திண்டிவனம் 7, 13, 14, பி.எஸ். ஆர் 2, விருத்தாச்சலம் 6, 7, 8 ஆகிய நிலக்கடலை ரகங்கள் ஆடிப் பட்டத்திற்கேற்றவையாக உள்ளன. நிலத்தை சட்டி கலப்பையால் உழுத பின் 2 முறை கொக்கி கலப்பையால் உழ வேண்டும். பின்னர் 12.5 டன் தொழு உரம் இட்டால் மண்ணின் நீர்ப்பிடிப்பு திறன் அதிகரிக்கும். இறவை பயிராக இருந்தால் 15 அடிக்கு 10 அடியாக சமதள பாத்தி அமைக்க வேண்டும்.
நிலக்கடலை சாகுபடி (Groundnut Cultivation)
ஏக்கருக்கு 44 கிலோ டி.ஏ.பி., 48 கிலோ பொட்டாஷ், 80 கிலோ ஜிப்சத்தை விதை நடுவதற்கு முன் அடியுரமாக இடவேண்டும். மானாவாரி பயிராக இருந்தால் பாதி உரம் போதும். ஏக்கருக்கு 50 கிலோ விதை தேவை. ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் சூடோமோனஸ் கலந்து விதைநேர்த்தி செய்யவேண்டும். மீண்டும் தலா 2 பொட்டலம் ரைசோபியம், பாஸ்போ பாக்டீரியா உரங்களுடன் அரிசிக்கஞ்சி கலந்து விதை நேர்த்தி செய்தால் அனைத்து பூஞ்சான நோய்களில் இருந்தும் பாதுகாக்கலாம்.
விதைக்கும் போது ஒரு சதுரமீட்டருக்கு 33 செடிகள் இருப்பதே நல்லது. முதிர்ந்த இலைகள் காய்வதும், மேல்மட்ட இலைகள் மஞ்சளாவதும் காய்கள் முதிர்ச்சியாவதை குறிக்கும். ஓட்டின் உட்புறம் பழுப்பு கலந்த கருப்பு நிறத்தில் இருந்தால் காய்கள் முற்றியிருக்கும். அறுவடைக்கு முன் நீர் பாய்ச்சினால் சுலபமாக செடிகளை பிடுங்கலாம். காய்களை பிரித்து மிதமான வெயிலில் உலர்த்தி 12 சதவீத நீர்ச்சத்துடன் இருக்கவேண்டும்.
நன்கு பராமரித்தால் ஏக்கருக்கு 30 மூட்டைகள் அல்லது 1000 கிலோ உலர்ந்த காய்கள் பெறலாம். மானாவாரியில் 22 மூட்டை கிடைக்கலாம்.
மனோகரன், சஞ்சீவகுமார் மணிகண்டன்
உதவி பேராசிரியர்கள் வேளாண்மை ஆராய்ச்சி நிலையம்
கோவில்பட்டி
94420 39842
மேலும் படிக்க
மானிய விலையில் விவசாயிகளுக்கு இடுபொருட்கள்: ரூ. 1 கோடி ஒதுக்கீடு!
நெற்பயிரில் மகசூல் பெற நல்விதைகளே அவசியம்: விதைச்சான்று துறை!