தோட்டக்கலை இயந்திரமயமாக்கல் திட்டத்தின் கீழ் 25 சதவீத மானியத்தில் தேசிய தோட்டக்கலை இயக்கத்தின் கீழ் ரூ.75,000 பின்னேற்பு மானியமாக, மினி டிராக்டர் வாங்க விவசாயிகளுக்கு வழங்கப்படும். இத்திட்டத்தில் பயன்பெற,
http://tnhorticulure.tn.gov.in/tnhortnet என்ற Website-இல் பதிவு செய்து பயன் பெறலாம். பொதுவாக, இவ் மினி டிராக்டர், உழவு கருவிகளை இணைத்து இயக்க பயன்படுத்தப்படுகிறது, இதர பண்ணை வேலைகளுக்கு பயன்படுத்தலாம். இது நேரம் மற்றும் வேலையாட்களின் பயன்பாட்டை குறைக்கிறது. எனவே, விவசாயிகள் பயன்பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
2.கிணறு அமைத்திருப்பவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் மின் இணைப்பு
கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் உருவாக்கப்படும் கிணறுகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் மின் இணைப்பு வழங்கப்படும். இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் தங்களின் பெயரை உழவன் செயலி மூலமாகவோ அல்லது www.tnagrinet.tn.gov.in Website-இலோ முன்பதிவு செய்து பயன் பெறலாம். மேலும் விபரங்களுக்கு அருகிலுள்ள வேளாண் விரிவாக்க மையங்களை அணுகுங்கள்.
3.விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும்- அமைச்சர் செந்தில் பாலாஜி
ஆதார் எண் இணைக்காவிட்டால் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் ரத்து என்பது தவறான பிரசாரம் என அமைச்சர் செந்தில்பாலாஜி கூறினார். தமிழக மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கோவையில் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது: மின் இணைப்பு எண்ணுடன், ஆதார் எண் இணைக்கப்பட்டு வருகிறது. இது நிர்வாக ரீதியில் நடந்துவரும் ஒரு செயலாகும். எனவே, இதற்கும் ஆதார் எண், இணைத்தால்தான் இலவச மின்சாரம் வழங்கப்படும் என அறிவிக்கப்படும் தகவல்களில் பொதுமக்கள் கவனம் செலுத்த வேண்டாம் என அறிவுறுத்தினார்.
4.விவசாயிகளின் நலன் காக்கும் நாள் கூட்டம் வரும் நவம்பர் 25 ஏற்பாடு
காஞ்சிப்புரம் மாவட்டத்தின் நவம்பர் 2022 மாதத்திற்கான விவசாயிகளின் நலன் காக்கும் நாள் கூட்டம் நவம்பர் 25 நடைபெறும். அதே நேரம், பிரதான் மந்திரி நுண்ணீர் பாசனத்திட்டத்தில் இணையவழி பதிவுகள் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் பதிவு செய்ய விருப்பம் உள்ள விவசாயிகள், ஆதார் அட்டை, சிட்டா, அடங்கல், நில வரை படம், ரேஷன் கார்டு ஆகியவற்றின் நகலும், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, இணையவழி சிறு/குறு விவசாய சான்று. வங்கி கணக்கு புத்தகம் நகல், நிலத்தின் பரப்பளவு-பட்டா நகல் ஆகிய ஆவணங்களுடன் கலந்து கொண்டு பதிவு செய்து பயன் அடையுமாறு என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.
5.“தினையிலிருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்க” 2 நாள் பயிற்சி
வரும் நவம்பர் 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் உள்ள வேளாண் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் உள்ள அறுவடை தொழில்நுட்ப மையத்தில் “தினையிலிருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்க” இரண்டு நாள் பயிற்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பின்வரும் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களில் தினையை பதப்படுத்துவது, இந்த பயிற்சி திட்டத்தின் நோக்கமாகும்.
- பாரம்பரிய உணவுகள்
- பாஸ்தா உணவுகள்
- பேக்கரி பொருட்கள்
- உடனடி உணவு கலவைகள்.
ஆர்வமுள்ள நபர்கள் (ரூபாய் ஆயிரத்து எழுநூற்று எழுபது மட்டும்) பயிற்சியின் முதல் நாளில் நேரில் செலுத்தி பயிற்சியில் பங்குபெற அறிவுறுத்தப்படுகிறார்கள்.
6.விவசாயிகள் குறைதீரக்கும் நாள் கூட்டம் வரும் 25 ம் தேதி நடைபெறும்
திண்டுக்கல் மற்றும் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்றக்கூட்டத்தில் வரும் நவம்பர் 25 அன்று காலை 10.30 மணியளவில் விவசாயிகள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறவுள்ளது - மாவட்ட ஆட்சித்தலைவர்கள் தெரிவித்துள்ளனர். இக்கூட்டத்தில் அனைத்துறை தலைமை அலுவலர்களும் கலந்து கொள்ள உள்ளனர், எனவே விவசாயிகளும் கூட்டத்தில் கலந்து கொண்டு வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் கருவிகள், ஒழுங்கு முறை விற்பனைக்கூட நடவடிக்கைகள், கால்நடை பராமரிப்பு, பட்டுப்புழு வளர்ப்பு மற்றும் விவசாய கடன் சம்மந்தப்பட்ட தங்களுடைய கோரிக்கைகளுக்கு தீர்வு காணலாம்.
7. இன்றைய வானிலை தகவல்
சென்னை, வட தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மழை பெய்யும் என்பதால், மாநகரம் மற்றும் மாநிலத்தின் சில பகுதிகளில் குளிர்ந்த வானிலை அடுத்த சில நாட்களுக்கு நீடிக்கும்.இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது: தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தென்மேற்கு மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இது கிட்டத்தட்ட வடமேற்கு நோக்கி நகர்ந்து யாழ்ப்பாணத்திலிருந்து கிழக்கே 580 கிமீ தொலைவிலும், காரைக்காலில் இருந்து கிழக்கே 600 கிமீ தொலைவிலும், சென்னைக்கு தென்கிழக்கே 630 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது. இது தொடர்ந்து தீவிரம் அடைந்து, அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் வட தமிழ்நாடு-புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திரா கடற்கரையை நோக்கி நகரக்கூடும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க:
PMFBY பயிர் காப்பீடு செய்ய கால அவகாசம் நீட்டிப்பு! |100 யூனிட் இலவச மின்சாரம் Update!
2022-23: கல்வி உதவித்தொகை ரூ.2லட்சம் வரை அரசு அறிவிப்பு! Apply Today