Farm Info

Saturday, 06 June 2020 07:34 PM , by: Daisy Rose Mary

நீலகிரி மாவட்டம் கூடலூரில் 850 ஹெக்டேர் பரப்பளவிலும், பெரம்பலூர் மாவட்டத்தில் 4350 ஹெக்டேர் பரப்பளவில் சொட்டு நீர் பாசனம் அமைக்க மானிய நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் 4,350 ஹெக்டேர் பரப்பளவில் சொட்டு நீர் பாசனம் அமைக்க ரூ.30 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அம்மாவட்ட ஆட்சியர் சாந்தா அவரது அறிக்கையில் தெரிவித்துள்ளார். இந்த திட்டத்தில் 19 சதவீதம் ஆதிதிராவிடருக்கும், ஒரு சதவீதம் பழங்குடியினர் வகுப்பினருக்கும் மானிய நிதி பெற ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் சொட்டு நீர் பாசனம் அமைக்க சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியமும், பெரிய விவசாயிகளுக்கு 75 சதவீத மானியமும் வழங்கப்படுகிறது.

மானியம் பெறுவது எப்படி?

விவசாயிகள் தங்களுடை குடும்ப அட்டை நகல், சிட்டா, அடங்கல், ஆதார் அட்டை நகல், நில வரைபடம், தண்ணீர் மற்றும் மண் ஆய்வறிக்கை ஆகியவற்றை விண்ணப்பத்துடன் இணைத்து மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் தகவல்களுக்கு அந்தந்த வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தில் அளித்து முன்பதிவு செய்து கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

துணை நீர் மேலாண்மை திட்டம்

நுண்ணீர் பாசனத் திட்டத்துடன் இணைந்த துணை நீர் மேலாண்மை திட்டமும் செயல்படுத்தப்படுகிறது. இதனை செயல்படுத்துவதற்கு முன்னதாக தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகி (MIMS) என்ற இணையதளத்தில் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் தகவல்களுக்கு அந்தந்த வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர்களை அணுக வேண்டும் என்றும், ஆலத்தூர் பகுதி விவசாயிகள் 8838448116 என்ற எண்ணிலும், பெரம்பலூர் வட்டார விவசாயிகள் 9786377886 என்ற எண்ணிலும், வேப்பந்தட்டை பகுதி விவசாயிகள் 6379246587 என்ற எண்ணிலும், வேப்பூர் பகுதி விவசாயிகள் 6383062564 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல்களை பெறலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூடலூர் விவசாயிகள்

நீலகிரி மாவட்டம், கூடலூரில் 850 ஹெக்டேர் பரப்பளவில் சொட்டு நீர் பாசனம் அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. துணை நீர் மேலாண்மை நடவடிக்கை திட்டத்தின் கீழ் 451 விவசாயிகள் பயனடைந்துள்ளதாக தோட்டக்கலைத் துறை இயக்குனர் தெரிவித்துள்ளார். மேலும் இந்த திட்டத்தின் கீழ் 75 இணைப்பு குழாய்கள், 50 ஆயில் இன்ஜின், 15 கிணறுகள் வெட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதன் மூலம் பயன்பெற விரும்பும் விவசாயிகள் மேற்கூறிய ஆவணங்களை சமர்பித்து மானியம் பெறலாம் என்றும் தோட்டக்கலைத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க..

50 % மானியத்தில் சூரிய ஒளி மின் வேலி திட்டம்! விவசாயிகளுக்கு அழைப்பு!
விவசாய கழிவுகள் மூலம் இயற்கை உரம் தயாரிக்கும் விவசாயிகள்!
விவசாய தகவல்களை உங்கள் கைகளுக்கு கொண்டு வரும் செயலிகள்!


எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)