Farm Info

Sunday, 08 August 2021 06:32 PM , by: Elavarse Sivakumar

Creid : Isha

தமிழ்நாட்டில் வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்ற தமிழக முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலினின் அறிவிப்பிற்கு ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் வரவேற்புத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் தெரிவித்திருப்பதாவது:

வரலாற்று சிறப்பு மிக்கது (Very historical)

வரலாற்றுச் சிறப்புமிக்க வேளாண் பட்ஜெட்டைத் தாக்கல் செய்யவிருக்கும் தமிழகஅரசுக்குப் பாராட்டுகள்.

பலன் கிடைப்பது நிச்சயம் (The benefit is sure to come)

மிகத் தொன்மையான வேளாண் பாரம்பரியம் கொண்ட, இயற்கை விவசாயத்தில் முன்னோடியான‌ தமிழகம், இதன்மூலம் மகத்தான பொருளாதார, சுற்றுச்சூழல் மற்றும் ஆரோக்கியப் பலன்களை நிச்சயம் பெறும்.

தனி பட்ஜெட் (Separate budget)

வேளாண் துறைக்கான இந்த தனி பட்ஜெட் தமிழக சட்டப்பேரவையில் ஆகஸ்ட் 14-ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது.

சிறப்பு அம்சங்கள் (Special Features)

அதில் இயற்கை வேளாண்மைக்குத் தனி கவனம், உழவர் சந்தைகளுக்கு புத்துயிர் அளித்தல், கிராம சந்தைகளை அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல் போன்ற முக்கிய அம்சங்கள் இடம்பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசின் இந்த நடவடிக்கைகள் அனைத்தும் வரவேற்கத்தக்க அம்சங்கள் ஆகும்.

ஊக்குவிப்பு பணிகள் (Promotional tasks)

தமிழ்நாட்டில் இயற்கை வேளாண்மையை ஊக்குவிப்பதற்காக ஈஷா பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறது.

விவசாயப் பயிற்சி (Agricultural training)

மறைந்த வேளாண் விஞ்ஞானி திரு.நம்மாழ்வாரின் வழிக்காட்டுதலுடன் தொடங்கப்பட்ட ஈஷா விவசாய இயக்கத்தின் மூலம் தமிழ்நாடு முழுவதும் இதுவரை 10,000 விவசாயிகளுக்கு இயற்கை விவசாய பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

உழவன் உற்பத்தியாளர் அமைப்பு (Farmer Producer Organization)

அத்துடன் கோவையில் ஈஷாவின் வழிகாட்டுதலில் இயங்கும் வெள்ளியங்கிரி உழவன் உற்பத்தியாளர் அமைப்பு தேசிய அளவில் சிறந்த உழவன் உற்பத்தியாளர் அமைப்பாக செயல்பட்டு பலரின் பாராட்டையும், மத்திய, மாநில அரசுகளின் விருதுகளையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு ஜக்கி வாசுதேவ் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க...

நவீன இயந்திரங்கள் வரமா? சாபமா? அழிவின் விளிம்பில் உழவு மாடுகள்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)