1. விவசாய தகவல்கள்

PMFBY பயிர் காப்பீடு செய்ய கால அவகாசம் நீட்டிப்பு! |100 யூனிட் இலவச மின்சாரம் Update

Deiva Bindhiya
Deiva Bindhiya
Agriculture News Updates:Extension of time for PMFBY crop insurance! |100 units of free electricity Update

1.பயிர் காப்பீடு செய்ய கால அவகாசம் நீட்டிப்பு - அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம்

தமிழ்நாடு முதலைமைச்சர் மு.க.ல்டாலின் அவர்களின் தொடர் நடவடிக்கையின் பலனாக பயிர் காப்பீடு செய்யும் தேதி வரும் 21 நவம்பர் வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது, மழையினால் பயிர் காப்பீடு செய்ய முடியாமல் போன விவசாயிகள் தற்போது, இந்த கால நீட்டிப்பை பயன்படுத்தி பயிர் காப்பீடு செய்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் கேட்டுக்கொண்டுள்ளார்.

2.பிரதமர் மோடி இன்று ‘காசி தமிழ் சங்கமத்தை’ துவங்கி வைக்கிறார்

வாரணாசியில் இன்று நவம்பர் 19ஆம் தேதி ‘காசி தமிழ் சங்கமம்’ விழாவை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார். காசிக்கும் தமிழகத்துக்கும் இடையே உள்ள அறிவுப் பிணைப்பு மற்றும் பழங்கால நாகரிகத் தொடர்புகளை மீண்டும் கண்டறியும் வகையில் ஒரு மாத கால நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ‘காசி தமிழ் சங்கமத்தில்’ தமிழ்நாட்டிலிருந்து 2,500க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள், மக்களுடன் தொடர்புகொள்வதற்காக, இச் சிறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள். பிரதிநிதிகள் வாரணாசி மற்றும் அதைச் சுற்றியுள்ள ஆர்வமுள்ள இடங்களையும் பார்வையிடுவார்கள்.

3.தனிப்பட்ட விவசாயிகளுக்கு 40% மானிய விலையில் வேளாண் இயந்திரங்கள்

இத்திட்டத்தில், தனிப்பட்ட விவசாயிகளஉக்கு 40 சதவிகித மானியத்தில், சிறு, குறு, ஆதிதிராவிட, பழங்குடியின, பெண் விவசாயிகளுக்கு 50 சதவிகித மானியத்திலும் வேளாண் இயந்திரங்கள் விநியோகம் செய்யப்படும். அதிகபட்சமாக டிராக்டருக்கு ரூ.5 இலட்சம். மினி டிராக்டருக்கு ரூ. 2லட்சத்து 25 ஆயிரம், பவர்டில்லருக்கு ரூ.85,000/- என மானியம் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் உழவன் செயலி மூலமாகவோ அல்லது http://aed.tn.gov.in என்ற இணையத்தளம் வாயிலாகவோ விண்ணப்பிக்கலாம். கூடுதல் தகவலுக்கு அருகிலுள்ள வேளாண்மைப் பொறியியல் துறை அலுவலகத்தை அணுகலாம்.

4.விவசாயிகளுக்கு 100 யூனிட் இலவச மின்சாரம் குறித்து ஆய்வுக் கூட்டம்

மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி அவர்கள் தலைமையில் நடப்பாண்டில் 50,000 தமிழக விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்குவது பற்றியும் தமிழகத்தில் எதிர்பார்க்கப்படும் கனமழை குறித்தும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் விவசாயிகள் அனைவரும், ஆதார் எண்ணை மின் இணைப்பு எண்ணுடன் இணைப்பதால் 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்குவதில் எந்தவித பாதிப்பும் ஏற்படாது என மின்சாரத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

5.பாலாறு பொருந்தலாறு அணையிலிருந்து தண்ணீர் திறப்பு

திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டம், பாலாறு பொருந்தலாறு அணையிலிருந்து தாடாகுளம், முதல் போக சாகுபடி நிலங்களுக்கு பாசன வசதி அளிக்கும் பொருட்டு வரும் நவம்பர் 20 முதல் மார்ச் 29 தேதி வரை 130 நாட்களுக்கு மொத்தம் 224.64 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்துவிட அரசு ஆணையிட்டுள்ளது. இதனால் திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டத்தில் உள்ள புதச்சு மற்றும் பாலசமுத்திரம் ஆகிய கிராமங்களில் உள்ள 844 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என ஆரசு கூடுதல் தலைமைச் செயலாளர், நீர்வளத்துறை அவர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

6.“தினையிலிருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்க” 2 நாள் பயிற்சி

வரும் நவம்பர் 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் உள்ள வேளாண் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் உள்ள அறுவடை தொழில்நுட்ப மையத்தில் “தினையிலிருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்க” இரண்டு நாள் பயிற்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பின்வரும் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களில் தினையை பதப்படுத்துவது, இந்த பயிற்சி திட்டத்தின் நோக்கமாகும்.

  1. பாரம்பரிய உணவுகள்
  2. பாஸ்தா உணவுகள்
  3. பேக்கரி பொருட்கள்
  4. உடனடி உணவு கலவைகள்.

ஆர்வமுள்ள நபர்கள் (ரூபாய் ஆயிரத்து எழுநூற்று எழுபது மட்டும்) பயிற்சியின் முதல் நாளில் நேரில் செலுத்தி பயிற்சியில் பங்குபெற அறிவுறுத்தப்படுகிறார்கள்.

7.Saras Aajevika Mela 2022 மற்றும் India International Trade Fair

சரஸ் அஜீவிகா 2022 இன் இந்த கண்காட்சியில் நாடு முழுவதிலுமிருந்து சுமார் 300 பெண்கள் பங்கேற்றுள்ளனர். அவர்களை ஊக்குவிக்கும் வகையில், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கிரிராஜ் சிங் இந்த கண்காட்சியை நேற்று தொடங்கி வைத்தார். பொருளாதார ரீதியில் தன்னிறைவு பெற்றவர்களுக்கு அவர்களின் வாழ்வாதார வளங்களை வீட்டிலேயே வழங்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் படிக்க:

2022-23: கல்வி உதவித்தொகை ரூ.2லட்சம் வரை அரசு அறிவிப்பு! Apply Today

GST மற்றும் E-way Billing (Advance) குறித்த இணையவழி பயிற்சி

English Summary: Tamilnadu Agriculture News: Extension of time for PMFBY crop insurance! |100 units of free electricity Update Published on: 19 November 2022, 03:20 IST

Like this article?

Hey! I am Deiva Bindhiya. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.