பந்து மற்றும் அரவை கொப்பரைக்கான கொள்முதல்: தரம் எப்படி இருக்க வேண்டும்? நெல்-வாழை மற்றும் பயறு வகை பயிர்களுக்கான காப்பீடு- விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 16 May, 2022 8:06 AM IST

விவசாயிகளுக்கு 70 சதவீத மானியத்தில் சூரிய சக்தியால் இயங்கும் மோட்டாா் பம்ப்செட் அமைத்து தரப்படுவதாக வேளாண்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே விவசாயிகள் வாங்கிப் பயன்பெறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வேளாண்மைப் பொறியியல் துறை சாா்பில் சூரிய மின் உலா்த்தி, சூரிய மின் வேலி, சூரிய சக்தியால் இயங்கும் மோட்டாா் பம்ப் செட்டுகள், வேளாண் கருவிகள் வாடகைக்கு வழங்கும் திட்டம், பழுதான மின் மோட்டாரை புதுப்பிக்கும் திட்டம் உட்பட பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.


சோலாா் பம்ப்செட் அமைக்க அரசு சார்பில் 70 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டு 5 சோலாா் பம்ப்செட்டுகளும், நிகழ் ஆண்டு 7 பம்ப்செட்டுகளும் அமைக்கப்பட்டுள்ளன. இந்தத் திட்டத்தின் மூலம் மின்சார செலவு இல்லை, சுற்றுச்சூழல் பாதிப்பும் இல்லை. அதேநேரம் நிறைவான சாகுபடி செய்து அதிக மகசூல் பெற முடியும்.

சூரிய மின்வேலி அமைக்கும் திட்டத்தின் கீழ் காஞ்சிபுரம் அருகே முசரவாக்கம் கிராமத்தில் அரசு என்ற விவசாயிக்கு மானியத்தில் சூரிய மின்வேலி அமைக்கப்பட்டுள்ளது.

பயன்

இந்த வகையில், சூரிய மின்வேலை அமைப்பதால், காட்டு விலங்குகள் மற்றும் கால் நடைகளிலிருந்து விவசாயப் பயிா்களைப் பாதுகாத்து கூடுதல் மகசூல் பெற முடியும்.

தகுதி

சூரிய மின்வேலி அமைக்க விரும்பும் அனைத்து விவசாயிகளும் விண்ணப்பிக்கலாம்.

தேவைப்படும் ஆவணங்கள்

ஆதார் அட்டை
வாக்காளர் அடையாள அட்டை
நிலத்திற்கான பட்டா
நிலத்திற்கான சிட்டா
நில அடங்கல்
இருப்பிடச் சான்று

யாரிடம் அணுகுவது?

வேளாண்துறை அலுவலக ஊழியர்கள்
பஞ்சாயத்துக் கிளார்க்
வட்டார வளர்ச்சி அலுவலர்
இவர்களில் யாரேனும் ஒருவரிடம் இருக்கும் விண்ணப்பத்தைப் பெற்று விண்ணப்பிக்க வேண்டும்.

செயல்முறை

  • பூர்த்திச் செய்யப்பட்ட விண்ணப்பங்களை வேளாண் துறையில் கொடுக்க வேண்டும்.

  • அவர்கள் அதை வாங்கி மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்பி வைப்பர்.

  • பின்னர் விண்ணப்பங்கள் அந்தந்த ஒன்றிய அலுவலகங்களுக்கு முறையாக அனுப்பி வைக்கப்படும்.

  • இந்த விண்ணப்பங்களுடன் துணை வட்டார வளர்ச்சி அலுவலர், மற்றும் அதிகாரிகள் கொண்ட குழுக்கள் விவசாயிகளின் இடத்திற்கு வந்து பார்வை இடுவார்கள்.

  • அனைத்துச் சான்றுகளின் அடிப்படையில் உண்மைத் தன்மை இருந்தால் மின்வேலி அமைக்க மானியம் அளிக்கப்படும்.

  • விருப்பம் உள்ள விவசாயிகள் விண்ணப்பித்துப் பயன் பெறலாம்.

தகவல்
சிவ.ருத்ரய்யா
மாவட்ட வருவாய் அலுவலா்
காஞ்சிபுரம்

மேலும் படிக்க...

குடிசை வீட்டிற்கு ரூ. 2.5 லட்சம் கரண்ட் பில் - அடக் கொடுமையே.!

மழையால் உச்சம் தொட்டத் தக்காளி- கிலோ ரூ.75!

English Summary: Solar Pumpset Motor at 70% Subsidy- How to Apply?
Published on: 16 May 2022, 08:06 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now