ஜூன் மாதத்தில் விவசாயப் பயிர் ஆரம்பிக்கப்பட்டாலும், அதற்கான முன்னேற்பாடுகளை கோடை பருவத்திலிருந்து செய்தால் அதிக மகசூல் (High yield) பெறலாம். கோடையில் நிலத்தை தரிசாக போடக்கூடாது. கோடை மழையை பயன்படுத்தி நிலத்தின் சரிவுக்கு குறுக்காக உழவு செய்யவேண்டும். மழைநீர் சரிவுக்கு குறுக்காக உள்ள சால்களில் தேங்கி நிலத்தில் உறிஞ்சப்பட்டு மண்ணில் சேமிக்கப்படுகிறது. மண் அரிமானமும் சத்துக்கள் வெளியேறுவதும் தடுக்கப்படுகிறது. மண்ணில் காற்றோட்டம் ஏற்பட்டு நுண்ணுயிரிகளின் செயல்பாடு அதிகரிக்கிறது. களைகள், பூச்சியின் முட்டைகள் மற்றும் கூட்டுப்புழுக்கள் அழிக்கப்படுகிறது.
மழைநீர் பயன்பாடு
மானாவாரி நிலங்களில் 8க்கு 5 மீட்டர் அளவில் சிறு சிறு பகுதி பாத்திகளாக பிரிக்க வேண்டும். ஒவ்வொரு பாத்தியும் சிற்றணைகளாக மாறி மழைநீரை (Rainwater) தேக்கி வைக்கிறது. முன்பருவ விதைப்பிற்கு பின், இப்பாத்திகளை அமைத்தால் மழைநீர் முழுமையாக பயிர் விளைச்சலுக்கு பயன்படும். மானாவாரியில் 5அடி இடைவெளியில் சரிவிற்கு குறுக்கே ஓரடி அளவிற்கு ஆழச்சால் அகலப் பாத்தி அமைப்பதால் மழைநீர் சால்களில் தேக்கப்பட்டு நிலத்தடிநீர் (Ground water) அதிகரிக்கிறது.
இலை உதிர்வைத் தடுக்க
கயோலின், நீராவிப்போக்கு தடுப்பானாக பயன்படும். ஏக்கருக்கு 10கிலோ கயோலினை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து பயிரின் மேல் தெளிப்பதன் மூலம் இலையின் மீதுபடும் கதிர்வீச்சினை பிரதிபலித்து நீராவிப் போக்கை குறைக்கிறது. ஏக்கருக்கு 20 கிராம் சாலிசிலிக் அமிலத்தை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளித்தால் வறட்சிக்கு முன்னரே இலை உதிர்வது தடுக்கப்படுகிறது.
சுப்பிரமணியன், உதவி பேராசிரியர்
சதீஷ்குமார், உதவி ஆசிரியர்
உழவியல் மதுரை
மதுரை விவசாய கல்லுாரி
90034 28245
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
வெப்ப அயற்சியிலிருந்து கோழிகளைப் பாதுகாக்க தெளிப்பான்களை உபயோகிக்கலாம்! ஆராய்ச்சி நிலையம் அறிவுறுத்தல்!
இயற்கை பூச்சி விரட்டி தயாரிப்பு குறித்து விவசாயிகளுக்கு செயல் விளக்க பயிற்சி!