விவசாயிகளின் கோரிக்கையினை ஏற்று, ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் ஆயிரம் ரூபாய் ரொக்கத்துடன் முழுக் கரும்பு ஒன்றினையும் சேர்த்து, அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் வழங்கிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆணையிட்டுள்ளார்.
மேலும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வருகிற ஜனவரி 2 ஆம் தேதிக்கு பதிலாக ஜனவரி 9 2023 அன்று விநியோகம் செய்யப்படும். அதே நேரம், பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவதற்கான டோக்கன் கொடுக்கும் பணி ஜனவரி 3 முதல் ஜனவரி 8 2023 வரை கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2.தினை செயலாக்க அலகு நிறுவ விவசாயிகளுக்கு 35% மானியம்
SELCO India, விருதுநகர் மாவட்டத்தின் மாவட்ட ஆட்சியருடன் இணைந்து 2022 ஆம் ஆண்டு டிசம்பர் 9 ஆம் தேதி விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் "தமிழகத்தின் தினை சுற்றுச்சூழலை வளப்படுத்துதல் மற்றும் 2023 இல் தினை மாநாட்டிற்கான திட்டமிடல்" தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தை நடத்தியது. இதன் பிறகு, சூரிய சக்தியில் இயங்கும் தினை செயலாக்க அலகு நிறுவ விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கு 35% மானியம் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. சூரிய சக்தியில் இயங்கும் தினை செயலாக்க அலகு, மானியம் மற்றும் வங்கி நிதியுதவி பற்றிய கூடுதல் தகவலுக்கு திரையில் தோன்றும் நபரையோ அல்லது தொலைபேசியோ அணுகலாம். திரு.நம்பிராஜன் மூத்த மேலாளர்- மக்கள் தொடர்பு மற்றும் அவுட்ரீச், SELCO India 9600620404, 9894271713 அவர்களை தொடர்புக்கொள்ளலாம்.
3.தென்னை மரம் ஏறும் தொழிலாளர்களுக்கு காப்பீடு: திட்டத்தில் இணைந்து பயன்பெறுமாறு வேளாண்மை துறை அழைப்பு
தென்னை மரமேறும்போது விபத்து ஏற்பட்டால், 24 மணிநேரத்துக்கும் உயிரிழப்பு அல்லது முழு உடல் ஊனம் அடைந்தாள் ரூ.5 லட்சமும், பகுதி உடல் ஊனமடைந்தால் ரூ.2.5 லட்சமும், மருத்துவ செலவிற்கு அதிகபட்சமாக ரூ.1 லட்சமும், தற்காலிக உடல் ஊனத்திற்கு ரூ.18,000மும், உதவியாளர் செலவிற்காக ரூ.3000மும், ஆம்புலன்ஸ் செலவிற்காக ரூ.3000மும் மற்றும் இறுதி சடங்கு செலவிற்காக ரூ.5000 மும் பெற்று கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் காப்பீடு செய்ய வருடத்திற்கு ரூ.375 காப்பிட்டு தொகையாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில் தென்னை மரம் ஏறும் விவசாயிகள் தங்கள் பங்குத்தொகையாக ரூ.94 மட்டும் செலுத்தினால் போதுமானது மீதமுள்ள ரூ.281 ஐ தென்னை வளர்ச்சி வாரியமே செலுத்துகிறது. கடந்த 2021-2022 ஆம் ஆண்டில் 940 தொழிலாளர்களும். நடப்பு ஆண்டில் 100 தொழிலாளர்களும் பதிவு செய்துள்ளனர். பதிவு செய்ய https://www.coconutboard.gov.in/ என்ற இணையதள முகவரியில் பெயர், ஆதார் எண், இருப்பிட முகவரி, பிறந்த தேதி, வாரிசு நியமனம் உள்ளிட்ட விவரங்களுடன், உங்கள் பகுதி வட்டார வேளாண்மை அலுவலர்களின் சான்றிதழுடன் காப்பிட்டு தொகையை வரைவோலையாகவோ, கூகுள் பே அல்லது பேடீஎம் அல்லது போன் பே வழியாகவோ பணம் செலுத்தி இத்திட்டத்தில் சேரலாம், மேலும் சந்தேகங்களுக்கு உங்கள் பகுதி வேளாண்மை துறை அலுவலர்களை அணுகலாம்.
4.புதுக்கோட்டை மாவட்டம் சம்பா சாகுபடிக்கு பின் உளுந்து சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு மானியம்
சம்பா சாகுபடிக்கு பின் உளுந்து சாகுபடி மேற்கொள்ள விவசாயிகளுக்கு உளுந்து விதைகள் ஏக்கருக்குக்கு ரூ.400 மானியத்தில் வழங்கப்படும் என புதுக்கோட்டை மாவட்ட வட்டாச்சியர் திருமதி.கவிதா ராமு அவர்கள் தெரிவித்துள்ளார். இத்திட்டமானது புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் செயல்படுத்தபடுகிறது, இதற்கு தேவையான தரமான சான்று பெற்று உளுந்து விதை ரகங்களான வம்பன் 8, வம்பன் 10, ஆகிய ரகங்கள் அணைத்து வேளாண் விரிவாக்க மையங்களில் போதுமான இருப்பு வைக்கப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கிட தயார் நிலையில் உள்ளது. எனவே விவசாயிகள் உழவன் செயலி மூலம் பதிவு செய்து நெல் சாகுபடிக்கு பின் உளுந்து சாகுபடி செய்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
5. கரும்பு சாகுபடிக்கேற்ற வேளாண் இயந்திர வாடகை மையம் நிறு அதிகபட்சமாக 60 லட்சம் மானியம்
வேளாண்மை - உழவர் நலத்துறை சார்பாக, கரும்பு சாகுபடிக்கேற்ற வேளாண் இயந்திர வாடகை மையம் நிறுவ கிராமப்புற தொழில் முனைவோர், பதிவு செய்யப்பட்ட விவசாய சங்கங்கள், உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளுக்கு 40 சதவீத மானியத்தில் அதிகபட்சமாக 60 இலட்சம் மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டம் வேளாண்மை இயந்திரமயமாக்கும் துணை இயக்கத் திட்டம் கீழ் செயல்படுத்தப்பட்டு வருகிறது. திரையில் தோன்றும் இணையதளம் வாயிலாக பதிவு செய்து விண்ணப்பிக்கலாம். mis.aed.tn.gov.in/login
6. இன்றைய காய்கறி விலை நிலவரம்
பெரிய வெங்காயம் கி.30 ரூபாய்க்கும், தக்காளி கி.20 ரூபாய்க்கு, சிறிய வெங்காயம் கி.50 ரூபாய்க்கும் பச்சைமிளகாய் கி.40 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு கி.30ரூபாய்க்கும், முட்டைகோஸ் கி.25 ரூபாய்க்கும், கேரட் கி.40 ரூபாய்க்கும், காலிபிளவர் ருபாய் 35 ரூபாய்க்கும், தேங்காய் பெரியது ஒன்று 25 ரூபாய்க்கும், கத்திரிக்காய் ரூபாய் 30 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.
7.நிலக்கடலை பயிருக்கு காப்பீடு செய்ய 31 -ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்
நாமக்கல் மாவட்டத்தில் 2023 -ம் ஆண்டு ரபி பருவத்தில் நிலக்கடலை பயிர் சாகுபடி செய்துள்ள விவசாயிகள், அந்த பயிருக்கு புதுப்பிக்கப்பட்ட பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தில் பயிர் காப்பீடு செய்து பயனடையலாம். பிரிமிய தொகை ஏக்கர் ஒன்றுக்கு நிலக்கடலை பயிருக்கு 311.22 ரூபாய் ஆகும். கடைசி நாள் வருகிற 31-ம் தேதி ஆகும். கடன் பெறாத விவசாயிகள் பொது சேவை மையங்களில் முன்மொழிவு விண்ணப்பத்துடன் கிராம நிர்வாக அலுவலரின் அடங்கல் சான்று, நடைமுறையில் வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பகுதி நகல், ஆதார் அட்டை நகல் மற்றும் செல்போன் எண் ஆகியவற்றுடன் இணைத்து காப்பீடு பிரிமியம் செலுத்தி விருப்பத்தின் பேரில் பதிவு செய்து கொள்ளலாம்.
8.Afc India Limited நிர்வாக இயக்குனர் திரு.மஷார் வேலபுரத் கே.ஜே.சௌபால் வருகை
Afc India Limited நிர்வாக இயக்குனர் திரு.மஷார் வேலபுரத் kj choupalக்கு வருகை தந்தார். சிறப்பு விருந்தினராக வருகை தந்த அவர், கிரிஷி ஜாக்ரனின் விவசாய கவலைகளை வெளிக்கொணரும் முயற்சி மற்றும் FPO கால் சென்டர் சிந்தனை போன்ற முன்முயற்சியை பாராட்டி, அவரது வாழ்த்துகளையும் தெரிவித்தார். இந் நேரம், விருந்தினர்களை கௌவரவிக்கும் விதமாக செடி வழங்கப்பட்டது.
9.கோரமண்டல் சார்பாக 150 விவசாய கூட்டங்கள் ஏற்பாடு
கோரமண்டலின் குரோமோர்சுரக்ஷா மூலம் விவசாயிகள் தினம் சமீபத்தில் கொண்டாடப்பட்டது. விவசாயிகள் தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக க்ரோமோர் சுரக்ஷா மூலம் நாடு முழுவதும் 150 கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டன. இதில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் விவசாயிகளுடன் வேளாண் துறை அலுவலர்கள், பூச்சி மருந்து விநியோகஸ்தர்கள் கலந்து கொண்டது சிறப்பித்தனர்.
10.வானிலை அறிக்கை
இன்று தமிழகம், புதுவை, மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மலை பெய்ய கூடும். மற்றும் மீனவர்களுக்காக எச்சரிக்கை எதுமில்லை.
மேலும் படிக்க:
PMFBY| காய்கறி தோட்டம் முதல் செங்குத்து தோட்டம் வரை வீட்டில் அமைக்க, அரசு 50% மானியம்
ரூ.10000/- மானிய உதவியில் மின்சார மோட்டார் பம்ப் செட்| 100% மானியத்தில் 5 ஆடுகள்| காய்கறி விலை