள்கின்றனர்.

விருப்பமுள்ளவர்கள் இணையம் மூலம் இணைந்து பயிற்சி பெற்றுக்கொண்டுப் பயனடையலாம்.

Join with Zoom Meeting

கீழே உள்ள லிங்க்-கைப் பயன்படுத்திக்கொள்ளலாம்
https://us02web.zoom.us/j/6689229190?pwd=eVBiU1RaZHZ6eThvb3lqd0FaT1JGZz09#success
Meeting ID : 668 922 9190 Passcode : 2HMfYF

இணைந்து ஏற்பாடு (Arranged together)

இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் ஹைதராபாத் மண்டலம், MYRADA வேளாண் அறிவியல் நிலையம், ஈரோடு மாவட்டம் மற்றும் டெல்லியில் உள்ள தேசியத் தேனீ வாரியம் ஆகியவை இணைந்து இந்த இணையவழி கருத்தரங்கம் மற்றும் பயிற்சியை நடத்துவது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க...

சம்பா பருவத்திற்காக விதை நெல் சுத்திகரிப்பு பணி தீவிரம்!

கொரோனாவால் மீண்டும் முடங்கியது தென்னங்கீற்று முடையும் தொழில்!

கொரோனா தடுப்பு விதிமுறைகளை ஜூன் இறுதி வரை நீட்டிக்க மத்திய அரசு அறிவுறுத்தல்!

English Summary: Seminar on Scientific Beekeeping and Online Training!
Published on: 06 June 2021, 11:41 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now