வேளாண்மை - உழவர் நலத்துறை சார்பில் உயர் மகசூல் தரும் கரும்பு ரகங்களை பிரபலப்படுத்த கரும்பு சாகுபடி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் வல்லுநர் விதைக்கரும்பு கொள்முதல் செய்ய ஏக்டருக்கு ரூ. 12,500 மானியம் வழங்கப்படுகிறது. அதே நேரம்,
திசுவளர்ப்புக்கு ரூ. 90,000மும், பருசீவல் நாற்றுக்கள் ரூ. 12,500 மற்றும் ஒற்றைப்பரு விதைக்கரணகளுக்கு ரூ. 3,750தும் மானியம் வழங்கப்படுகிறது. மேலும் விபரங்களுக்கு www.tnagrisnet.tn.gov.in/ என்ற அதிகார்ப்பூர்வ இணையத்தளம் அல்லது அருகிலுள்ள வேளாண் விரிவாக்க மையங்களை அணுகுங்கள்.
2.உரம் தொடர்பான புகாருக்கு இந்த எண்ணை அழைக்கவும்
சென்னை வேளாண்மை இயக்குநர் அலுவலகத்தில் உர உதவி மையம் அமைக்கப்பட்டு, வாரத்தின் அனைத்து நாட்களிலும் இயங்கி வருகிறது. எனவே உரம் தொடர்பான புகார்கள் ஏதும் இருந்தால், விவசாயிகள் 9363440360 என்ற எண்ணை வாட்ஸப் மூலமாகவோ அல்லது வாய்மொழியாகவோ தெரிவிக்கலாம், இந்த புகாருக்கான நடவடிக்கை விரைவில் எடுக்கப்பட்டு பிரச்சனைக்கான தீர்வு காணலாம். என வேளாண் உழவர் நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
3.மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் கூடம் ரூ.50,000 மானியம்
தோட்டக்கலை - மலைப்பயிர்கள் துறை சார்பாக, பனை மேம்பாட்டு இயக்கம் 2022-23 இன் கீழ் 160 அடியில் பனை மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் நிரந்தர கூடம் கட்டமைப்பிற்கு 50 சதவீதம் பின்னேற்பு மானியமாக ஒரு அலகிற்கு ரூ.50,000/- வீதம் வழங்கப்படுகிறது. இது குறித்து விரிவான தகவலுக்கு tnhorticulture.tn.gov.in/tnhortnet/index.php என்ற இணையத்தளம் வாயிலாக தெரிந்துக்கொள்ளலாம். அல்லது அருகிலுள்ள தோட்டக்கலை துறையை அணுகலாம்.
4.தொழில் முனைவோருக்கான அரிய வாய்ப்பு: MSME மற்றும் FSSAI இணைந்து நடத்தும் பயிற்சி
உணவுப் பொருள் உற்பத்தி உணவு பதப்படுத்துதல் மற்றும் பேக்கிங் சம்பந்தமான தொழில் ஆர்வம் உள்ள தொழில் முனைவோருக்கு 35% அரசு மானியத்துடன் கூடிய வங்கிக் கடனுதவி, தொழில்முறை பயிற்சி, மேலும் நிறுவன சான்று MSME & FSSAI ஆகியவை பெற்று தரப்படும். இப் பயிற்சி இந்திய குடிமக்களாகவும் மற்றும் 18 வயது நிரம்பி இருத்தல் வேண்டும். பெண்களுக்கு முன் உரிமை அளிக்கப்படும். மேலும், சிபில் ஸ்கோர் 750க்கு குறையாமல் இருத்தல் மிக அவசியம் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ப்புக்கு மாவட்ட வள நபர் M.பாலமுருகன் ME தொடர்புக் கொள்ள 9943491402 எண்ணை அழைக்கவும்.
5.கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்
தமிழகத்தின் மிகவும் பிரசித்து பெற்ற கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு தொலைதூர பயணிகள் திருவண்ணாமலைக்கு சென்று வர ஏதுவாக நாகர்கோவில், திருநெல்வேலி, தூத்துக்குடி, செங்கோட்டை, மதுரை மற்றும் கோயம்புத்தூர் ஆகிய ஊர்களிலிருந்து அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மூலம் அதிநவீன சொகுசு பேருந்துகள், இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட குளிர்சாதன பேருந்துகள் டிசம்பர் 5 மற்றும் டிசம்பர் 6 ஆகிய நாட்களில் இயக்கப்பட உள்ளது. இச்சிறப்பு பேருந்துகளுக்கு www.tnstc.in, மற்றும் tnstc official app, ஆகிய இணையதளங்களின் மூலமாக இருபுறமும் முன்பதிவு செய்து பயணிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
6.1.5 ஏக்கரில், 5 மாதங்களில், ரூ.1.25 லட்சம் லாபம்: பலபயிர் சாகுபடி செய்து அசத்தும் விவசாயி!
காய்கறிச் சாகுபடியில் ஆர்வம் உள்ள விவசாயிகள், ஒரே வகையான காய்கறியை அதிக பரப்பில் சாகுபடி செய்வதைவிட, தன்னுடைய நிலத்தைப் பல பகுதிகளாகப் பிரித்து வெவ்வேறு வகையான காய்கறிகளைப் பயிர் செய்வதுதான் நல்ல லாபம் ஈட்டலாம். இதற்கு உதாரணமாகத் திகழ்கிறார், திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி பொன்னு புதியவன். இவர், ஒன்றரை ஏக்கர் பரப்பில்... கத்திரி, வெண்டை, அவரை, தக்காளி, மிளகாய் ஆகிய ஐந்து விதமான காய்கறிகளை இயற்கை முறையில் சாகுபடி செய்து உத்தரவாதமான லாபம் பார்த்து வருகிறார்.
7.மேட்டூர் அணையில் தண்ணீர் திறப்பு: 45,000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்
மேட்டூர் கிழக்கு மற்றும் மேற்கு கரைக் கால்வாய்கள் மூலம் சேலம், நாமக்கல் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் பாசனம் பெறும் 45,00 ஏக்கர் பதிவு பெற்ற ஆயக்கட்டு நிலங்களுக்கு பாசன வசதி அளிக்கும் பொருட்டு 30 நவம்பர் முதல் 15 ஜனவரி 2023 வரை நீட்டிப்பு செய்து தண்ணீர் திறந்து விடுமாறு கோரிய மேட்டூர் வலது கரை (மேற்கு கரை) வாய்க்கால் விவசாயிகள் பாசன சங்கத்தின் கோரிக்கையினை ஏற்று, நாளோன்றுக்கு
600 கனஅடி / வினாடி வீதம் மேலும் 47 நாட்களுக்கு கால நீட்டிப்பு செய்து தண்ணீர் திறந்து விட அரசு ஆணையிட்டுள்ளது.
8.வணிக பருத்தி மற்றும் நூல் விலை உயர்வு; திருப்பூரில் வேலைநிறத்தம்
திருப்பூரில் ஜவுளி மற்றும் துணி உற்பத்தியை 14 நாட்களுக்கு நிறுத்த ஆடை உற்பத்தியாளர்கள் முடிவு செய்துள்ளனர். பருத்தி நூல், பஞ்சு விலை உயர்வு, சேமிப்பு பற்றாக்குறை, மின் கட்டணம் உயர்வு போன்ற காரணங்களால் ஒரு மீட்டர் துணி ரூ.3 முதல் ரூ.4 வரை நஷ்டத்தில் தயாரிக்கப்படுகிறது. தீபாவளி, பொங்கல் மார்க்கெட்டை எதிர்பார்த்து அதிக அளவில் துணிகள் செய்ததாகவும், ஆனால் விற்பனை குறைந்துள்ளதாகவும் உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
9.நொய்யல் ஆத்துப்பாளையம் நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறப்பு
கரூர் மாவட்டம், புகளூர் வட்டம், நொய்யல் ஆத்துப்பாளையம் நீர்த்தேக்கத்திலிருந்து நொய்யல் கால்வாயிலுள்ள பாசனப் பகுதிகளுக்கு 07.12.2022 முதல் 04.02.2023 வரை 40 நாட்களுக்கு 276.480 மில்லியன் கன அடிக்கு மிகாமல் சிறப்பு நனைப்பிற்கு தண்ணீர் திறந்து விட அனுமதி அளித்து அரசு ஆணையிட்டுள்ளது. இதனால், கரூர் மாவட்டம், புகளூர் மற்றும் மண்மங்கலம் வட்டங்களிலுள்ள 19480 ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெறும். இதனால், கரூர் மாவட்டம், புகளூர் மற்றும் மண்மங்கலம் வட்டங்களிலுள்ள
19ஆயிரத்து 480 ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெறும்.
10.இந்திய மசாலா ஏற்றுமதி மன்றத்தின் தலைவர் நியமணம்
சஞ்சீவ் பிஷ்ட் வரும் ஆண்டிற்கான அகில இந்திய மசாலா ஏற்றுமதி மன்றத்தின் AISEF
தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1987 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட AISEF, நாட்டில் உள்ள மசாலா ஏற்றுமதியாளர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்காகவும், மசாலாத் துறைக்கும் அதன் பங்குதாரர்களுக்கும் நிலையான, வளர்ச்சிக்கு ஆதரவான வணிகச் சூழலை உருவாக்குவதற்கும் செயல்படுகிறது. அவரின் இந்த புதிய பாத்திரத்திற்கு உங்கள் ஆதரவையும் வாழ்த்துகளையும் எதிர்பார்ப்பதாக தெரிவித்தார் திரு.சஞ்சீவ் பிஷ்ட் அவர்கள்.
11.FICCI: நிலையான வேளாண்மை மாநாடு 2022, இன்று ஏற்பாடு
FICCI ஆனது 2022 ஆம் ஆண்டுக்கான நிலையான வேளாண்மை விருதுகள் மற்றும் உச்சிமாநாட்டின் 2வது பதிப்பை நவம்பர் 30 ஆம் தேதி ஏற்பாடு செய்துள்ளது. மாலை 5 மணிக்கு புது தில்லியில் உள்ள ஃபெடரேஷன் ஹவுஸில் மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். நிலையான விவசாய வளர்ச்சியை ஊக்குவித்தல். விவசாயிகளின் வருமானத்தை மேம்படுத்துவதே இந்த விருது மற்றும் மாநாட்டின் முக்கிய நோக்கமாகும்.
12. வானிலை தகவல்
இன்று மற்றும் நாளை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதே நேரம் மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை.
மேலும் படிக்க:
கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்