புதுக்கோட்டை மாவட்டத்தில் 1.100 டன் கொப்பரைத் தேங்காய் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தெரிவித்தார்.
கொப்பரை (Cauldron)
கொப்பரை என்பது தேங்காயை நன்கு உலரவைத்த பின்னர் கிடைக்கும் ஒரு பொருள் ஆகும். தேங்காய் அளவுக்கு மீறி முற்றி இருந்தால் உள்ளிருக்கும் தேங்காய் நீர் முற்றிலுமாய் வற்றி விடும். அப்படி மிக முற்றியத் தேங்காயை கொப்பரைத் தேங்காய் என்று அழைப்பார்கள்.
வெயிலில் உலர்த்தி (Sun dryer)
தேங்காய் எண்ணெய் எடுப்பதற்குக் கொப்பரை பயன்படுகிறது. நீர் முற்றாக வற்றாத தேங்காய்களை வெயிலில் நன்கு உலர்த்தி அதைக் கொப்பரை ஆக்குவர்.
முக்கிய விவசாயப் பொருள் (The main agricultural product
இது பல தேங்காய் உற்பத்தி செய்யும் நாடுகளுக்கு ஒரு முக்கியமான விவசாய பொருளாக அமைகிறது. இதில் எண்ணெயை பிரித்தெடுத்த பிறகு தேங்காய்க் கழிவு புண்ணாக்கு ஆகும். புண்ணாக்கு கால்நடைகளுக்கு. தீவனமாக பயன்படுத்தப்படுகிறது.
அமைச்சர் தொடங்கிவைத்தார் (The Minister began)
அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி வட்டம், ராஜேந்திரபுரம் தென்னை வணிக வளாகத்தில் வேளாண் விற்பனைத் துறை மற்றும் வேளாண் வணிகத் துறையின் கொப்பரைத் தேங்காய் கொள்முதலை அமைச்சர் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
கொள்முதல் பணிகள் (Procurement Tasks)
தேங்காய் விலை சரிந்துள்ளதால், தென்னை விவசாயிகளுக்குப் பயனளிக்கும் வகையில் கொப்பரைத் தேங்காயை அரசின் ஆதார விலையான கிலோ ரூ.103.35 என்ற விலையில் கொள்முதல் செய்யும் பணிகள் தொடங்கப் பட்டுள்ளன.
விலை நிலவரம் (Price situation)
கடந்த 2019-20ல் 18.750 கிலோ டன் கொப்பரை கிலோ ரூ.95.21 என்ற விலையிலும், 2020-21ம் ஆண்டில் 6.150 டன் கொப்பரை. கிலோ ரூ.99.60 என்ற விலையிலும் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
கொள்முதல் இலக்கு (Purchase target)
நிகழாண்டில் ஆலங்குடி, அறந்தாங்கி வேளாண் விற்பனை நிலையங்கள் மூலம் மொத்தம் 1.100 டன் தேங்காய் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப் பட்டுள்ளது. நிகழாண்டில் கிலோ ரூ.103.35 என்ற விலை வரும் செப்டம்பர் வரை வழங்கப்படும்.
தமிழக அரசின் பசுமைக் குழு மூலம் மாவட்டத்தில் சைல், சீமைக்கருவேல மரங்கள் அகற்றப் படும். இவ்வாறு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் பெ.வே.சரவணன். வேளாண் வணிகத் துறை துணை இயக்குநர் சங்கரலட்சுமி, விற்பனைக் குழு மேலாளர் மல்லிகா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மேலும் படிக்க...
காய்கறி தோட்டங்கள் அமைப்பது குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு!
காய்கறி பயிர்களில் எப்போது அறுவடை செய்தால் தரமான விதைகள் கிடைக்கும்?