1. விவசாய தகவல்கள்

PM-kisan ரூ.2000 அனுப்பியாச்சு- வந்துருச்சான்னு Check பண்ணுங்க!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar

PM-Kisan திட்டத்தில் இணைந்துள்ள விவசாயிகளில், 10 கோடிக்கு மேற்பட்டோரின் வங்கிக்கணக்கில் 2000 ரூபாய் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. எனவே உங்களுக்கு ரூ.2000 வந்துவிட்டதா என்பதை இப்படி செக் செய்து பாருங்கள். ஷிம்லாவில் நடைபெற்ற நிகழ்வின்போது பிரதமர் நரேந்திர மோடி இதற்கான பணத்தை வெளியிட்டார்.

கிசான் சம்மன் நிதி திட்டம்

விவசாயிகளுக்கு பண உதவி வழங்குவதற்காக 2019ஆம் ஆண்டு பிரதமர் கிசான் சம்மன் நிதி திட்டம் (PM Kisan Samman Nidhi Yojana) தொடங்கிவைக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6000 ரூபாய் வழங்கப்படுகிறது.

​2000 ரூபாய்

விவசாயிகளுக்கு கிசான் பணம் 6000 ரூபாய் என்பது நான்கு மாதங்களுக்கு ஒரு முறை 2000 ரூபாய் என மூன்று தவணைகளாக பிரித்து வழங்கப்படுகிறது. இதுவரை 10 தவணைகளாக 2000 ரூபாய் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

​11- வது தவணை

பிரதமர் கிசான் சம்மன் நிதி திட்டத்தின் 11ஆவது தவணை பணம் மே 31ம் தேதி அனுப்பி வைக்கப்படும் என ஏற்கெனவே மத்திய அரசு தெரிவித்திருந்தது. எனவே, விவசாயிகள் மிகுந்த ஆவலுடன் காத்திருந்தனர்.

ரூ. 21,000 கோடி

திட்டமிட்டபடி ஷிம்லாவில் நேற்று நடைபெற்ற நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். அப்போது 10 கோடிக்கு மேற்பட்ட விவசாயிகளுக்கு கிசான் பணம் 21,000 கோடி ரூபாயை பிரதமர் நரேந்திர மோடி அனுப்பிவைத்தார். ​பிரதமர் கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் அனுப்பப்படும் 2000 ரூபாய் பணம் விவசாயிகளின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக செலுத்தப்பட்டுவிடும்.

Check செய்வது எப்படி?

  • உங்களுக்கு கிசான் பணம் வந்துவிட்டதா என்பதை எப்படி தெரிந்துகொள்வது?

  • PM kisan இணையதளத்துக்கு செல்லவும்.

  • அதில் உள்ள 'Beneficiary Status' பிரிவை கிளிக் செய்யவும்.

  • அதில் ஆதார் எண், வங்கிக் கணக்கு எண், மொபைல் எண் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்யவும்.

  • Get Data ஆப்ஷனை கிளிக் செய்தால் உங்களுக்கு பணம் வருமா என்ற விவரத்தை தெரிந்துகொள்ளலாம்.

மேலும் படிக்க...

நான் கோமா நிலையில் இல்லை - நித்தியானந்தாவின் அப்டேட்!

ஜூன் 9ம் தேதி திருமணம் - லீக் ஆனது கல்யாணப் பத்திரிக்கை!

English Summary: Send Rs.2000 of PM-kisan scheme- Check out Vanduruchannu! Published on: 01 June 2022, 08:05 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.