1. விவசாய தகவல்கள்

மானிய விலையில் விவசாயிகளுக்கு இடுபொருட்கள்: ரூ. 1 கோடி ஒதுக்கீடு!

R. Balakrishnan
R. Balakrishnan
Subsidized inputs for farmers

விழுப்புரம் மாவட்டத்தில் புரதச்சத்து அதிகம் உள்ள பயறு வகைகளின் சாகுபடியை அதிகரிக்க நடப்பாண்டில் தேசிய உணவு பாதுகாப்பு இயக்கம், பயறு வகைகள் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு மானிய விலையில் விதைகள் மற்றும் இடுபொருட்கள் வழங்கிட ரூ. 1 கோடி நிதியை ஒதுக்கி உள்ளது. 2021-22-ம் ஆண்டில் விழுப்புரம் மாவட்டத்தில் 33, 100 எக்டர் பரப்பளவில் பயறு வகைகள் சாகுபடி மேற்கொள்ளப்பட்டது.

விதைகள் விநியோகம் (Seeds distribution)

நடப்பாண்டில் விழுப்புரம் மாவட்டத்திற்கு பயறு விதைகள் சாகுபடி இலக்கு 50,500 எக்டர் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பயறு வகைகள் சாகுபடி பரப்பை அதிகரிக்க இத்திட்டத்தின் கீழ் 1,500 எக்டர் பரப்பளவில் கிலோ ஒன்றுக்கு ரூ. 50 வீதம் விதை மானியத்தில் 30 மெட்ரிக் டன் உளுந்து விதைகள் விநியோகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் கொள்முதல் செய்யப்பட்ட 76 மெட்ரிக் டன் உளுந்து விதைகளுக்கு கிலோ ஒன்றுக்கு ரூ. 25 மானியம் வழங்க இலக்கு பெறப்பட்டுள்ளது. இதை வட்டாரங்களுக்கு பகிர்ந்தளித்து விவசாயிகளுக்கு வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மானியம் (Subsidy)

உயிர் உரம் 3,398 எக்டருக்கும், நுண்ணூட்டக்கலவை உரம் 700 எக்டருக்கும் 50 சதவீத மானிய விலையில் இடுபொருட்கள் வழங்கப்பட உள்ளது. பயிர் பாதுகாப்பு மருந்து விநியோகத்திற்கு, பின்னேற்பு மானியமாக 400 எக்டருக்கு 50 சதவீத மானியம் வழங்கப்பட உள்ளது. மேலும் பயறு வகை பயிர்கள் சாகுபடி செய்யும் சிறு, குறு பெண் மற்றும் ஆதிதிராவிடர், பழங்குடியின விவசாயிகளுக்கு சுழற்கலப்பை ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ. 42 ஆயிரம் அல்லது 50 சதவீத மானியத்திலும், இதர விவசாயிகளுக்கு ரூ. 34 ஆயிரம் அல்லது 50 சதவீத மானியத்திலும் வழங்கப்பட உள்ளது.

பயறு வகை பயிர்கள் சாகுபடி செய்யும் சிறு, குறு பெண் மற்றும் ஆதிதிராவிடர், பழங்குடியின விவசாயிகளுக்கு மின்கல தெளிப்பான் ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ. 3,800 அல்லது 50 சதவீத மானியத்திலும் இதர விவசாயிகளுக்கு ரூ. 3,000 அல்லது 50 சதவீத மானியத்திலும் வழங்கப்பட உள்ளது. இத்திட்டத்தில் பயன்பெற, உழவன் செயலி மூலம் முன்பதிவு செய்யும் விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். பயறுவகை பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகள் உரிய ஆவணங்களை தங்கள் பகுதி வேளாண்மை விரிவாக்க மையங்களில் சமர்ப்பித்து பயன் பெறலாம்.

மேலும் படிக்க

தரமான விதைநெல் வேண்டுமா? இவர்களைத் தொடர்பு கொள்ளுங்கள்!

பசு கோமியத்தை வாங்கும் மாநில அரசு: கால்நடை வளர்ப்போர் மகிழ்ச்சி!

English Summary: Subsidized inputs for farmers: Rs. 1 crore allocation! Published on: 19 July 2022, 07:07 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.