1. செய்திகள்

பொங்கல் அதுவுமா உச்சிக்கு ஏறிய முருங்கை- மற்ற காய்கறிகளின் விலை எப்படி?

Muthukrishnan Murugan
Muthukrishnan Murugan
vegetable price

கடந்த ஒரிரு மாதங்களில் தீபாவளி, புத்தாண்டு போன்ற பண்டிகை நாட்களின் போது காய்கறிகளின் வரத்து பெரிய அளவில் பாதிக்கப்படாத நிலையில், காய்கறிகளின் விலையும் ஒரளவு கட்டுக்குள் இருந்தது. இன்றைய தினம் போகி, அடுத்து பொங்கல் என தொடர்ச்சியாக பண்டிகை நாட்கள் வரிசைக்கட்டி காத்திருக்கும் நிலையில் காய்கறிகளின் விலை இன்று எவ்வாறு உள்ளது என்பதனை காணலாம்.

தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையின் முக்கிய சந்தையாக விளங்கும் கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ இஞ்சியின் விலை ரூ.140-ஐ நெருங்கியுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. அதே நேரத்தில் முருங்கை விலை ரூ.110- வரை எகிறியுள்ளது. இதைப்போல் கோயம்பேடு மார்கெட்டில் இன்றைய தினம் விற்கும் காய்கறிகளின் விலை நிலவரம் ( சேகரிக்கப்பட்ட தகவல்- விற்பனையாளர்களை பொறுத்து விலையில் ஒரு சில மாற்றம் இருக்கலாம் என்பதை நினைவில் கொள்க.) ஒரு கிலோவிற்கு காய்களின் இன்றைய விலை நிலவரம் பின்வருமாறு-

 • Onion Big (பெரிய வெங்காயம்) - ₹25
 • Onion Small (சின்ன வெங்காயம்) - ₹40
 • Tomato (தக்காளி) - ₹31
 • Green Chilli (பச்சை மிளகாய்) - ₹35
 • Beetroot (பீட்ரூட்) - ₹40
 • Potato (உருளைக்கிழங்கு) - ₹35
 • Amla (நெல்லிக்காய்) - ₹102
 • Baby Corn (சிறிய மக்காச்சோளம்) - ₹80
 • Banana Flower (வாழைப்பூ) - ₹25
 • Capsicum (குடைமிளகாய்) - ₹20
 • Capsicum Red (குடைமிளகாய்) - ₹150
 • Bitter Gourd (பாகற்காய்) - ₹40
 • Bottle Gourd (சுரைக்காய்) - ₹25
 • Butter Beans (பட்டர் பீன்ஸ்) - ₹64
 • Broad Beans (அவரைக்காய்) - ₹70
 • Cabbage (முட்டைக்கோஸ்) - ₹12
 • Carrot (கேரட்) - ₹35
 • Cauliflower (காலிஃபிளவர்) - ₹20 per 1 kg
 • Cluster beans (கொத்தவரை) - ₹40 per 1 kg
 • Coconut (தேங்காய்) - ₹25 per 1 kg
 • Cucumber (வெள்ளரிக்காய்) - ₹10 per 1 kg
 • Drumsticks (முருங்கைக்காய்) - ₹110 per 1 kg
 • Brinjal (கத்திரிக்காய்) - ₹30 per 1 kg
 • Brinjal (Big) (கத்திரிக்காய்) - ₹50 per 1 kg
 • Brinjal (Green) (கத்திரிக்காய்) - ₹45 per 1 kg
 • Elephant Yam (சேனைக்கிழங்கு) - ₹45 per 1 kg
 • French Beans (பீன்ஸ்) - ₹35 per 1 kg
 • Ginger (இஞ்சி) - ₹140 per 1 kg
 • Garlic (பூண்டு) - ₹180 per 1 kg
 • Garlic Small (பூண்டு) - ₹120 per 1 kg
 • Mango Raw (மாங்காய்) - ₹170 per 1 kg
 • Ladies Finger (வெண்டைக்காய்) - ₹45 per 1 kg
 • Pumpkin (பூசணி) - ₹25 per 1 kg
 • Radish (முள்ளங்கி) - ₹25 per 1 kg

பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் என தொடர்ச்சியாக பண்டிகை நாட்கள் வருவதால் நாளை அல்லது நாளை மறுதினம் விலையில் பெரிய அளவில் மாற்றம் ஏற்பட்டலாம் ஆச்சரியப்படுவதற்கு எதுவுமில்லை என வணிகர்கள் தரப்பில் தெரிவிக்கின்றனர்.

Read also:

Cold wave: அடுத்த 3 நாட்களுக்கு மூடுபனி குறித்து IMD கடும் எச்சரிக்கை

Onion seeds: முகப்பரு தொடர்பான பிரச்சினையா? வெங்காய விதை செய்யும் மேஜிக்

English Summary: Price of drumstick increase more than Rs 100 on the occasion of Pongal Published on: 14 January 2024, 11:57 IST

Like this article?

Hey! I am Muthukrishnan Murugan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.