வானிலை தகவல்கள், பருவ காலநிலைகள், கால்நடைகள் மற்றும் வேளாண் துறை சார்ந்த ஆலோசனைகளை எளிதில் பெறலாம் என்ற அடிப்படையில் சில செயலிகளை இந்திய வேளாண் விஞ்ஞானிகள் பரிந்துரைக்கின்றனர்.விவசாயிகள் கேட்டுப் பயன்பெற வேண்டுகிறோம்.
வேகமாக மாறி வரும் உலகில் விவசாயமும் பல்வேறு மாற்றங்களை கண்டு வருகிறது. நம் ஆறாம் விரலாக செல்போன் (Smart phone) மாறிவிட்ட நிலையில். அது இன்றி ஓர் அணுவும் அசையாது என்ற நிலை வந்துவிட்டது. விவசாயம், நாட்டின் முதுகெலும்பு என்ற போதிலும் அதையும் நவீனமாக்கும் கட்டாயத்தில் 'டிஜிட்டல்' (Digital) யுகத்தில் வாழ்ந்து வருகிறோம்.
விவசாயம் மற்றும் வேளாண்துறைக்கு பயன்படும் வகையில் இந்திய வானிலை ஆய்வுத் துறை (IMD), இந்திய வெப்பமண்டல வானிலை ஆய்வு நிறுவனம் (IITM) மற்றும் இந்திய வேளாண் ஆராய்ச்சிகழகம் ஆகியவற்றின் (ICAR)கூட்டுமுயற்சியில் "மேக்தூத்" (Meghdoot)என்ற மொபைல் ஆப் (Mobile App) உருவாக்கப்பட்டுள்ளது.
மேக்தூத் (Megadoot)
இந்த செயலி மூலம் விவசாயிகளுக்கு வானிலை சார்ந்த வேளாண் மற்றும் கால்நடைகளை பேணிக்காப்பது குறித்த ஆலோசனைகள் மாவட்டந்தோரும் உங்கள் உள்ளுர் மொழிகளில் இலவசமாக பெறலாம். அதுமட்டும் இன்றி கடந்தகால வானிலை தகவல்கள் மற்றும் அடுத்த 5 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்புகளையும், மழை அளவுகள், அதிக மற்றும் குறைந்த வெப்பநிலை தகவல்கள், காற்றின் வேகம், திசை, ஈரப்பதம் மற்றும் மேக மூட்டம் குறித்த பல்வேறு தகல்களை பெறலாம். இந்ததகவல்கள் அனைத்தும் செவ்வாய் மற்றும் வெள்ளி என வாரத்திற்கு இரண்டு முறை புதுப்பிக்கப்படும்.
விவசாயிகள் மேக்தூத் செயலியை (Google)கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து இலவசமாக பதிவிறக்கம் செய்யலாம். பயனாளர்கள் தங்கள் பெயரையும் கைப் பேசி எண்ணையும், இடத்தையும் பதிவு செய்து தேவையான ஆலோசனைகளை இலவசமாக பெறலாம்.
TNAU AAS
இதேபோல், கிடைக்கப்பெறும் மற்றோரு ஆப் TNAU AAS. இது, வானிலை மற்றும் காலநிலை சார்ந்த இடர்ப்பாடுகளால் பயிர்களில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து உங்கள் கைபேசிக்கு குறுந்தகவலாக அனுப்பிவைக்கப்படும்.
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் தொடங்கியுள்ள இந்த TNAU ASS- செயலியில், வானிலை சார்ந்த வேளாண் ஆலோசனைகள், கடந்தகால, நிகழ் கால மற்றும் எதிர்கால வானிலைகளைக் கொண்டு 54 வானிலை சூழல்களில் பயிரிடப்படும் 108 பயிர்களின் வளர்ச்சி பருவங்களுக்கு தேவையான வானிலை சார்ந்த வேளாண் ஆலோசனைகள் அனைத்தும் பதிவேற்றப்பட்டுள்ளது. இவ்விணையதளத்திலும் (http://aas.tnau.ac.in/) பதிவேற்றப்பட்டுள்ளது.
இந்த TNAU AAS- ஆப் வைத்துள்ள, விவசாயிகளுக்கு அவரவர் பயிர்களுக்கு பயிர் விதைத்த தேதியினை அடப்படையாககொண்டு அவரவர் கைபேசிக்கு குறுந்தகவலாக தமிழ் மொழியில் AAS மென்பொருள் மூலம் அனுப்பிவைக்கப்படுகிறது. இந்த ஆப்- TNAU AAS-ஐ கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து இலவசமாக பதிவிறக்கம் செய்யலாம்.
பயனாளர்கள் தங்கள் பெயரையும், கைப்பேசி எண்ணையும், உங்கள் இடம் மற்றும் பயிர் விதைப்பு குறித்த தகவல்களை பதிவு செய்ய வேண்டும். இதனால் விவசாயிகள் அவரவர்கள் வட்டாரந்தோரும் வானிலை சார்ந்த வேளாண் ஆலோசனைகளை எளிதாக பெறமுடியும்.
இப்போதே இது போன்ற மேக்தூத் மற்றும் TNAU AAS ஆகிய ஆப்களை உங்கள் மொபைல்களில் பதிவிறக்கம் செய்து பயன் பெற்றிடுங்கள்.
முனைவர்.சி.அருள் பிரசாத்
முனைவர்.வெங்கடேஸ்வரி
முனைவர் வி.அ.விஜயசாந்தி
தொழில் நுட்பவல்லுநர்கள் வேளாண் அறிவியல் நிலையம்,
திருவள்ளுர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டம்
Share your comments