1. விவசாய தகவல்கள்

இயற்கை விவசாயத்தை இளைஞர்கள் தமிழகம் முழுவதும் கொண்டு செல்ல வேண்டும்- சத்குரு ஜக்கி வாசுதேவ் வலியுறுத்தல்!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Youth should take natural agriculture all over Tamil Nadu - Satguru Zaki Vasudev insists!

படித்தவர்களும், இளைஞர்களும் இயற்கை விவசாயத்தை தமிழகம் முழுவதும் கொண்டு செல்ல பொங்கல் திருநாளில் உறுதி ஏற்க வேண்டும் என்று ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பொங்கல் திருநாளை முன்னிட்டு சத்குரு வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டிருப்பதாவது:

பொங்கல் பண்டிகை (Pongal Festival)

தமிழ் மக்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள். பொங்கல் என்றால் நாம் சாப்பிடும் விஷயமல்ல. பொங்கல் என்பதை நம் கலாச்சாரத்தில் உழவர் திருநாளாக கொண்டாடுகிறோம்.

முக்கியமாக இது விவசாயத்துடன் சம்பந்தப்பட்ட ஒரு விழா. எனவே இந்த நந்நாளில், படித்தவர்களும் இளைஞர்களும் கிராமங்களுக்கு சென்று விவசாயம் எப்படி நடக்கிறது என்பதை பார்க்க வேண்டும்.

பயிற்சி அளிக்கத் தயார் (Ready to Teach)

நீங்கள் விரும்பினால் உங்களுக்கு இயற்கை விவசாயத்தை கற்றுக்கொடுக்க ஈஷா விவசாய இயக்கம் தயாராக இருக்கிறது. அதை கற்றுக்கொண்டு நீங்கள் கிராமத்திற்கு சென்று குறைந்தப்பட்சம் ஒரு 10 பேருக்காவது சொல்லி கொடுக்க வேண்டும். இப்படி செய்தால் நம்நாட்டில் ஒரு பெரும் புரட்சியே நடந்துவிடும்.

அதுமட்டுல்ல, நாம் உண்ணும் அன்னம் நம் உயிருக்கு உதவியாக இருக்கும். நீங்கள் சாப்பிடும் அன்னத்தால் தான் சர்க்கரை நோய் உள்ளிட்ட நோய்கள் வருவதாக மருத்துவர்கள் சொல்கின்றனர். இதை நாம் மாற்ற வேண்டும். நெல் உள்ளிட்ட அனைத்து பயிர்களையும் இயற்கை விவசாயத்தின் மூலம் விளைவிக்க வேண்டும். ஏனெனில் நம் முன்னேற்றத்துக்கும் ஆரோக்கியத்திற்கும் இது மிகவும் முக்கியமானதாகும்.

நம் தமிழ்நாட்டில் இயற்கை விவசாயத்தை கொண்டு வந்து உணவை சத்துமிக்க உணவாக மாற்ற வேண்டும். மண்ணை சத்தான மண்ணாக வைத்துகொள்ள வேண்டும். இயற்கையை நல்ல நிலையில் வைத்து கொள்ள இயற்கை விவசாயம் மிக தேவையானது. மேலும், பொருளாதாரத்தில் உழவர்களுக்கு இது வரப்பிரசாதமாக இருக்கும்.

சத்குரு வேண்டுகோள் (Satguru's request)

ஆகவே, இயற்கை விவசாயத்தை தமிழகம் முழுவதும் கொண்டு சேர்க்கும் உறுதியை தமிழ் மக்கள் அனைவரும் இந்த பொங்கல் திருநாளில் எடுக்க வேண்டும். அதிலும் குறிப்பாக, தமிழ் இளைஞர்கள் இந்த உறுதியை கட்டாயம் எடுக்க வேண்டும்.

இவ்வாறு சத்குரு கூறியுள்ளார்.

மேலும் படிக்க...

ஒருங்கிணைந்த பண்ணையம் அமைக்க ரூ.60,000பின்னேற்பு மானியம்!

கைதிகள் சாகுபடி செய்த கரும்புகள்- விற்பனைக்குத் தயார்!!

நெருங்கி வருகிறது தைப் பொங்கல் - தொடர் மழையால் மண்பானைகள் தயாரிப்பு பாதிப்பு!

English Summary: Youth should take natural agriculture all over Tamil Nadu - Satguru Zaki Vasudev insists! Published on: 13 January 2021, 12:38 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.