1. விவசாய தகவல்கள்

PMFBY| காய்கறி தோட்டம் முதல் செங்குத்து தோட்டம் வரை வீட்டில் அமைக்க, அரசு 50% மானியம்

Deiva Bindhiya
Deiva Bindhiya

வேளாண்மை-உழவர் நலத்துறை தோட்டக்கலை - மலைப்பயிர்கள் துறை சார்பாக மாடித்தோட்டத் தளைகள் விநியோகம் செய்யப்படுகின்றன. முதலமைச்சரின் ஊட்டம் தரும் காய்கறி தோட்டத் திட்டத்தின் கீழ்

50 சதவீத மானியத்தில் மாடி தோட்ட தளைகள் வழங்கப்படுகிறது. மொத்த விலை - ரூ.900 மதிப்பிலான மாடித்தோட்ட கிட் 50 சதவீத மானியத்தில் ரூ.450க்கு விநியோகிக்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற www.tnhorticulture.tn.gov.in/kit_new/ இணையதளத்தில் பதிவு செய்யலாம். 

2.சி மற்றும் டி பிரிவு பணியாளர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.3000 வழங்கல்

அரசின் நலத் திட்டங்களுக்கு, அச்சாணியாக விளங்கும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு எதிர்வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, மிகை ஊதியம் மற்றும் பொங்கல் பரிசு வழங்கிட தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார். சி மற்றும் டி பிரிவைச் சார்ந்த பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ரூபாய் 3,000 என்ற உச்சவரம்பிற்குட்பட்டு மிகை ஊதியம் வழங்கப்படும்.

3.செங்குத்து தோட்டம் அமைக்க 50% மானியம் வழங்கப்படுகிறது

நகர்புறங்களில் உயர் தொழில்நுட்ப முறைகளான செங்குத்து தோட்டம், அங்கிலத்தில் இம் முறை Vertical Farming எனப்படும். இம் முறை தற்போதுள்ள விவசாயத்தில் மிகவும் பிரபலமாக உள்ளது. எனவே, செங்குத்து தோட்டம் மூலம் காய்கறி பயிர்கள் சாகுபடியினை ஊக்குவிக்க மாநில தோட்டக்கலை வளர்ச்சி திட்டத்தின் கீழ் ஒரு அலகிற்கு ரூ.15,000, 50% பின்னேற்பு மானியமாக வழங்கப்படும். இத்திட்டத்தில் பயன்பெற இணையதளம் https://www.tnhorticulture.tn.gov.in/kit_new/

4.பிரதம மந்திரி பயிர்காப்பீட்டுத் திட்டத்தில் காப்பீடு செய்ய வேளாண் அதிகாரி அறுவுறுத்தல்

பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் நெல், நிலக்கடலை, சோளம், கரும்பு பயிரை விரைந்து காப்பீடு செய்யுமாறு விவசாயிகளுக்கு வேளாண் அதிகாரி வேண்டுகொள் விடுத்துள்ளார். பருவமழை காலங்களில், வெள்ளம், புயல் மற்றும் இயற்கை சீற்றங்களினால் விவசாயிகள் பாதிக்கும்போது, அவர்களின் வாழ்வாதாரத்தையும், வருமானத்தையும் பாதுகாத்திடும் வகையில் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

5.கால்நடை விவசாயிகளுக்கு தலா 10,000 ரூபாய் மானியம் அறிவிப்பு!

கால்நடைகளுக்கு தேவைப்படும் தீவனப்புல் வளா்க்க ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு தலா 10,000 ரூபாய் மானியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் மக்களின் பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 2022-23 ஆம் ஆண்டிற்கான புதிய அறிவிப்பில் கால்நடைகளுக்கு தேவைப்படும் தீவனப்புல் வளா்க்க ரூ.1 கோடி செலவில் மானியம் வழங்கப்படுகிறது. கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட மேலாளா் அலுவலகம், தாட்கோ, எருமாபாளையம் சாலை, சீலநாயக்கன்பட்டி, சேலம் என்ற முகவரியிலோ அல்லது திரையில் தோன்றும் 0427 - 2280348 தொலைபேசி எண்ணிலோத் தொடர்பு கொள்ளலாம்.

6.நுண்ணீர் பாசனம் அமைக்க விவசாயிகளுக்கு மானியம்

நாமக்கல் வட்டார பகுதி விவசாயிகளுக்கு வேளாண்மை -உழவர் நலுத்துறை சார்பில் நுண்ணீர் பாசனம் அமைக்க விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படுகிறது என manures and fertillizers. சித்ரா, வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, நுண்ணீர் பாசனம் மூலம் குறைந்த நீரை கொண்டு அதிக பரப்பளவில் சாகுபடி செய்யலாம். நீரில் கரையும் உரங்களை நேரடியாக பயிரின் வேர் பகுதிக்கு வழங்குவதால் உர பயன்பாடு குறைகிறது. களைகளை கட்டுப்படுத்தப்படுகிறது. எனவே பிரதம மந்திரி நுண்ணீர் பாசன திட்டத்தின் கீழ் சிறு/குறு விவசாயிகளுக்கு 100 சதவீதம் மானியத்திலும் இதர விவசாயிகளுக்கு 75 சதவீதம் மானியத்திலும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட நுண்ணீர்ப் பாசன நிறுவனத்தின் மூலம் சொட்டுநீர் பாசன கருவி, தெளிப்பு நீர் பாசனக்கருவி, மழை மழை தூவான் அமைத்து தரப்படுகிறது.

7.இயற்கை வேளாண் பொருட்களை விற்பனை செய்ய புதிய தளம்

மத்திய வேளாண் அமைச்சகம் புதிதாக இயற்கை வேளாண் பொருட்களை விற்பனை செய்ய இணையதளம் ஒன்றை அறிவித்துள்ளது. சுற்று சூழலை மேம்படுத்துவதற்காக, விவசாயிகளில் பலர் இயற்கை விவசாயம் செய்து வருகின்றனர், ஆனால் அவர்களின் விலை பொருட்களை விற்பனை செய்ய சரியான வழி கிடைக்கிவில்லை, அதற்கு உதவும் வகையில் இணையதளம் http://jaivikkheti.in இயற்கை வேளாண்மை மற்றும் அதன் நன்மைகளை மேம்படுத்துவதற்கான சிறந்த தளமாக திகழும். இந்த இணையதளத்தின் மூலம் விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்யும் இயற்கை பொருட்களை சரியான விலைக்கு விற்க முடியும்.

8.வானிலை தகவல்

இன்று முதல் வருகிற 29 டிசம்பர் 2022 வரை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் லேசான மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

மேலும் படிக்க:

"கிளைமேட் ஸ்மார்ட் அக்ரிகல்ச்சர் இனி நமக்கு அவசியமே"

தென்னை விவசாயிகளுக்கு அதிஷ்டமே - கொப்பரையின் குறைந்த பட்ச ஆதரவு விலை உயர்வு

English Summary: PMFBY | Govt 50% subsidy to set up at home from vegetable garden to vertical garden Published on: 27 December 2022, 05:25 IST

Like this article?

Hey! I am Deiva Bindhiya. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.