1. செய்திகள்

முதல் வேளாண் பட்ஜெட்: கரும்பு கொள்முதல், நெல் குறைந்த பட்ச ஆதார விலை உயர்வு!

R. Balakrishnan
R. Balakrishnan

Minimum support price hike for paddy

தமிழக சட்டசபையில், முதல்முறையாக இன்று 273 பக்கங்களை கொண்ட வேளாண் பட்ஜெட் (Agri Budget) தாக்கல் செய்யப்பட்டது. அதில், நெல்லுக்கான குறைந்த பட்ச ஆதார விலை உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடும் விவசாயிகளுக்கு இந்த பட்ஜெட் காணிக்கை என்று வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்து அமைச்சர் பன்னீர்செல்வம் கூறினார்.

உழவர்களை உயர்த்தி அழகு பார்க்கும் நோக்கோடு விவசாயத்திற்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. பல்வேறு தரப்பினரிடம் ஆலோசனைகளை பெற்று, விவசாயிகளின் கருத்துகள் உள்வாங்கி வேளாண் பட்ஜெட் தயாரிக்கப்பட்டு உள்ளது. உலகளாவிய வேளாண் வல்லுநர்களின் கருத்துகளும் கேட்கப்பட்டு உள்ளது. சவால்களில் இருந்து வேளாண் துறையை மீட்டெடுக்கும் நோக்குடன் பட்ஜெட் தயாரிக்கப்பட்டு உள்ளது.

பட்ஜெட் முக்கிய அம்சங்கள்

 • இளைஞர்களை வேளாண் தொழிலில் ஈடுபடுத்துதல் உள்ளிட்ட 16 அம்சங்ககளுடன் பட்ஜெட் தயாரிப்பு
 • உணவு தன்னிறைவை தமிழகம் ஓரளவிற்கு எட்டிவிட்டது.
 • உணவு, ஊட்டச்சத்து பாதுகாப்பை அடுத்த 10 ஆண்டுகளுக்குள் எட்ட வேண்டும் என்பதே நோக்கம்.
 • நிகர சாகுபடி பரப்பை (Cultivation area) 65 சதவீதத்தில் இருந்து 75 சதவீதமாக உயர்த்த நடவடிக்கை
 • கூடுதலாக 11.75 எக்டர் பரப்பில் சாகுபடி செய்ய இலக்கு
 • 10 லட்சம் ஹெக்டேர் பரப்பளவிலான இரு போக சாகுபடியை அடுத்த 10 ஆண்டுகளில் 20 லட்சம் ஹெக்டேராக உயர்த்துதல்
 • 'கலைஞர் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம்' என்ற புதிய திட்டம் செயல்படுத்தப்படும். இந்த திட்டம் முதல்கட்டமாக 2,500 கிராமங்களில் செயல்படுத்தப்படும். கிராமங்களில் உள்ள தரிசு நிலங்களை சாகுபடிக்கு கொண்டு வருவதே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம். இதற்காக ரூ.250 கோடி செலவு செய்யப்படும்.
 • கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் திட்டத்தில் சூரிய சக்தி பம்பு செட்கள் (Solar power pump set) அமைக்கப்படும்.
 • முதல்வரின் மானாவரி நில மேம்பாட்டு இயக்கம் ரூ.146.64 கோடியில் செயல்படுத்தப்படும்
 • இயற்கை வேளாண்மை வளர்ச்சி திட்டம் ரூ.33 கோடியில செயல்படுத்தப்படும்.
 • மாநில அளவில் மரபுசார் வேளாண்மை அருங்காட்சியகம் சென்னையில் அமைக்கப்படும்
 • பட்டுக்கோட்டையில் தென்னை வளர்ச்சி வாரிய துணை மண்டல மையம் அமைக்க நடவடிக்கை
 • டெல்டா தென்னை விவசாயிகளுக்காக தென்னை மதிப்பு கூட்டும் மையம் தஞ்சாவூரில் அமைக்கப்படும்
 • மழையில் நெல்மூட்டைகள் பாதிக்கப்படுவதை தடுக்க ரூ.52.02 கோடியில் விவசாயிகளுக்கு தார்ப்பாய்கள் வழங்கப்படும்
 • ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு நடவடிக்கைக்கு ரூ.10.20 கோடி
 • நடவுப்பொருட்கள் உற்பத்தி மேம்பாட்டிற்கு ரூ.21.80 கோடி
 • இலகுரக சரக்கு வாகனங்கள் வாங்கும் திட்டத்திற்கு ரூ.59.55 கோடி
 • சூரிய சக்தி பம்பு செட்களுக்கான மானிய திட்டம் ரூ.114.68 கோடி செலவில் செயல்படுத்தப்படும்
 • துவரை உளுந்து, பச்சைப்பயிறு போன்ற பயிறு வகைகள் 61 ஆயிரம் மெட்ரிக் டன் அளவிற்கு கொள்முதல் செய்யப்படும். புரதச்சத்து மிக்க பயிறு வகைகள் கூட்டுறவு சங்கங்கள் நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் கொள்முதல்.
 • மதிய உணவு திட்டத்திலும், ரேசன் கடையிலும் பயிறு வகைகள் விநியோகிக்கப்படும்.
 • கரும்பின் பிழிதிறனை அதிகரிக்கும் வகையில் சிறப்பு திட்டத்திற்கு ரூ.2 கோடி ஒதுக்கீடு

தமிழக சட்டசபையில் இன்று வேளாண் பட்ஜெட் தாக்கல் 

 • கரும்பு விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்க ரூ.40 கோடி
 • பழப்பயிற்சாகுபடிக்கு ரூ.29.21 கோடி
 • காய்கறி, கீரை சாகுபடிக்கு ரூ.95 கோடி
 • நெல் ஜெயராமன் மரபு சார்நெல் ரகங்கள் பாதுகாப்பு இயக்கத்திற்கு ரூ.25 லட்சம் ஒதுக்கீடு
 • இளைஞர்களை வேளாண் தொழில் முனைவோராக்கும் திட்டத்திற்கு ரூ.2.68 கோடி
 • ஊரக இளைஞர் வேளாண் திறன் மேம்பாட்டு இயக்கத்திற்கு ரூ.5 கோடி ஒதுக்கீடு. இந்த திட்டம் மூலம் 2500 இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.
 • திருவள்ளூர், திருச்சி, கடலூர், விழுப்புரம், சேலம், திருவாரூர் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் விதைப்பண்ணைகளில் 200 ஏக்கர் பரப்பளவில் விதை உற்பத்தி செய்யப்படும்.
 • நடப்பாண்டில் 30 மாவட்டங்களில் 76 லட்சம் பனை விதைகள் மரக்கன்றுகள் மானியததில் விற்பனை செய்யப்படும். பனைமரங்களின் பரப்பு வெகுவாக குறைவதால் திட்டத்தை செயல்படுத்த3 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இனி, பனை மரங்களை வெட்ட மாவட்ட கலெக்டர்களின் அனுமதி தேவை.
 • சிறுதானிய இயக்கத்திற்கு ரூ.12.44 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
 • நெல்லுக்கான ஆதரவு நிலை உயர்த்தப்படுகிறது. ஒரு குவிண்டால் நெல், சன்னரகத்திற்கு குறைந்த பட்ச ஆதார விலை ரூ.70ல் இருந்து ரூ.100 ஆக உயர்த்தப்படுகிறது. இதன் மூலம் இந்த நெல், ஒரு குவின்டாலுக்கு ரூ.2,060க்கு கொள்முதல் செய்யப்படும்.
 • சாதாரண ரகத்திற்கு ரூ.50ல் இருந்து ரூ.75 ஆகவும் உயர்த்தப்படுகிறது. இதனால், இந்த நெல்வகை, ஒரு குவிண்டாலுக்கு ரூ.2,015க்கு கொள்முதல் செய்யப்படும்.
 • தமிழகத்தில் பயிர்காப்பீடு திட்டத்தை செயல்படுத்த ரூ.2,327 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
 • விவசாயிகளுக்கான இலவச மின்சார திட்டத்திற்கு ரூ.4508.23 கோடி ஒதுக்கீடு
 • உழவர் சந்தைகளை புனரமைத்து நவீனப்படுத்த ரூ.12.50 கோடி ஒதுக்கீடு.
 • கரும்பு கொள்முதல் விலை டன்னுக்கு ரூ.2,750 ல் இருந்து ரூ.2,900 ஆக உயர்த்தப்படும்
 • பயிர்க்காப்பீடு திட்டத்தில் விரைவி்ல 2வது தவணையாக ரூ.1,248.92 கோடி காப்பீடு நிறுவனங்களுக்கு விடுவிப்பு
 • நடப்பு நிதியாண்டில் உணவு பதப்படுத்துதலுக்கு தனி அமைப்பு உருவாக்கப்படும்
 • ஈரோடு, பவானிசாகரில் மஞ்சள் ஆராய்ச்சி நிலையம் அமைக்க ரூ.2 கோடி ஒதுக்கீடு
 • தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கு ரூ.573 கோடி ஒதுக்கீடு
 • கிருஷ்ணகிரி ஜீனூரில் 150 ஏக்கரில் ரூ.10 கோடி செலவில் தோட்டக்கலை கல்லூரி அமைக்கப்படும்
 • நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்திற்கு ரூ.3 கோடி ஒதுக்கீடு
 • பொன்னி அரிசி, பண்ரூட்டி பலா, கொல்லிமலை மிளகுக்கு புவிசார் குறியீடு பெற அரசு நடவடிக்கை
 • நடப்பு நிதியாண்டில் 4.6 லட்சம் ஏக்கரில் நெல்சாகுபடி செய்யப்பட்டது. இது பெரிய சாதனையாகும்.
 • நடமாடும் காய்கறி அங்காடிகள் வாங்க இளைஞர்களுக்கு ரூ.2 லட்சம் வரை மானியம் வழங்கப்படும்.
 • வேளாண் கடனாக ரூ.1.45 லட்சம் கோடி வழங்க விரிவான திட்டம்
 • வேளாண் உட்கட்டமைப்புகளை மேம்படுத்த ரூ.9607 கோடி கடன் வழங்க திட்டம்
 • நாட்டுக்கோழி இனப்பெருக்க பண்ணை உள்ளிட்ட திட்டங்களுக்கு ரூ.27.12 கோடி ஒதுக்கீடு
 • பண்ணைக்குட்டைகளில் மீன் வளர்க்கும் விவசாயிகளுக்கு மானியம் வழங்க ரூ.1.30 கோடி
 • 1700 மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை மேம்படுத்த ரூ.5 கோடி.

மேலும் படிக்க

சிறுதானியப் பயிர்கள் உற்பத்தியைப் பெருக்க ரூ.35.8 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.

English Summary: First Agriculture Budget: Sugarcane procurement, minimum support price hike for paddy!

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.