நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்? விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 14 January, 2024 3:01 PM IST
Patent for Solar Flour Mill

விவசாயத்துறைக்கான சோலார் பம்ப் தயாரிப்பு நிறுவனங்களில் முதன்மையானதாக விளங்கும், சக்தி பம்ப்ஸ் ”புதுமையான சோலார் மாவு மில்” மற்றும் “கோலினியர் தன்மையுடன் ஒரு மேற்பரப்பு ஹெலிகல் பம்ப் கட்டுமானத்திற்கான” காப்புரிமையைப் பெற்று அசத்தியுள்ளது. இதன் மூலம் சக்தி பம்ப்ஸ் நிறுவனம் 10 தயாரிப்புகளுக்கான காப்புரிமையினைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதிக ஆற்றல் திறன் கொண்ட பம்புகள் மற்றும் மோட்டார்களில் நிபுணத்துவம் பெற்ற பிரபலமான நிறுவனமாக சக்தி பம்ப்ஸ் திகழ்கிறது. சூரிய ஆற்றலை பயன்படுத்தி விவசாயிகளுக்கான உள்ளீடு செலவுகளை குறைப்பதை நோக்கமாக கொண்டு பல்வேறு தயாரிப்புகளிலும் சக்தி பம்ப்ஸ் நிறுவனம் தனது கவனத்தை தொடர்ச்சியாக செலுத்தி வருகிறது.

சோலார் ப்ளோர் மில்:

அந்த வகையில் அவர்களின் புதிய தயாரிப்பான "சோலார் ஃப்ளோர் மில்" க்கு (Solar Flour Mill)- இந்திய அரசாங்கத்தால் சமீபத்தில் காப்புரிமை வழங்கப்பட்டுள்ளது. இது சக்தி பம்ப்ஸ் நிறுவனத்தின் 9 வது காப்புரிமை ஆகும். கிராமப்புறங்களில் மின்சார பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கான ஒரு குறிப்பிடத்தக்க முயற்சியாகவும் இது பார்க்கப்படுகிறது.

சோலார் மாவு மில், சோலார் பேனல்களைப் பயன்படுத்தி சுயாதீனமாக இயங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. மின் தேவையை நீக்குகிறது மற்றும் உள்கட்டமைப்பு செலவுகளைக் குறைக்கிறது. சுற்றுச்சூழல் தன்மையுடன் விவசாய நடைமுறைகளை ஊக்குவிப்பதன் ஒரு முயற்சியாகவும், விவசாயிகள் கூடுதல் வருமானம் ஈட்டுவதையும் இந்த தயாரிப்பு அடிப்படை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த காப்புரிமை, இந்திய அரசியலமைப்பின் 1970 ஆம் ஆண்டு காப்புரிமைச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விதிகளுக்கு இணங்க, காப்புரிமை தாக்கல் செய்யப்பட்ட தேதியிலிருந்து 20 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

10-வது காப்புரிமை:

சோலார் ப்ளோர் மில்லுக்கான காப்புரிமை பெற்ற சில நாட்களிலேயே, ”A SURFACE HELICAL PUMP CONSTRUCTION WITH COLLINEAR FLOW” (கோலினியர் ஃப்ளோவுடன் கூடிய மேற்பரப்பு ஹெலிகல் பம்ப் கட்டுமானத்திற்கான) காப்புரிமையையும் பெற்றுள்ளது சக்தி பம்ப்ஸ்.

சக்தி பம்ப்ஸ் நிறுவனத்தின் தலைவர் தினேஷ் படிதார் புதிய காப்புரிமை குறித்து தெரிவிக்கையில்,  "மின்சாரம் சார்ந்த மாவு ஆலைகள் அடிக்கடி நிலையற்ற மின்சாரம் மற்றும் அதிக பராமரிப்பு செலவுகள் போன்ற சவால்களை எதிர்கொள்கின்றன. உற்பத்தி செய்யப்படும் மாவின் தரத்தை பாதிக்கின்றன. கூடுதலாக, ஆலை உரிமையாளர்கள் பணிச்சுமை மற்றும் நிதிச்சுமையினை எதிர்க்கொள்கின்றனர். எங்களின் சோலார் ஃப்ளோர் மில், தொடர்ந்து சூரிய சக்தியில் இயங்குவதன் மூலமும், மின்சாரத்தை சார்ந்திருப்பதை குறைப்பதன் மூலமும், ஒழுங்கற்ற மின்சாரம் உள்ள பகுதிகளிலும் தடையின்றி செயல்படுவதை உறுதி செய்வதன் மூலமும் மேற்குறிப்பிட்ட பிரச்சினைகளுக்கு சிறந்த தீர்வை வழங்குகிறது” என்றார்.

சக்தி பம்ப்ஸ் நிறுவனத்தின் காப்புரிமை பெற்ற புதிய தயாரிப்புகள், கிராமப்புற சமூகங்களின் சமூக-பொருளாதார முன்னேற்றத்திற்கும் பங்களிக்கும் என தொழில் நுட்ப வல்லுநர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.

Read also:

Cold wave: அடுத்த 3 நாட்களுக்கு மூடுபனி குறித்து IMD கடும் எச்சரிக்கை

பொங்கல் அதுவுமா உச்சிக்கு ஏறிய முருங்கை- மற்ற காய்கறிகளின் விலை எப்படி?

English Summary: Shakti Pumps Limited Secures Patent for Solar Flour Mill
Published on: 14 January 2024, 03:01 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now