1. விவசாய தகவல்கள்

கோடிகளைக் குவிக்க உதவும் குப்பைகள் (வாழை நார்) - VAP தயாரிப்பு!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar

வாழை நாரில் இருந்து பல்வேறு விதமான மதிப்புக் கூட்டப்பட்டப் பொருட்கள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. இதனை விவசாயிகளும் தெரிந்துகொண்டால், கூடுதல் வருவாயை ஈட்ட பேருதவியாக இருக்கும்.

வாழை சாகுபடி (Banana cultivation)

தமிழகத்தில் 3 லட்சம் ஏக்கரில் வாழை சாகுபடி செய்யப்படுகிறது. குறிப்பாக திருச்சி, திருநெல்வேலி, தூத்துக்குடி, மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் அதிக அளவில் உள்ளன.

வாழை மரங்கள் குலைகள் வெட்டிய பின்னர் தண்டுகள் உறித்தபின் குப்பையாக கருதப்பட்ட காலம் ஒன்று. ஆனால் இன்று இந்த வாழைமட்டைகள் கோடிகளைக் குவிக்கும் செல்வமாகவேக் கருதப்படுகிறது.

நார் பிரித்தெடுத்தல் (Fiber extraction)

வாழையின் தண்டுப் பகுதியை அறுவடை செய்தப் பின்னர், 48 மணி நேரத்தில் நார் பிரித்தெடுத்தல் நடை பெற வேண்டும். வாழைநார் பிரித்து எடுக்க இயந்திரம் உள்ளது. எட்டு மணி நேரத்தில் 30 கிலோ வாழை நார் பிரித்து எடுக்க முடியும். ஒரு மாதத்தில் இருந்து 300 கிராம் நார் பிரித்து எடுக்க முடியும்.

வாழை நூல் உற்பத்தி

 • வாழை மட்டை நார் எடுக்கும் போது சிறு சிறு நூலாக இருக்கும். அவற்றைத் தண்ணீரில் ஊறவைத்து சீப்பு வைத்துக் கோதி விடவேண்டும்.

 • நாரின் இரு முனைகளிலும் கயிற்றில் கட்டி வைக்க வேண்டும்.

 • 2 குடம் தண்ணீரைக் கொதிக்க வைத்து அதில் 100 கிராம் தேவைப்படும் கலர் சாயப்பொடி ஒரு கிலோ உப்பு சேர்த்து சாயம் உருவாக்க வேண்டும்.

 • ஐந்து நிமிடங்கள் கட்டப்பட்ட நாரில் ஊற வைக்கவும்.

 • சாயம் ஏற்றப்பட்ட நார் அரை மணி நேரம் உலர வைத்து நூலாகப் பிரிக்க வேண்டும்.

 • பின்னர் நமக்கு தேவையான பொருட்களை வாழை நூலில் இருந்துத் தயார் செய்து கொள்ள முடியும்.

வாழை நாரின் பயன்கள் (Benefits of Banana Fiber)

 • சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத பைகள், கைப்பைகள் தொப்பிகள், கால் மிதியடிகள் பேப்பர் கப்கள் உள்ளிட்டவற்றைத் தயாரிக்க முடியும். வெளிநாட்டு ஏற்றுமதி செய்ய வாய்ப்பு உள்ளது.

 • வாழை நாரில் இருந்து புடவை தயாரித்து விற்பனை செய்யப்படுகிறது. இது பெண்களிடம் அமோக வரவேற்பு பெற்றுள்ளது.

 • வாழை மரத்தின் எந்த ஒரு பாகமும் வீணாவதில்லை. எனவே, அது ஒரு கற்பக விருட்சம் என்று சொல்வது மிகையாகாது.

 • எனவே வாய்ப்பு உள்ள இடங்களில், இது சிறு மற்றும் குடிசைத் தொழிலாக உள்ளது.

 • விவசாயிகளுக்கு இதன் மூலம் கூடுதல் வருமானமும் கிடைக்கும்.

தகவல்

அக்ரி சு சந்திரசேகரன்

வேளாண் ஆலோசகர் அருப்புக்கோட்டை

9443570289

மேலும் படிக்க...

அனைத்து பட்டத்திற்கு ஏற்ற கோ 8 ரகம்- சாகுபடி சூட்சமங்கள்!

சிறுதானியங்களில் மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்களைத் தயாரிக்கும் பயிற்சி!

English Summary: Garbage (Banana Fiber) - VAP Product!

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2022 Krishi Jagran Media Group. All Rights Reserved.