நாட்டின் நீர் வளத்தை பெருக்குவதில் பெரும் பங்குவகிப்பது தென்மேற்கு பருவ மழைதான்.ஆனால் இந்த ஆண்டில் பல மாநிலங்களில் அதி தீவிரம் காட்டி வருது. 122ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டில் ஆகஸ்ட் மாதத்தில் மட்டுமே மழை பெய்துள்ளது.
வடகிழக்கு பருவமழை
பொதுவாக தமிழகத்திற்கு மழையைக் கொண்டுவருவது என்றால் அது வடகிழக்கு பருவமழைக்காலம்தான். ஆனால், வானிலை மையத்தின்அறிக்கைபடி 1906யில் 112சதவீதமாகவும், 1909யில் 127சதவீதமாகவும் இருந்தது. இந்நிலையில், மூன்றாம் முறையாக இந்த ஆகஸ்டு மாதத்தில்அதிகமழை பொழிவைத் தந்துள்ளது.
அதிகபட்சம்
அதாவது 21.செ.மீ மழையை விட88சதவீதம் அதிகமாக 40செ.மீ மழை பெய்யதுள்ளது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக வடகிழக்கு பருவ மழைக்கு முன்னதாக வரும் தென் மேற்குபருவ மழைகாலத்தில் அதிக மழை பொழிவை பார்க்க முடிகிறது.அதிக பட்சமாக தேனி மாவட்டத்தில்292% மழை பதிவாகியுள்ளது. இதற்கான காரணம் பருவநிலை மாற்றம் தான். தென் மேற்குபருவ காற்றில் ஈரப்பதம் குவிந்தாலும்,வளிமண்டல மேலடுக்கு மற்றும் கீழடுக்கு சுழற்சியின் விளைவாக இந்த மழை பெய்கிறது.
மரம் வளர்ப்போம்
எனவே பருவகால மாற்றத்தை தவிர்க்க மரம் வளர்ப்போம் தரிசாக எந்த நிலத்தையும் போடாமல் பயிர் சாகுபடி செய்து பண்டைய காலம் மாதிரி மாதம் மூம்மாரி மழை பொழிவை காண்போம்.
தமிழக அரசின் பசுமை போர்வை திட்டத்தின் கீழ் வழங்கப்படும் மரங்களை பெற்று நட்டு நாமும் பயன்பெறுவோம் நாடும் பயன்பெற முயற்சி செய்வோம்.
தகவல்
அக்ரி சு.சந்திர சேகரன்
வேளாண் ஆலோசகர்
அருப்புக்கோட்டை
9443570289
மேலும் படிக்க...