1. செய்திகள்

கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்

Deiva Bindhiya
Deiva Bindhiya
Operation of special buses on the occasion of Karthikai Deepa Thirunal

அரசு விரைவுப் போக்குவரத்தும் கழகத்தின் சார்பில் தொலைதூரப்பயணிகளின் வசதிக்காக கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம் குறித்து போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கரன் தகவல் தெரிவித்துள்ளார். அதில்,

தமிழகத்தின் மிகவும் பிரசித்து பெற்ற கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு தொலைதூர பயணிகள் திருவண்ணாமலைக்கு சென்று வர ஏதுவாக நாகர்கோவில், திருநெல்வேலி, தூத்துக்குடி, செங்கோட்டை, மதுரை மற்றும் கோயம்புத்தூர் ஆகிய ஊர்களிலிருந்து அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மூலம் அதிநவீன சொகுசு பேருந்துகள், இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட குளிர்சாதன பேருந்துகள் டிசம்பர் 5 மற்றும் டிசம்பர் 6 ஆகிய நாட்களில் இயக்கப்பட உள்ளது. இச்சிறப்பு பேருந்துகளுக்கு www.tnstc.in, மற்றும் tnstc official app, ஆகிய இணையதளங்களின் மூலமாக இருபுறமும் முன்பதிவு செய்து பயணிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

மேலும், பேருந்து இயக்கம் குறித்த தகவலுக்கு மதுரை 9445014426, திருநெல்வேலி 9445014428, நாகர்கோவில் 9445014432, தூத்துக்குடி 9445014430, கோயம்புத்தூர் 9445014435, தலைமையகம் 9445014435, 9445014424 மற்றும் 9445014416 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

எனவே, திருவண்ணாமலை செல்லும் பக்தர்கள் மேற்படி பேருந்து வசதியினை பயன்படுத்திக்கொள்ள இதன் மூலம் கேட்டுக்கொள்கிறோம் என அரசு முதன்மைச் செயலாளர் போக்குவரத்து துறை மூலம் ஆதிகார்ப்பூர்வ செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: 

விவசாயிகள் விளைபொருட்களை அடகு வைத்து ரூ. 75 லட்சம் வரை கடன் பெறலாம்!

இயந்திர வாடகை மையம் நிறுவ 80% மானியம்!

English Summary: Operation of special buses on the occasion of Karthikai Deepa Thirunal Published on: 29 November 2022, 05:58 IST

Like this article?

Hey! I am Deiva Bindhiya. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.