கூடலூர் பகுதியில், பாக்குத் தோலை எளிதாக நீக்க மிகச்சிறிய அளவிலான புதிய உபகரணத்தை விவசாயிகள் பயன்படுத்த துவங்கி உள்ளனர்.
பாக்கு சாகுபடி (Pakku Cultivation)
நீலகிரி மாவட்டம், கூடலூர், பந்தலூர் பகுதி விவசாயிகள் தேயிலை, காபி தோட்டங்களில் ஊடுபயிராக பாக்கு சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தோல் நீக்கம் கடினம் (Skin removal is difficult)
இங்கு விளையும் பாக்கு, தமிழகம் மட்டுமின்றி, கேரளா, கர்நாடக மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.ஆனால் பாக்கை அதன் தோலில் இருந்து பிரித்து எடுப்பது சற்று சிரமம். அவ்வாறுத் தோலை கத்தியைப் பயன்படுத்தி நீக்குவது மிகவும் கடினமான விஷயம். இருப்பினும் இந்த முறையையே பல ஆண்டுகளாக விவசாயிகள் பயன்படுத்தி வந்தனர்.
இந்த முறையில் கைகள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. இதனால் விவசாயிகள் மிகுந்த கவனத்துடன் பாக்குத் தோலை நீக்க வேண்டிய நிலை இருந்து வந்தது.
தோல் நீக்கும் இயந்திரம் (Tanner)
எனவே இந்தப் பிரச்னையில் இருந்து விவசாயிகளை விடுவிக்கும் வகையில், தேங்காய் உரிக்க பயன்படுத்துவதைப் போன்ற அளவில் சிறியதாக உள்ள பாக்குத் தோல் நீக்கும் உபகரணம் விற்பனைக்கு வந்துள்ளது.
பாதுகாப்பானது (Safe)
இவற்றை வாங்கி விவசாயிகள் எளிதாக பாக்குத்தோலை நீக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இது குறித்து விவசாயிகள் கூறுகையில், பாக்கு தோலை நீக்க சிறிய கத்தியை பயன்படுத்துவதில் பல்வேறு சிரமங்கள் உள்ளன. விரல்களில் காயங்கள் ஏற்படும் வாய்ப்புள்ளது தற்போது, உபயோகத்துக்கு வந்துள்ள இந்த சிறிய உபகரணம் பாக்கு தோலை நீக்க, எளிதாகவும், பாதுகாப்பாகவும் உள்ளது.
நேரம் மிச்சமாகும் (Time is running out)
வரும் காலத்தில் இதை சற்று நவீனப்படுத்தி, மின்சாரத்தில் இயங்கும் இயந்திரத்தை கண்டு பிடித்தால், நேரம் மிச்சமாகும். அதற்கு, மாநில அரசு நடவடிக்கை எடுக்க மனு அனுப்பி உள்ளோம். நீலகிரி மாவட்ட அதிகாரிகளும் இதற்கான முயற்சியை மேற்கொள்ள முடியம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
மேலும் படிக்க...
பகலில் சுட்டெரிக்கும் வெயில்- தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!
இயற்கை விவசாயத்திற்கு மானியம்- விவசாயிகளுக்கு அழைப்பு!
இதை செய்தால் போதும்- மாமரப் பூக்கள் அனைத்தும் காய்களாக மாறும்!