Farm Info

Monday, 24 May 2021 06:38 AM , by: Elavarse Sivakumar

திருவள்ளூர் மாவட்டத்தில் சொட்டுநீர்ப் பாசனம் அமைக்க விரும்பும் விவசாயிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக வேளாண்துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்

ரூ.20.20 கோடி ஒதுக்கீடு (An allocation of Rs.20.20 crore)

தோட்டக்கலை மூலமாக, நடப்பு 2021-22-ம் ஆண்டில் சொட்டுநீர்ப் பாசனம் அமைப்பதற்காக ரூ.20.20 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதியைப் பயன்படுத்தி 3,300 எக்டேர் பரப்பளவில் சொட்டுநீர்ப் பாசனம் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

100% மானியம் (100% subsidy)

சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீதமும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்திலும் சொட்டுநீர்ப் பாசனம் அமைத்துத் தரப்படும்.

புதுப்பிக்க வாய்ப்பு (Opportunity to renew)

7 ஆண்டுகளுக்கு முன்பு சொட்டுநீர்ப் பாசனம் அமைத்த விவசாயிகளும் இந்த மானியத்தில் குழாய்களைப் புதுப்பித்துக் கொள்ளலாம்.

50 சதவீத மானியம் (50 percent subsidy)

இதேபோல், சொட்டுநீர்ப் பாசனம் அமைக்கும் விவசாயிகளுக்குத் துணைநிலை நீர் மேலாண்மைத் திட்டத்தின் கீழ், பலவித உபகரணங்களுக்கு 50 சதவீத மானியம் வழங்கப்படுகிறது.

மின்மோட்டார் அமைக்க (Set the electric motor)

ஆழ்துளைக் கிணறு அமைக்க ஒரு விவசாயிக்கு ரூ.25 ஆயிரமும், டீசல் பம்ப் செட் அல்லது மின்மோட்டார் அமைக்க ரூ.15 ஆயிரமும் வழங்கப்படுகிறது.

நீர்த்தேக்கத் தொட்டி (Reservoir)

இதேபோல் கிணறு, ஆழ்துளைக் கிணற்றில் இருந்து நீரை எடுத்து வருவதற்கு குழாய்கள் அமைக்க ஒரு விவசாயிக்கு ரூ.10 ஆயிரமும், தரைநிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைக்க ரூ.40 ஆயிரமும் மானியமாக அளிக்கப்படுகிறது.

எக்டேருக்கு ரூ.3 ஆயிரம் (Rs.3,000 per hectare)

மேலும், சொட்டுநீர்ப் பாசனம் அமைக்கும் விவசாயிகளுக்கு குழாய்கள் பதிக்க குழி எடுக்க ஆகும் செலவை அரசு மானியமாக எக்டேருக்கு ரூ.3 ஆயிரம் வழங்கும். எனவே, விவசாயிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டுப் பயனடையுமாறு, வேளாண் துறை அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

தகவல்
ஐ.ஜெபக்குமாரி அனி
துணை இயக்குநர்
தோட்டக்கலைத்துறை
திருவள்ளூர் மாவட்டம்

மேலும் படிக்க...

பூ, பழங்கள், காய்கறிகளை விற்பனை செய்ய விவசாயிகள் தோட்டக்கலை துறையை தொடர்புக்கொள்ளலாம்!!

உரிய தொழில்நுட்பம் மூலம் மலர் சாகுபடி செய்து இழப்பைத் தவிருங்கள், விவசாயிகளுக்கு வேளாண் துறை அறிவுரை!!

ஊழல் எதிரொலி - 20,000 டன் துவரம்பருப்பு கொள்முதல் டெண்டர் அதிரடியாக ரத்து!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)