பந்து மற்றும் அரவை கொப்பரைக்கான கொள்முதல்: தரம் எப்படி இருக்க வேண்டும்? நெல்-வாழை மற்றும் பயறு வகை பயிர்களுக்கான காப்பீடு- விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 14 August, 2021 5:28 PM IST
amil Nadu Agriculture Budget

தமிழ்நாட்டு வரலாற்றில் முதல் முறையாக விவசாயத்துக்கான தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. 273 பக்கங்கள் கொண்ட வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடுபவர்களுக்கு வேளாண் பட்ஜெட்டை காணிக்கையாக வழங்கிறேன் என்று அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் பட்ஜெட் தாக்கலை தொடங்கினார். சர்வதேச நிபுணர்களின் கருத்தை கேட்டு வேளாண் பட்ஜெட்டை தயாரித்துள்ளோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழக வேளாண் பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்

  • தமிழ்நாட்டில் விவசாயம் நடைபெறும் பரப்பளவு 11.07 லட்சம் ஹெக்டேர் ஆக அதிகரிக்கப்படும்.
  • இருபோக சாகுபடி நடைபெறும் பரப்பை 10 லட்சத்தில் இருந்து 20 லட்சம் ஹெக்டேராக உயர்த்தப்படும், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வளர்ச்சித் திட்டம் என்ற புதிய திட்டம் அமல்படுத்தப்படும்.
  • கால்வாய், பாசன நீர்வழித் தடங்களை தூர்வாரும் திட்டம் ரூ.250 கோடி செலவில் உபயோகிக்கப்படும்.
  • தமிழ்நாட்டில் பனைமர வளர்ப்பை அதிகரிக்க 30 மாவட்டங்களில் புதிய திட்டம் தொடங்கப்படும்.
  • நெல் ஜெயராமன் சேகரித்த மரபுசார் நெல் ரகங்கள் பாதுகாப்பு இயக்கம் அமல்படுத்தப்படும், தமிழ்நாட்டில் பாரம்பரிய நெல் வகைகள் 200 ஏக்கர் பரப்பளவில் உற்பத்தி செய்யப்படும்.
  • 76 லட்சம் பனை விதைகள், ஒரு லட்சம் பனைமர கன்றுகள் இலவசமாக கொடுக்கப்படும்.
  • பனைவெல்லம் பயன்பாட்டை அதிகரிக்கும் வகையில் ரேஷன் விலைக்கடைகளில் கருப்பட்டி விற்பனை செய்யப்படும்.
  • இளைஞர்களை வேளாண் தொழில் முனைவோராக்கும் திட்டம் ரூ.2.68 கோடியில் மத்திய - மாநில நிதியில் செயலாக்கப்படும்.
  • வேளாண்மையின் முக்கியத்துவத்தை தெரிந்து கொள்ளும் வகையில் மாநில அளவில் மரபுசார்பு வேளாண்மைக்கான அருங்காட்சியம் நிறுவப்படும்.
  • பழப்பயிர் சாகுபடி பரப்பை அதிகரிக்க 80 லட்சம் பல்வகைச் செடிகள் தோட்டக்கலை பண்ணைகள் மூலம் வழங்கப்படும்
  • கரும்பு விவசாயிகளுக்கான ஊக்கத்தொகை டன் ஒன்றுக்கு 42.50 ரூபாய் வழங்கப்படும்
  • இருபோக சாகுபடி பரப்பை 10 லட்சத்தில் இருந்து 20 லட்சம் ஹெக்டேராக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்.

 

இன்னும் பல புதிய திட்டங்கள்:

  1. கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வளர்ச்சித் திட்டம் என்ற புதிய திட்டம்
  2. மழை நீர் சேகரிப்பு அமைப்பை வலுப்படுத்துதல் மற்றும் பாசன பரப்பை வலுப்படுத்துதல்
  3. சிறு குறு விவசாயிகளை ஒருங்கிணைத்து கூட்டு பண்ணை முறையை ஊக்குவித்தல்
  4. பயிறு வகை விலையை கட்டுப்படுத்த, பயிறு விவசாயிகளை காப்பாற்ற ரூ.45.97 கோடி ஒதுக்கீடு
  5. அரசு விதைப் பண்ணைகள் மூலம் ரூ25 லட்சம் செலவில் நெல் விதைகள் உற்பத்தி
  6. கலைஞர் கொண்டு வந்த உழவர் சந்தை திட்டத்திற்கு புத்துயிர் அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும்
  7. கடலூரில் பலா சிறப்பு மையம் அமைக்கப்படும். 

சூரிய சக்தி மூலம் இயங்கும் பம்பு செட்டுகள் அமைக்கும் திட்டத்தின் கீழ் நடப்பு நிதியாண்டில் 10 ஹார்ஸ் பவர் வரையிலான 5000 பம்பு செட்டுகள் 70%  மானியத்தில் நிறுவப்படும். இந்த திட்டத்திற்கான செலவு  ரூ.114 கோடியே 68 லட்சம் ஆகும்.

மேலும் படிக்க:

மீன் வளர்ப்பு: ஆண்டுக்கு ரூ. 25,000 முதலீடு ! ரூ .2 லட்சம் வருமானம்

முதல் வேளாண் பட்ஜெட்: கரும்பு கொள்முதல், நெல் குறைந்த பட்ச ஆதார விலை உயர்வு!

English Summary: TN Budget 2021: Tamil Nadu Agriculture Budget Highlights
Published on: 14 August 2021, 05:28 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now