விவசாய துறையில் லாபம் இருக்காது, விவசாயம் நலிவடைந்து வருகிறது என்று நாம் சொல்லிக்கொண்டு இருந்தாலும், திறம்படச் செயலாற்றினால் நிச்சயம் சாதிக்க முடியும் என்று சொல்வதற்கு விவசாயத்துறையில் இன்றும் சாதனையாளர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.
நவீனக் காலத்திற்கு ஏற்ற முறையில் நல்ல திட்டங்களை செயல்படுத்தினால் விவசாயத்துறையிலும் வணிக ரீதியாக நல்ல லாபத்தைப் பெற முடியும்.
இதில் அதிக முதலீடு தேவை இல்லை, நீங்கள் விவசாயியாக இருந்தாலும் சரி, அல்லது விவசாயம் சார்ந்த தொழில் துவங்க விருப்பம் உள்ளவர்களாக இருந்தாலும் சரி நீங்கள் இந்த சிறு தொழிலைத் துவங்கி அதிக லாபம் ஈட்டலாம். அத்தகைய எளிய முறை விவசாயம் சார்ந்த தொழில்களை இங்கே பட்டியலிட்டுள்ளோம்.
தேனீ வளர்ப்பு (Bee Keeping)
தேன் ஒரு நல்ல மருந்து, இது பல்வேறு மருந்துகள் மற்றும் ஆயுர்வேத மூலிகைகள் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிறது. தற்போது வளர்ந்து வரும் துறைகளில் தேனீ வளர்ப்பும் ஒன்று. எனவே அதன் தேவை எப்போதும் உலகளவில் உள்ளது. இதனால் தேனி வளர்ப்பினை ஊக்குவிப்பதில் மத்திய மாநில அரசுகளும் ஆர்வம் செலுத்தி வருகின்றன. எனவே புது தொழில் செய்யத் திட்டமிடுபவர்கள் தேனீ வளர்ப்பு குறித்து முறையான பயிற்சி மேற்கொண்டு இந்த தொழிலைச் செய்யலாம்
தித்திக்கும் தேன் உற்பத்தி & விற்பனையில் கலக்கும் ஈரோடு தம்பதி!
ஆரோக்கியம் முதல் அழகு வரை அனைத்திற்கும் தேன்!!
காளான் விவசாய தொழில் ( Mushroom Cultivation)
மிகக் குறைந்த முதலீட்டில் அதிக லாபம் கிடைக்கும் தொழிலில் காளான் வளர்ப்பும் ஒன்று. இது மிகவும் லாபகரமான ஒரு தொழில், ஏனெனில் மிகக் குறுகிய காலத்தில் நல்ல பணம் சம்பாதிக்க முடியும். நீங்கள் எப்போதாவது காளான் வளர்ப்பில் அனுபவம் இருந்தால், உங்கள் சொந்த காளான் விவசாயத் தொழிலை நீங்கள் தொடங்கலாம்.
அப்படி காளான் வளர்ப்பு குறித்து முன் அனுபவம் இல்லை என்றால் நீங்கள் அது தொடர்பான பயிற்சி எடுத்துக்கொள்ள வேண்டும். இதற்கு நீங்கள் அதிகம் சிரமப்படத் தேவை இருக்காது. இது தொடர்பாகப் பயிற்சிகள் ஒவ்வொரு மாநிலத்திலும் மாநில அரசால் வழங்கப்படுகிறது. இது தொடர்பாக உங்கள் மாவட்டத்தின் வேளாண் துறை அதிகாரிகளை அணுகி இது குறித்து விவரங்களைப் பெற்றுக் கொள்ளலாம்
குறைந்த முதலீடு நிறைவான வருமானம் தரும் ''காளான் வளர்ப்பு''!
இயற்றை உரம் தயாரித்தல் (Natural fertilizers)
லாபம் தர கூடிய மற்றுமொரு தொழில் இயற்கை உரம் தயாரிப்பு தொழிலும் ஒன்று. மாறி வரும் நவீன யுகத்தில் இன்று பெரும்பாலானோர் இயற்கை விவசாயத்தையே விரும்புகின்றனர். இதனால் இயற்கை முறையில் விளைவிக்கப்படும் பொருட்களுக்கு தற்போது சந்தை மதிப்பு உயர துவங்கியுள்ளது. எனவே இயற்கை விவசாயத்திற்கு ஏற்ற உரங்களைத் தயாரிப்பதன் மூலம் நீங்கள் இத்தொழில் அதிக லாபம் ஈட்ட முடியும்.
நல்ல விளைச்சல் வேண்டுமா? ஆர்கானிக் உரங்களை பயன்படுத்தி நல்ல பலன் பெறலாம்!
மலர் விவசாயம் (Floritec)
பூக்கள் மீது எப்போதுமே மக்களுக்கு ஆர்வம் உண்டு, அனைத்து விதமான பண்டிகைக்கும் பூக்கள் என்பது மிகவும் அவசியமான ஒன்று. அதனால் இந்த தொழிலை நல்ல பயிற்சி எடுத்துக்கொண்டு மேற்கொண்டால் நல்ல லாபம் ஈட்டலாம். அந்த அந்த காலத்திற்கு ஏற்ப பூக்களை நீங்கள் சாகுபடி செய்வதன் மூலம் நஷ்டம் இன்றி சம்பாதிக்க முடியும். மேலும் சில பூ வகைகள் மருத்துவம் மற்றும் அழகு சாதனத்திற்குப் பயன்படுகிறது. இதற்குப் பயன்படும் பூக்களை வளர்க்கலாம்.
ஒசூர் முதல் துபாய் வரை 'ரோஜா' ஏற்றுமதி - மலர் சாகுபடியில் அசத்தும் பட்டதாரி பாலசிவபிராசத்!
சேமிப்பு கிடந்து (Warehouse)
நல்ல தொழில்நுட்பம் கொண்டு ஒரு சேமிப்பு கிடங்கு அமைப்பதன் மூலம் நீங்கள் நீங்கள் இதில் அதிக லாபம் சம்பாதிக்கலாம். விவசாயத்தைப் பொருத்த வரை தட்டுப்பாடு ஏற்படும் போது தான் விவசாயிகள் விளைவித்த பொருட்களுக்கு அதிக லாபம் பெற முடியும். இதனால் பெரும்பாலான விவசாயிகள் மற்றும் வர்த்தகர்கள் தங்கள் விளை பொருட்களை அதிகம் சேமித்து வைக்க விரும்புகின்றனர். எனவே இது போன்ற சூழலில் சேமிப்பு கிடங்கின் தேவை எப்போதும் அதிகம் இருந்து வருகிறது.
இதனால் விவசாயம் அதிகம் உள்ள பகுதியில் சேமிப்பு கிடங்கு துவங்குவது என்பது மிகவும் லாபமான தொழிலாக இருக்கும்.
கலப்பினம் இல்லாத பாரம்பரிய நெல் ரகங்கள்! - இயற்கை விவசாயத்தில் அசத்தும் விவசாயி ''சாந்திகுமார்''!