தமிழக அரசின் 2021-2022ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் விரைவில் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், இம்முறை விவசாயத்திற்கெனத் தனி பட்ஜெட்டைத் தாக்கல் செய்ய மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு முடிவு செய்திருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
2 விதமான பட்ஜெட் (2 types of budget)
மத்திய, மாநில அரசுகளின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் பொது பட்ஜெட் (நிதிநிலை அறிக்கை) தாக்கல் செய்யப்படுவது வழக்கம். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை மத்தியில் ரயில்வேத் துறைக்கு என தனியாக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வந்தது. இதனை பொது பட்ஜெட் உடன் இணைத்து ஒரே பட்ஜெட்டாக பாஜக அரசு மாற்றியது. அதேசமயம் பல்வேறு மாநிலங்களில் பொது பட்ஜெட், வேளாண் பட்ஜெட் என இரண்டு விதமான பட்ஜெட்கள் தாக்கல் செய்யப்பட்டு வருகின்றன.
தமிழக அரசு முடிவு (Decision of the Government of Tamil Nadu)
அந்த வகையில் தமிழகத்தில் முதல்முறையாக வேளாண் பட்ஜெட்டை மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தேர்தல் அறிக்கையில் தகவல் (Information in the election statement)
விவசாய உற்பத்தியைப் பெருக்கவும், விவசாயிகள் நலனைப் பாதுகாக்கவும் வேளாண் பட்ஜெட்டை திமுக அரசு கொண்டு வரும் என ஏற்கனவே அக்கட்சியின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது விவசாயச் சங்கங்கள், அமைப்புகள், மற்றும் வல்லுநர்களுடன் ஆலோசித்து செயல்படுத்தப்படும் என்று கூறப்பட்டிருந்தது.
புதியத் திருப்பம் (New twist)
இந்த பட்ஜெட் அமலுக்கு வந்தால் தமிழக அரசியல் வரலாற்றில் புதியத் திருப்பமாக அமையும். விவசாயிகள் பெரும் வரவேற்பு தெரிவிப்பர்.
தனிக்கவனம் (Special care)
விவசாயத்தின் மீது தனிக்கவனம் செலுத்தப்படும். இதுகுறித்து மூத்த அமைச்சர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.
79.38 லட்சம் நிலப்பகுதிகள் (79.38 lakh plots of land)
தமிழகத்தைப் பொறுத்தவரை 79.38 லட்சம் நிலப்பகுதிகள் பயன்பாட்டிற்கு உரியவையாக இருக்கின்றன. அதில் 92.51 சதவீதத்தை சிறு மற்றும் குறு விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர்.
விவசாயத்திற்கு ஏற்றது (Suitable for agriculture)
மொத்தமுள்ள பயன்பாட்டிற்கு உரிய நிலத்தில் 62 சதவீதம் விவசாயம் செய்வதற்கு ஏற்றதாக இருப்பதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. நடப்பாண்டு எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு ஏற்கனவே இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளது.
ரூ.11,982.71 கோடி நிதி (Rs. 11,982.71 crore)
அதில், விவசாயத்துறைக்கு மட்டும் ரூ.11,982.71 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கு முந்தைய நிதியாண்டில் ரூ.11,109.48 கோடி நிதி ஒதுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது
விரைவில் தாக்கல் (Filed soon)
இந்நிலையில் புதிதாக பதவியேற்றுள்ள திமுக அரசு, 2021-22ஆம் நிதியாண்டிற்கான வழக்கமான பட்ஜெட்டை விரைவில் தாக்கல் செய்யவுள்ளது. இதனை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டமன்றத்தில் தாக்கல் செய்வார் எனத் தெரிகிறது. அவ்வாறு விவசாயத்திற்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட வேண்டும் என்பதே விவசாயிகள் பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது.
மேலும் படிக்க...
கொரோனா நிவாரண நிதி: ரூ.2000 பெறாதவர்கள் இம்மாதம் பெற்றுக்கொள்ளலாம்!!
ஊரடங்கை பயனுள்ளதாக மாற்ற மரக்கன்றுகளை நடும் இளைஞர்கள்!
300 கிலோ உரத்தை 5 டன் உரப் பயன்பாட்டுக்கு சமமாக மாற்றுவது எப்படி?