Farm Info

Monday, 14 December 2020 08:35 PM , by: KJ Staff

Credit : Dinamalar

நாகை அருகே பச்சை பசேலென இருக்கும் விளைநிலங்களில் புகுந்து நெற்பயிர்களை (Paddy Crops) பாழாக்கும் எலிகளை பிடிக்க எளிமையான தொழில்நுட்பத்தை விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர்.

எளிமையான தொழில்நுட்பம்

நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் அடுத்துள்ள பட்டமங்கலம், இலுப்பூர்சத்திரம், தேவூர், கூத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் விவசாய நிலங்களில் நெல் பயிர்கள் நன்கு வளர்ந்து பச்சை பசேலென பார்ப்பவர்களின் கண்களுக்கு விருந்தளிக்கின்றன. இந்த விளைநிலங்களில் வளைகளை அமைத்து வாழும் எலிகள் (Rats) நெற்பயிரை அழித்து விவசாயிகளுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தி வருகின்றன. எலிகளை பிடிக்க விவசாயிகள் எளிமையான தொழில்நுட்பத்தை (Techniques) பயன்படுத்தி வருகின்றனர்.

குறைந்த செலவில் வழிமுறை:

ஒரு பானையில் (Pot) வைக்கோல்களை (Starw) அடுக்கி, நெருப்பு வைத்து, அதில் இருந்து வரும் வெளிவரும் புகையினை நிலத்தில் அமைத்துள்ள எலி வளைக்குள் செலுத்துகின்றனர். எலி வளைக்குள் செல்லும் புகையால் அங்கிருக்கும் எலி மூச்சு திணறி இறந்து விடும் அல்லது புகையில் இருந்து தப்பி செல்வதற்காக பாதையில் மண்ணை விலகி கொண்டு வெளியேறும் போது அந்த இடத்தை வெட்டி எலியை பிடிக்கின்றனர். இதற்கு குறைந்த செலவு ஆவதால் தற்போது நாகையில் பல இடங்களில் இந்த முறையை பயன்படுத்தி தான் எலிகளை வேட்டையாடி வருகின்றனர்.

நெற்பயிர்களை வேட்டையாடும் எலிகளுக்கு இந்த எளிய முறை, குறைந்த செலவில் நல்ல பலனளிக்கிறது. இனி, விவசாயிகள் மகசூலை அதிகரித்து இலாபம் ஈட்டலாம்.

Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்

மேலும் படிக்க

பயறு வகைகளில் விதை நேர்த்தி! மகசூலை அதிகரிக்கும் வழிகள்!

புஞ்சை நிலத்தை செழிப்பாக்க பண்ணைக் குட்டைகளை அமைப்போம்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)