வேளாண்மை பொறியியல் துறையில் உள்ள குழி எடுக்கும் கருவியை வாடகைக்கு வாங்கி விவசாயிகள் தங்கள் விளைநிலங்களில் குழி அமைக்கும்பணிகளை மேற்கொள்ளலாம் என அதிகாரிகள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.
மழைநீரை சேமிக்க (Save Rainwater)
தமிழகத்தின் பல பகுதிகளில் தென்னந்தோப்பு, மா,கொய்யா எலுமிச்சை போன்ற தோட்டக்கலைப் பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. அவ்வாறு விளைச்சல் நடைபெற்றுவரும் நிலங்களில், சரிவின் குறுக்கே குழிகளை அமைத்து, வரும் மழைக் காலத்தில் அதிக மழை தண்ணீரைத் தேக்கி வைக்கலாம்.
தண்ணீர் தட்டுப்பாடு குறையும் (water scarcity)
இதனால் ஆள்துளை கிணறு மற்றும் கிணறுகளில் நிலத்தடி நீர்மட்டம் உயரவும் வாய்ப்பு உள்ளது. நிலத்தடி நீர் உயர்ந்தால், தண்ணீர் தட்டுப்பாடும் குறையும். பாசனத்தை மேற்கொள்வதிலும் சிக்கல் இருக்காது.
அனைத்து மாவட்டங்களிலும் வேளாண்மை பொறியியல் துறையில் இந்த கருவி உள்ளது.
எனவே இதனை செய்ய விரும்பும் விவசாயிகள் அருகில் உள்ள வேளாண்மை பொறியியல் துறை அலுவலகங்களுக்குச் சென்று முன்பதிவு செய்து கொள்ளலாம். இந்த கருவிகளுக்கு ஒரு மணிநேரத்திற்கு வாடகையாக 340 ரூபாய் செலுத்த வேண்டும்.
மேலும் படிக்க...
மாடு வளர்க்க மலைப்பாக இருக்கா- சற்று மாற்றி யோசிங்க!
திசு வளர்ப்பு மூலம் உயர் ரகத் தென்னை - வேளாண்ப் பல்கலைக்கழகம் முயற்சி!