தோட்டக்கலை துறையின் மூலம் மானிய விலையில் மாடித் தோட்டம் அமைப்பதற்கு உதவும் வகையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் மாடித்தோட்டக் கிட் வழங்கப்படுகின்றது. இது குறித்த கூடுதல் தகவல்களை இப்பதிவில் பார்க்கலாம்.
மாடி தோட்டம் அமைப்பதைப் பலரும் விரும்பும் நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தில், தோட்டக்கலை துறையின் மூலம் மானிய விலையில் மாடித் தோட்டம் அமைப்பதற்கான உபகரணங்கள் வழங்கப்படுகின்றன எனக் கூறப்படுகிறது. எனவே, மாடித்தோட்டம் அமைக்க விரும்புபவர்கள் இந்த கிட்டினைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
தற்பொழுது பலரும் மாடி தோட்ட செயல்முறையை விரும்புகின்றனர். அதாவது தங்களுக்குத் தேவையான காய்கறி செடிகள், மூலிகை செடிகள் போன்றவற்றை மாடியில் வைத்து வளர்த்து வருவதை வாடிக்கையாகக் கொண்டு இருக்கின்றனர். இந்த மாடி தோட்டமானது நகர்ப்புறங்களிலும் தற்பொழுது அதிக அளவிலான வரவேற்பினைப் பெற்று இருக்கிறது.
ஆகவே, பலரும் மூலிகை செடிகளையும் மாடித் தோட்டத்தின் மூலம் வளர்த்துப் பயன்பெற வேண்டும் என்ற நோக்கில் தமிழக அரசு தோட்டக்கலை துறை மூலம் மாடித்தோட்ட மூலிகை தொகுப்பினைக் குறிப்பிட்ட மானிய விலையில் வழங்கி வருகின்றது. மாடித்தோட்டம் அமைப்பதற்கான மானிய விலையில் உபகரணங்களைகளைத் தமிழக அரசு கொடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. தோட்டக்கலைத்துறை சார்பில் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டம் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கிடைக்கும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த மாடித்தோட்ட தொகுப்பினை அனைவருமே பெற்றுக் கொள்ளலாம் எனக் கூறப்படுகிறது. அதாவது அருகில் இருக்கும் தோட்டக்கலைத் துறை அலுவலகங்களிலும், உழவன் செயலி மூலமாக பதிவு செய்தும் இந்த தொகுப்பினைப் பெற்றுக் கொள்ளலாம் எனக் கூறப்பட்டுள்ளது. மானிய விலையில் வழங்கப்படுகின்ற மூலிகை மாடி தோட்ட தொகுப்பில் கீழ்வரும் பொருட்கள் வழங்கப்படுகின்றன. 10 குரோபேக்குகள், 20 கிலோ தேங்காய் நார் கட்டிகள், 4 கிலோ மண்புழு உரம், அத்துடன் 10 மூலிகை செடிகள் தொகுப்பாக வழங்கப்படுகிறது. இந்த மாடி தோட்ட மூலிகை தொகுப்பின் மொத்த விலை 1,500 அதில் 750 அரசின் மானியமாகவும், வாங்குபவர்களின் பங்கு தொகையாக 750 ரூபாயும் இருக்கிறது.
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையை சேர்ந்த பெண் புவனேஸ்வரி என்ற பெண் மாடித் தோட்டம் அமைக்க மூலிகைத் தலைத் தொகுப்பினை மானிய விலையில் பெற்றுக்கொண்டுள்ள்ளார். அவர் இது குறித்து கூறுகையில், இந்த தொகுப்பு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது என்றும், ஒவ்வொரு பொருளையும் வெளியே வாங்கினால் தனித்தனியாக வாங்க வேண்டிய தேவை இருக்கும் என்றும் கூறியுள்ளார்.
இருப்பினும், இது தொகுப்பாக மொத்தமாக ஒரே இடத்தில் கிடைப்பதனால் போக்குவரத்து செலவினங்களும் மிச்சம் ஆகிறது என மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். அதோடு, மாடித்தோட்டத்தில் காய்கறி செடிகளோடு இந்த மூலிகை தொகுப்பையும் வளர்ப்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது என்று தெரிவித்தார்.
மேலும் படிக்க
தமிழக நீர்ப்பாசனத் திட்டம் மறுஆய்வு! உலக வங்கி அதிகாரிகள் வருகை!!
1 கோடி குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000! தமிழக முதல்வர் உத்தரவு!!