மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 17 September, 2022 3:04 PM IST
Today's Agriculture News and Subsidy Information!

40% மானியத்தில் பவர் டில்லர் மற்றும் டிராக்டர் அறிவிப்பு!

தோட்டக்கலை மலைப்பயிர்கள் துறை சார்பாகப் பவர் டில்லர் மற்றும் டிராக்டர் போன்ற கருவிகளுக்கு அரசு மானியம் அறிவித்துள்ளது. அந்த வகையில் 40% மானியத்தில் பவர் டில்லரும், 25% மானியத்தில் டிராக்ரும் வழங்கப்பட இருக்கிறது. பவர் டில்லர் 8BHPக்கு மேல் ரூ. 60 ஆயிரமும், 8BHPக்கு கீழ் ரூ.40 ஆயிரமும் பின்னேற்பு மானியமாக வழங்கப்படும். தேசிய தோட்டக்கலை இயக்கத்தின் கீழ் ரூ. 75 ஆயிரம் பின்னேற்பு மானியமாக டிராக்ரடுக்கு வழங்கப்படும். எனவே, இந்த பின்னேற்பு மானியத்தினை tnhorticulture.tn.gov.in அல்லது tnhortnet என்ற இணைய தளங்களில் பதிவுசெய்து பெறலாம் எனக் கூறப்படுகிறது.

மேலும் படிக்க: பெண்களுக்கு ரூ. 6000 கிடைக்கும் மத்திய அரசின் திட்டம்: இன்றே அப்ளை பண்ணுங்க!

நிலப்போர்வை அமைக்க ரூ. 6,400 மானியம் அறிவிப்பு!

தோட்டக்கலைப் பயிர்களைச் சாகுபடி செய்யும் விவசாயிகளின் வசதிக்காக, நிலப்போர்வை அமைக்க ஏக்கருக்கு ரூ. 6,400 வீதம் மானியம் வழங்கப்படும் என திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் வட்டாரத் தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் சுரேஷ்குமார் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். விவசாயிகள் தங்கள் விளைநிலங்களில் நிலப்போர்வை அமைத்துக் காய்கறிகள் மட்டுமல்லாமல் பழ மரங்களையும் சாகுபடி செய்யலாம். இதில் தக்காளி, மிளகாய், தர்பூசணி போன்ற பயிர்களைப் பயிரிடலாம். நிலப்போர்வை அமைக்க திருப்பூர் விவசாயிகளுக்கு ரூ. 1.6 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே, விருப்பமும் தகுதியும் உள்ள விவசாயிகள் வாங்கிப் பலனடையுங்கள்.

மேலும் படிக்க: 50% மானியத்தில் டிராக்டர்! இன்றே அப்ளை செய்யுங்க.!

தென்னை மரங்களுக்கு இலவச வரப்புகள் இப்பொழுதே விண்ணப்பிக்கலாம்!

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் வட்டார தோட்டக்கலைத்துறையில் தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ், தென்னந்தோப்புகளில் வட்ட பாத்தி மற்றும் வரப்புகள் அமைக்க விவசாயிகள் உடனடியாக விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைப் பெறுவதற்கு சிறு குறு விவசாய சான்று, ஆதார், நில அடங்கல், ரேஷன் கார்டு, 2 புகைப்படம் ஆகியவை தேவை. துங்காவி, மெட்ராத்தி, தாந்தோணி, காரத்தொழுவு, ஜோத்தம்பட்டி, கடத்தூர், மைவாடி, வேடப்பட்டி, சோழமாதேவி, கொழுமம், பாப்பான்குளம் ஆகிய ஊராட்சிகளை சேர்ந்த விவசாயிகள் இச்சலுகைக்கு விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: TNPSC: கூட்டுறவு சங்கங்களில் வேலைவாய்ப்பு அறிவிப்பு!

10,000 புதிய வேலை வாய்ப்புகள்! கையெழுத்திட்டார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!!

சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் துறை சார்பில் “தோள் கொடுப்போம் தொழில்களுக்கு” எனும் தலைப்பிலான மதுரை மண்டல மாநாடு, மதுரை அழகர்கோயில் சாலையில் உள்ள தனியார் ஓட்டலில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இம்மாநாட்டில் மதுரை விளாச்சேரியில் ரூ.4.03 கோடி மதிப்பில் பொம்மை குழுமம், தூத்துக்குடியில் 100% மானியத்துடன் ரூ.2.02 கோடி மதிப்பில் ஆகாயத் தாமரை குழுமம், விருதுநகரில் ரூ.3.40 கோடி மதிப்பில் மகளிர் விசைத்தறி குழுமம் ஆகிய 3 குழுமங்கள் அமைப்பதற்கான ஆணைகள் வழங்கப்பட்டன.

அதோடு, தொழில் நுட்பத்திற்கு (Industry 4.0) குறு சிறு நடுத்தர நிறுவனங்கள் தயார் படுத்திக் கொள்வதற்குப் பயிற்சி வழங்கும்பொருட்டு இண்டோ அமெரிக்கன் சேம்பர் ஆப் காமர்ஸ் மற்றும் தமிழ்நாடு அரசின் Fame TN நிறுவனம் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதன் விளைவாக தமிழகத்தில் புதிதாக வேலைவாய்ப்புகள் வர இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

75,000 சம்பளத்தில் வேலை: TNPSC குரூப் 3 தேர்வு! 10-ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்!!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஒருங்கிணைந்த குடிமைப் பணிகளில் அடங்கிய கூட்டுறவுத்துறை இளநிலை ஆய்வாளர் மற்றும் தொழில் மற்றும் வர்த்தகத்துறை பண்டக காப்பாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இப்பணிகளுக்குக் கல்வித்தகுதியாக 10-ஆம் வகுப்பு போதும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காலிய்யாக இருக்கக் கூடிய இந்த பணியிடங்களுக்கு விருப்பமும் தகுதியுள்ளவர்கள் வருகின்ற அக்டோப்பர் 14 ஆம் தேதி வரை tnpsc.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொல்லிமலை ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியில் சுற்றுலாப்பயணிளுக்குக் குளிக்க அனுமதி!

நாமக்கல் மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத் தளங்களில் ஒன்றாக இருக்கும் கொல்லிமலை ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது. கடந்த 5-ஆம் தேதி ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மழையின் தாக்கம் குறைந்ததாலும், நீர்வரத்து குறைந்ததாலும் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளூக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க

10,000 புதிய வேலை வாய்ப்புகள்! கையெழுத்திட்டார் மு.க. ஸ்டாலின்!!

இரட்டிப்பு லாபம் தரும் நாட்டுக்கோழி வளர்ப்பு முறை!

English Summary: Today's Agriculture News and Subsidy Information!
Published on: 17 September 2022, 03:04 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now