மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 1 June, 2022 5:20 PM IST
Subsidy for agricultural machinery: Apply today

குறைந்து வரும் பண்ணை வேலையாட்கள், பெருகி வரும் மக்கள் தொகை, பொருளாதார பற்றாக்குறை உள்ளிட்ட காரணிகளால் வேளாண்துறையில் இயந்திர மயமாக்குதல் என்பது அவசியமாகிறது. மாறி வரும் நவீன உலகிற்கு ஏற்ப வேளாண் தொழிலை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல வேண்டியதும் அவசியமாகிறது.

வேளாண்மையில் இயந்திரமயமாக்கல் திட்டத்தின் கீழ் வேளாண்மை இயந்திரங்கள் வாங்குவதற்கு அரசு மானியம் பெற விரும்பும் விவசாயிகள், வேளாண்மை பொறியியல் துறை உப கோட்ட அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

வேளாண்மை பணிகளுக்குத் தேவையான டிராக்டர் ரோடவேட்டர், சட்டி கலப்பை, கொக்கி கலப்பை, மருந்து தெளிப்பான போன்ற இயந்திரங்கள் அரசு சார்ப்பில் சிறு, குறு விவசாயிகள், பெண் மற்றும் ஆதி திராவிடர் வகுப்பு விவசாயிகளுக்கு 50 சதவீதம் மானிய விலையிலும், இதர விவசாயிகளுக்கு 40 சதவீதம் மானிய விலையிலும் முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படும்.

வேளாண்மை இயந்திரங்களுக்கு மானியம் பெற விரும்பும் விவசாயிகள் உரிய ஆவணங்களுடன் அந்தந்த வட்டாரத்தில் உள்ள வேளாண்மை பொறியியல் துறை உப கோட்ட அலுவலகத்தில் தொடர்பு கொண்டு விண்ணப்பிக்கலாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். இது குறித்து தொடர்பு எண்கள் மூலம் சந்தேகங்களுக்கான தீர்வு காணலாம். தொடர்பு எண்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

வேலைவாய்ப்பு செய்தி: ஒன்றிய அரசில் 2065 காலி பணியிடங்கள் விண்ணப்பிக்க ஜூன் 13 கடைசி நாள்

இது குறித்த விபரங்களை தேனி வேளாண்மை பொறியியல் உதவி செயற்பொறியாளர் அலுவலக தொலைபேசி எண்: 045462-25155, கைபேசி எண்: 9940702357, உத்தமபாளையம் வேளாண்மை பொறியியல் உதவி செயற்பொறியாளர் அலுவலக தொலைபேசி எண்: 04554265132, கைபேசி எண்: 9486363555-ல் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என்று அறிவிப்பு வெளியாகியிருப்பது குறிப்பிடதக்கது.

நவீன பண்ணைக் கருவிகள்

இன்றைய நிலையில் இந்தியாவில் 7.5 லட்சம் நீர் இறைக்கும் பம்புகளும், 6 லட்சம் டிராக்டர்களும், 60000 பவர் டில்லர்களும், 4 லட்சம் கதிரடிக்கும் இயந்திரங்களும், 4.5 லட்சம் தெளிப்பான்களும், 2000 கூட்டு அறுவடை இயந்திரங்களும் என ஆண்டு ஒன்றுக்கு உற்பத்தி செய்யப்பட்டு விற்பனைக்கு வருவதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

Drink: சூப்பரான நெல்லியின் Detoxide Drink!

நம்நாட்டு வேளாண்மைக்கு தகுந்தவாறு பல்வேறு ஆராய்ச்சி நிறுவனங்கள், வேளாண் பல்கலைக்கழகங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களின் வாயிலாக பெரும்பாலான கருவிகள் நம் விவசாயிகள் பயன்படுத்த பெரிதும் வழிவகை செய்கின்றன.

பண்ணைக் கருவிகளுக்கான அரசு மானியம்

தமிழகத்தில், விவசாயிகளின் வருமானத்தையும், வேளாண்மை உற்பத்தியையும் அதிகரித்திட வேளாண்மை பெறியியல் துறை மூலம் வேளாண்மை இயந்திரமயமாக்கும் திட்டத்தை (Government subsidy for farm implements) ஒவ்வொரு ஆண்டும் செயல்படுத்தி வருகிறது. இதனால் பண்ணை பணியாளர்களின் பற்றாக்குறை நிவர்த்தி செய்யப்பட்டு, வேளாண் இயந்நிரங்கள் மற்றும் கருவிகளை விவசாயிகளுக்கு மானிய அடிப்படையில் வழங்குவதும், புதிய இயந்திரங்களை மற்றும் கருவிகளை விவசாயிகளிடையே பிரபலபடுத்துவதும் மேளாண்மை இயந்திரமயமாக்கும் திட்டத்தின் செயல்பாடுகளாகும்.

வேளாண்மை இயந்திரமயமாக்கும் துணை இயக்கத் திட்டம்

மத்திய அரசுடன் இணைந்து சென்னை நீங்கலாக தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் வேளாண்மை இயந்திரமயமாக்கும் துணை இயக்கத் திட்டம் (Sub Mission on Agricultural Mechanization) நடைமுறையில் இருந்து வருகிறது. இதில் மத்திய அரசு 60 சதவீதமும் , மாநில அரசு 40 சதவீதம் என்ற அடிப்பயில் பங்களிப்பாக உதவிகளை செய்து வருகிறது.

இந்த திட்டத்தின் மூலம் பண்ணை சக்தி குறைவாக உள்ள இடங்களில், சிறு மற்றும் குறு விவசாயிகளிடையே வேளாண்மை இயந்திரமயமாக்குதலை ஊக்குவித்தல் மற்றும் வேளாண் இயந்திரங்கள் வாடகை மையங்களை ஏற்படுத்தி விவசாயிகளுக்கு தேவையான வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளை வாடகைக்கு வழங்குதல் உள்ளிட்டவை நேக்கமாக கொண்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த திட்டத்தின் (SMAM) மூலம் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளான டிராக்டர் சுழற்கலப்பை, பவர்டில்லர், நெல் நாற்று நடவு செய்யும் இயந்திரம் , விசைக்களையெடுப்பான், தட்டை வெட்டும் கருவி, புதர் அகற்றும் கருவி மற்றும் பல்வகைப்பயிர் கதிரடிக்கும் இயந்திரம் ஆகியவற்றினை தனிப்பட்ட விவசாயிகள் வாங்குவதற்கும், வேளாண் இயந்திரங்கள் வாடகை மையங்கள் அமைப்பதற்கும் அரசு மானியம் வழங்குகிறது.

வேளாண்மை பொறியியல் துறையால் அங்கீகாரம் மற்றும் ஒப்புதல் வழங்கப்படும் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் தயாரிக்கும் நிறுவனங்களிடமிருந்து விவசாயிகள், விவசாய குழுக்கள், தொழில் முனைவோர்கள் தங்களுக்கு தேவைப்படும் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளின் வகைகள் மற்றும் மாடல்களை விவசாயிகளின் விருப்பத்தின்படி தேர்வு செய்து கொள்ளலாம்.

தகுதிகள்

தனிப்பட்ட விவசாய இயந்திரங்களை அனைத்து விவசாயிகளும் கொள்முதல் செய்யலாம்.

வட்டார அளவில் வேளாண் இயந்திரங்கள் / கருவிகள் வாடகைக்கு வழங்கும் மையங்கள் நிறுவுவதற்கு - விவசாயிகள்/ விவசாயக் குழுக்கள்/ தொழில் முனைவோர்களாக இருக்கவேண்டும்

கிராம அளவிலான வேளாண் இயந்திரங்கள் வாடகை மையங்களை அமைப்பதற்கு விவசாயக் கூட்டுறவு சங்கங்கள் / விவசாய சுய உதவிக்குழுக்கள்/ உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் உள்ளிட்ட கிராம அமைப்புகளாக இருந்தல் வேண்டும்.

உழவன் செயலி

தனி விவசாயிகள் உழவன் செயலி மூலம் (Uzhavan APP) மானிய விலையில் இயந்திரங்ளை பெற வழிவகை செய்யப்படுள்ளது. இதன் மூலம் அவர்களின் விண்ணப்பங்கள் மத்திய அரசின் இணையதளமான www.agrimachinery.nic.in உடன் இணைக்கப்படும் பின்னர் இயந்திரங்களை மானிய விலையில் பெறுவதற்கான நடைமுறைகள் மேற்கொள்ளப்படும்.

மேலும் படிக்க:

PM-kisan ரூ.2000 அனுப்பியாச்சு- வந்துருச்சான்னு Check பண்ணுங்க!

ABHA : மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட Health Card! எப்படி பெறுவது?

English Summary: Subsidy for agricultural machinery: Apply today
Published on: 01 June 2022, 05:20 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now