திருப்பத்துார் அருகே, ஆட்சியரும், அவர் மனைவியும் வயலில் இறங்கி நாற்று நட்ட சம்பவம் மற்றவர்களை வியப்படையச் செய்தது.
சாகுபடிப் பணிகள் (Cultivation works)
திருப்பத்துார் மாவட்டத்தில், கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் ஏரி, குளம், குட்டைகள் நிரம்பி வருவதால், விவசாயிகள் நிலத்தில் நாற்று நடும் பணிகளைத் தொடங்கினர்.
நாற்று நட ஆசை (Desire to Seedling planting)
இதன் ஒருபகுதியாக, திருப்பத்துார் அருகே மூக்கனுார் கிராமத்தில் நாற்று நடும் பணிகளை மாவட்ட ஆட்சியர் அமர்குஷ்வாஹா ஆய்வு செய்தார். அப்போது அவர் மனைவி ஷிவாலிகா நாற்று நடுவதை ஆச்சரியத்துடன் பார்த்தார். உடனே அவருக்குள் நாற்றுநடும் ஆசைத் துளிர்விட, அதை கவனித்த ஆட்சியர், தாம் முதலில் களமிறங்க விரும்பினார்.
சற்று நேரத்தில், ஆட்சியர் அமர்குஷ்வாஹா நிலத்தில் இறங்கி சேறு, சகதியை பார்க்காமல் நாற்று நட்டார்.
மக்கள் வியப்பு
அதைப் பார்த்த ஆட்சியரின் மனைவியும் அடுத்ததாக வயலில் இறங்கி நாற்று நட்டார். ஒரு மணி நேரம் ஆட்சியரும், அவர் மனைவியும் விவசாயிகளோடு நாற்றுக்கள் நடுவதை அப்பகுதி மக்கள் வியப்புடன் பார்த்தனர்.
அனைவரையும் ஈர்க்கும்
என்பது ஆதி காலம் முதல் அனைவரையும் தன்வசம் ஈர்த்து தன்மை படைத்தது என்பது உண்மை. அதனால்தான், தற்போதையக் கணினி காலத்திலும் ஐடி மக்களையும் கவர்ந்து இழுத்து வருகிறது. இந்த நிலைத் தொடர்ந்தால், எதிர்காலத்தில், நாம் அனைவரும், அவரவருக்கான உணவை, உற்பத்தி செய்யும் நிலை ஏற்பட்டாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.
மேலும்படிக்க...